ஜூன் 2-ல் பள்ளிகள் திறப்பு: இதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை; பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 31, 2014

ஜூன் 2-ல் பள்ளிகள் திறப்பு: இதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை; பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவிப்பு


கோடை விடுமுறைக்குப் பின்னர் பள்ளிகள் ஜூன் 2-ம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை ஏற்கெனவே அறிவித்துவிட்டது.
இதற்கிடையே, தற்போது நிலவும் கடுமையான வெயில் காரணமாக, பள்ளிகள் காலதாமதமாக திறக்கப்படலாம் என்று மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் தகவல் பரவிய வண்ணம்உள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட படி, கோடை விடுமுறை முடிந்து அனைத்துப் பள்ளிகளும் ஜூன் 2-ம் தேதி (திங்கள்கிழமை) திறக்கப்படும். இதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை.பள்ளி திறக்கும் முதல் நாள் அன்றே, மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகள் வழங்கப்படும். 5 கோடி புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன. இதன்மூலம் தமிழகம் முழுவதும் ஒரு கோடியே 30 லட்சம் மாணவ-மாணவிகள் பயன்பெறுவார்கள்.இவ்வாறு ராமேஸ்வர முருகன் கூறினார்.

1 comment:

  1. பள்ளிகளை சரியாக திறப்பதால். என்ன. ஐயா பலன் ???
    பாடங்களை நடத்திட ஆசிரியர்கள் வேண்டாமா ?????????????

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி