தலைமை ஆசிரியர்களுக்கு அரசாணைகளுக்கு புறம்பாக 2006ம் ஆண்டு முதல் வழங்கப்பட்ட தனி ஊதியத்தை ஒரே தவணையில் பிடித்தம் செய்து அரசு கணக்கில் சேர்க்க பள்ளி கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.
அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் ரூ.500 மற்றும் ரூ.600 தனி ஊதியம் பெற்று வந்தனர்.
இவர்களில் 1.1.2006க்கு முன் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பெற்றால் அடிப்படை ஊதியத்துடன் இந்த தனி ஊதியமும் சேர்க்கப்பட்டு, உரிய தர ஊதியமும் அனுமதிக்கப்பட்டு சம்பளம் நிர்ணயம் செய்ய அரசு உத்தரவிட்டிருந்தது. திருத்திய ஊதிய குழுவின்கீழ் ஊதியம் கணக்கிடப்பட்ட தேதி அல்லது 1.6.2009 தேதிக்கு பிறகு தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பெற்ற எவருக்கும் ரூ.500 அல்லது ரூ.600 தனி ஊதியம் வழங்கப்படக்கூடாது. ஆனால் பெரும்பாலான மாவட்டங்களில் முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் அரசாணைகளை தவறாக புரிந்துகொண்டு 1.6.2009க்கு பிறகுஅல்லது திருத்திய ஊதிய குழுவின் கீழ் ஊதிய நிர்ணயம் செய்த பிறகு தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பெற்றால் அடிப்படை ஊதியத்துடன் தனி ஊதியம் அனுமதித்து ஆணையிடுகின்றனர். அதிகாரிகள் நடத்திய தணிக்கையில் இந்த விபரங்கள் தெரியவந்துள்ள நிலையில் தலைமை ஆசிரியர்களிடம் இருந்து அவ்வாறு வழங்கப்பட்ட தனி ஊதியத்தை பிடித்தம் செய்ய பள்ளி கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பான உத்தரவில் அவர் கூறியிருப்பதாவது: அரசாணைகளுக்கு புறம்பாக தலைமை ஆசிரியர்களுக்கு தனி ஊதியம் அனுமதிக்கப்படுவது மாநில கணக்காயரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. திருத்திய ஊதிய குழுவின்படி அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் தனி ஊதியம் பெற அனுமதி இல்லை என்று அரசு தெரிவித்துள்ளது.
எனவே உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியராக 1.1.2006க்கு பின்னர் பதவி உயர்வு பெற்று திருத்திய ஊதியக்குழுவின் கீழ் ஊதிய நிர்ணயம் செய்யப்பட்ட பின்னர் தனி ஊதியம்அனுமதிக்க கூடாது.எனவே அனைத்து முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களும் தங்கள் அதிகாரத்தில் உள்ள அனைத்து தலைமை ஆசிரியர்களின் பணி பதிவேட்டை சரிபார்க்க வேண்டும். தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வின்போது தனி ஊதியம் 1.1.2006க்கு பிறகு அல்லது திருத்திய ஊதியக்குழுவிற்கு வர விருப்பம் அளித்த தேதிக்கு பின்னர் சேர்க்கப்பட்டிருந்தால், ஊதிய மறுநிர்ணயம் செய்ய வேண்டும். கூடுதலாகபெற்ற தொகையை ஒரே தவணையில் பிடித்தம் செய்து அரசு கணக்கில் சேர்க்கவேண்டும். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
*********************************************************
ReplyDeleteஇடைநிலை ஆசிரியர்களுக்கு
அழைப்புக் கடிதம்
**********************************************************
"""""" கூடுதல் பணியிடங்கள் வேண்டுதல் சார்பாக """"""
SGT
இடம் : சென்னை மெரினா
நாள் : 14.09.2014
நேரம்:காலை 10 மணி
மிக முக்கியமான செய்தி:
கூடுதல் பணியிடங்கள் வேண்டி நாம் செய்யும் செயல்பாடுகள் அனைத்தும் போராட்டம் என்ற பெயரில் அல்லாமல் , மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு விடுக்கும் பணிவான கோரிக்கையாக அமையவேண்டும்.
ஒரு தொலைக்காட்சி நிறுவனம் நமது பணிவான கருத்துக்களை ஒரு வாரகாலத்திற்கு பின்னர் பதிவு செய்துகொள்வதாக அவகாசம் கேட்டுக் கொண்டது. பின்னர் அவர்களின் ஆலோசனைப்படியே நமது கோரிக்கை மற்றும் கருத்துக்களை நாமே Digital Camera மூலமாக படம் பிடித்து குறுந்தகடுகள் மூலமாக மிக முக்கியமான 42 நபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டியுள்ளது .மேலும் இத்துடன் 15 பக்க கோரிக்கை மனு இணைத்து அனுப்பி வைக்கப்படும். எனவே குறைந்தது ஒரு நூறு பேராவது ஒரு நாள் மட்டுமே 14.09.2014 அன்று சென்னை வரவேண்டும். வருகின்ற ஒவ்வொருவரும் தங்களது பாதிப்புகளையும், கருத்துக்களையும் மிக முதிர்ச்சியோடு பதிவு செய்ய வேண்டும். இது நிச்சயம் நமது மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு செல்லும்.
நாம் அனைவரும் ஒன்றிணைந்து செய்யப்படபோகும் செயல்பாடுகளினால் பொதுமக்களுக்கோ, காவல்துறைக்கோ மற்றும் நமது அரசுக்கோ சின்னதொரு இடையூறு கூட ஏற்படா வண்ணம் அமைய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
***மிக மிக முக்கியமான விஷயம் ஒன்றினை நீங்கள் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.
நமது நோக்கம் நமது கோரிக்கையை மாண்புமிகு முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதே ..தவிர ,மீடியாவின் கவனத்திற்கு கொண்டு செல்ல அல்ல. .***
நமது கோரிக்கை ""கூடுதல் பணியிட அறிவிப்பு"" வேண்டுதல் தொடர்பானது மட்டுமே.
இதுவே கடைசி முயற்சியாகவும், நோக்கம் நிறைவடையும் வகையிலும் அமைதல் வேண்டும்.
வரும் ஞாயிற்றுக்கிழமை காலை சரியாக 10 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில் ஒன்றிணைவோம்.
***************************
!! SUNDAY 14.09.2014 !!
!! COME TO CHENNAI !!
!! JOIN AT MERINA !!
!! DEMAND +VACCANCY !!
***************************
WE EXPECT YOUR DEEP INVOLVEMENT & SUPPORT
வரவிரும்புவோர் தொடர்பு கொள்க
95433 91234 Sathyamoorthy
9597239898
09663091690 Sathyajith
எதிர்க்கட்சிகள் மற்றும் தேர்வு எழுதியவர்களின் கோரிக்கைகளின் படி தான் தமிழக முதல்வர் 5 சதவீத தளர்வினை அறிவித்து தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் தற்போது போராடுவது அந்த தளர்வு மதிப்பெண் மூலம் தேர்ச்சி பெற்று பட்டியலில் இடம் பெற்றவர்களை பட்டியலில் இருந்து வெளியேற்றத்தான் என்பது எதிர்க்கட்சியினருக்கு ஏன் புரியவில்லை??? அவர்களுக்கு புரிய வைப்பதற்க்கு ஏதேனும் முயற்சிகள் செய்ய வேண்டாமா???
ReplyDelete5 % மதிப்பெண் தளர்வு நியாயமானதா ?
ReplyDeletetet pass as per G O
OC -60 % BC - 55 % MBC - 55% SC, ST - 55%
இந்த முறை அமலுக்கு வந்தால் OC தவிர அணைத்து பிரிவினருக்கும் தேர்வு கட்டண சலுகை வயது வரம்பு சலுகை போன்றவைகள் EQUAL என்று ஆகிவிடும்.
இது அனைத்து விதமான தேர்வுக்கும் ஒரு தவறான முன் உதாரணம் ஆகி விடாதா?
சரியான முறை
---------------------------------
OC - 60 % BC - 57 % MBC- - 56 % SC ST- 55%