92 தொடக்கப் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 31, 2014

92 தொடக்கப் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள்


கோவை கல்வி மாவட்டத்தில்நடப்பு கல்வியாண்டில் (2014-15) 92 தொடக்கப் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் துவங்க உள்ளதாக தொடக்க கல்வி அலுவலர் (பொறுப்பு) காந்திமதி தெரிவித்தார்.
அரசு பள்ளிகளின் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்க பள்ளிக் கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

ஆங்கிலத்தின் மீது கொண்ட மோகத்தால் தனியார்பள்ளிகளை நாடும் பெற்றோர்களை கவரும் வகையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசு பள்ளிகளில் ஆங்கிலவழிக்கல்வி செயல்படுத்தப்பட்டு வருகிறது.கடந்த கல்வியாண்டில் மாநிலம் முழுவதும் 3,000 பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி துவங்கப்பட்டது. நடப்பு கல்வியாண்டில் இரண்டு ஆசிரியர்கள் உள்ள பள்ளிகளிலும் மாணவர்கள் சேர்க்கை 50 ஆக இருந்தால், ஆங்கில வழிக்கல்வியை துவக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.கோவை மாவட்டத்தில் 249 பள்ளிகளில், ஆங்கிலவழிக்கல்வி துவங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை மே முதல் வாரத்திலேயே துவங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்க ஆசிரியர்கள் நேரடியாக வீடுகளுக்கு சென்று விழிப்புணர்வு பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளனர்.மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் (பொறுப்பு) காந்திமதி கூறுகையில், "கோவையில் ஆங்கில வழிக்கல்வியில் மாணவர்கள் சேர்க்கை நடந்து வருகிறது. நடப்பு கல்வியாண்டில் 92 பள்ளிகளில் புதிதாக ஆங்கில வழிக்கல்வி துவங்கப்பட்டுள்ளது.மாணவர்கள் சேர்க்கை சார்ந்த தகவல்கள் பள்ளிகள் திறந்து ஓரிரு நாளில் அறிவிக்கப்படும்" என்றார்.

3 comments:

  1. தாய்மொழி வழிக்கல்விக்கு மூடுவிழான்னு சொல்லுங்க..... எதிர்காலத்தில் தமிழ்வழியில் படிக்க ஆள் இருக்கப்போவதில்லை..... சரி விடுங்க.... அதபத்தியெல்லாம் உங்களுக்கு என்ன கவலை......

    ReplyDelete
  2. ENGLISH MEDIUMKU THANIYA TEACHERS APPOINT PANNUVANGALA

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி