தேர்ச்சி விகிதம் குறைவு: ஆசிரியர்களை மாற்ற முடிவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 31, 2014

தேர்ச்சி விகிதம் குறைவு: ஆசிரியர்களை மாற்ற முடிவு.


பிளஸ் 2, பத்தாம் வகுப்பில் தேர்ச்சி விகிதம் குறைந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய கல்வித்துறை முடிவுசெய்துள்ளது.
சமீபத்தில் வெளியான பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளில் தனியார் பள்ளிகளை விட, அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. சில அரசு பள்ளிகள் 42 சதவீதம் மட்டுமே பெற்றுள்ளன. இதையடுத்து, நாகர்கோவில் மாவட்டத்தில் சில தலைமை ஆசிரியர்கள் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். இதற்கு ஆசிரியர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியதால், 'சஸ்பெண்ட்' நடவடிக்கையை கல்வித்துறை நிறுத்தியது.

இந்நிலையில், தேர்ச்சி விகிதம் குறைந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய கல்வித்துறை முடிவுசெய்துள்ளது. இதையடுத்து, 60 சதவீதத்திற்கு கீழ் தேர்ச்சி விகிதம் பெற்ற பள்ளிகளின் பட்டியலை கல்வித்துறை அதிகாரிகள் தயாரித்து வருகின்றனர். 'ஆசிரியர்கள் இடமாறுதல், பதவிஉயர்வுக்கான 'கவுன்சிலிங்' துவங்குவதற்கு முன், இடமாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால், தேர்ச்சி விகிதம் குறைந்த பள்ளிகளின் ஆசிரியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி