பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்குத் தடை கோரி வழக்கு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 30, 2014

பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்குத் தடை கோரி வழக்கு.


885 வட்டார வளமைய ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக பணி அமர்த்தாமல் தேர்வு வாரியம் மூலம் ஆசிரியர்களை நியமிக்கத் தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அனைத்து வட்டார வள மைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்றச் சங்க பொதுச் செயலர் எம். ராஜ்குமார் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

மனு விவரம்: ஒவ்வோர் ஆண்டும் 500 வட்டார வள மையப் பயிற்றுநர்கள் பணி மூப்பு அடிப்படையில் அரசுப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கப்பட வேண்டும் என 2006-இல் அரசு உத்தரவிட்டது.

2012-2013 ஆம் ஆண்டில் 115 பயிற்றுநர்கள் மட்டுமே பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். மேலும், 385 வட்டார கண்காணிப்பாளர்கள் அரசுப் பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். அரசாணைப்படி வட்டார வள மைய பயிற்றுநர்கள்தான் பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கப்பட வேண்டும். 385 வட்டார கண்காணிப்பாளர்களை முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களாக நியமித்தது தவறு. 2013-2014 ஆம் ஆண்டு 500 பயிற்றுநர்களை பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கவில்லை.எனவே, மொத்தம் 885 வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்களை அரசுப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்க உத்தரவிட வேண்டும். இந்நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியம் பட்டதாரி ஆசிரியர்களை நேரடியாக நியமிக்க 14.7.14 இல் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதைரத்துசெய்ய வேண்டும். 885 பயிற்றுநர்களை பட்டதாரி ஆசிரியர்களாக நியமித்த பின்பு உள்ள காலிப் பணியிடங்களில் நேரடியாக பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இம் மனுவை விசாரித்த நீதிபதி கே.கே.சசிதரன், மனுவுக்கு பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர்,இயக்குநர், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் ஆகியோர் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

6 comments:

  1. Ithana nala enka irunthinka sir? ippathan etho nadakkura mathiri theriyuthu athukkulla yen sir ippadi pannuranka?

    ReplyDelete
    Replies
    1. Ungaluku unga pirachanai.....avangaluku avanga pirachani...enna seiyya...ellam kaalakodumai...

      Delete
  2. TRB is being mounted by obstacles. When they will remove these obstacles

    ReplyDelete
  3. 94 பிஞ்சுகள் கருக காரணமாக இருந்த கயவர்கள் இன்று உரிய தண்டனை பெற வேண்டும் என் இறைவனை வேண்டுகிறேன்

    ReplyDelete
  4. 4. கடந்த மூன்று ஆண்டுகளில் 300 அரசு, மாநகராட்சி மற்றும் நகராட்சி உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்பட்டன. நிலை உயர்த்தப்படும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் ஆகிய 5 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையை மாற்றி, கூடுதலாக தமிழ், வரலாறு, பொருளாதாரம் மற்றும் வணிகவியல் ஆகிய பாடங்களுக்கும் சேர்த்து 9 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டு உள்ளன. இதன் தொடர்ச்சியாக, நடப்புக் கல்வியாண்டில் 100 அரசு, மாநகராட்சி மற்றும் நகராட்சி உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு நிலை உயர்த்தப்படும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு பள்ளி ஒன்றுக்கு ஒரு தலைமை ஆசிரியர் பணியிடம் வீதம் 100 தலைமை ஆசிரியர் பணியிடங்கள், ஒன்பது முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வீதம் 900 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் என மொத்தம் 1000 பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும் என்பதையும் பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கென ஆண்டொன்றுக்கு 31 கோடியே 82 லட்சம் ரூபாய் அரசுக்கு செலவு ஏற்படும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி