தனியார் பள்ளிகள் அதிகரித்து வரும் சூழலில் அரசுப் பள்ளிகளை காப்பாற்றவேண்டிய பொறுப்பு ஆசிரியர்கள் கையில்தான் உள் ளது என்றார் கல்வியாளரும், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தருமான வே.வசந்திதேவி. சமூகக் கல்வி நிறுவனம் மற்றும் யுனிசெஃப் இணைந்து குழந்தைகள் நேயப் பள்ளிகளை உருவாக்குவது குறித்த கலந்துரையாடல் கூட்டம் திருச்சியில் நேற்றுநடைபெற்றது.
கூட்டத்துக்கு தலைமை வகித்து வசந்திதேவி பேசியதாவது: தற் காலத்தில் கல்வியின் போக்கு சீரழிந்து வருவதை எதிர்த்து ஆசிரிய சங்கங்கள் குரல் கொடுக்க வில்லை, ஆசிரிய சமுதாயம் எங்கே போனது என்ற சந்தேகம் எழுகிறது. 1980-களில் பல்வேறு கோரிக் கைகளுக்காக போராடிய ஆசிரி யர்களுக்கு பெற்றோர்களும், பொதுமக்களும் துணை நின்றனர். ஆனால், அந்த உணர்வு, உறவு இப்போது இல்லை. இதற்கு காரணம் ஆசிரியர்- பெற்றோர் இடையே மிகப்பெரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது. தனியார்மயத்தை ஊக்குவிக் கும் அரசுகளால், அரசுப் பள்ளி களுக்கும் ஆபத்துதான்.
தனியார் பள்ளிகள் பெருகுவதற்கு அரசின் கொள்கைகளே காரணம். ஆசிரியர் களும், அவர்கள் சார்ந்துள்ள சங்கங்களும்தான் அரசுப் பள்ளிகளை காப்பாற்ற வேண்டும். ராஜஸ்தான் மாநிலத்தில் 17,000 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டு விட்டன. இங்கேயும் அந்த நிலை ஏற்படலாம். அதற்கு முன்பாக நாம் விழித்துக்கொள்ள வேண்டும். அரசுப் பள்ளிகள் மீதான நம் பிக்கை குறைவுக்கு காரணம் என்ன, நாம் அக்கறையுடன்தான் கல்வி போதிக்கிறோமா என்பதை ஆசிரியர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அரசுப் பள்ளிகளை குழந்தைகள்நேயப் பள்ளிகளாக உருவாக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் ஆசிரியர்களுக்கு உள் ளது. இதற்கான நடவடிக்கையை விரைந்து தொடங்க வேண்டும் என்றார் அவர். யுனிசெஃப் குழந்தை கள் பாதுகாப்பு அலுவலர் வித்யா சாகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருநெல்வேலி : நெல்லையில் ஒரு பள்ளியில் பயின்ற மாணவனும், ஆசிரியையும் ஒரே நேரத்தில் காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, அவர்களை குறித்து தவறான படங்களும், கேலி பேச்சுக்களும் பேஸ்புக், வாட்ஸ் அப்களில் உலா வந்து அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. நெட் நண்பர்கள் பலரும் இந்த சம்பவத்தையே பேசி வருகின்றனர். ' இது செம்மரக்கடத்தல் ' என்பது அதில் ஒரு கமென்ட்.
ReplyDeleteதிருநெல்வேலி, செங்கோட்டை, காலங்கரை பகுதியை சேர்ந்த இளம் ஆசிரியை ( வயது 24 ) . எம்.எஸ்.சி.,பட்டதாரி. செங்கோட்டையை அடுத்துள்ள, இலத்தூரில் தனியார் மெட்ரிக் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். பத்தாம் வகுப்பு தேர்வுகள் முடிந்த நாளில் பள்ளிக்கு சென்ற ஆசிரியை காணவில்லை என அவரது தந்தை , செங்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதே பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவன் ( வயது 16 ) , கடையநல்லூர், கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர். இந்த மாணவனையும் பத்தாம் வகுப்பு தேர்வு முடிந்த தினத்தில் காணவில்லை என அவரது தாயார் கடையநல்லூர் போலீசில் புகார் செய்துள்ளார். இருவரும் காணாமல் போனது குறித்து செங்கோட்டை, கடையநல்லூர் போலீசார் விசாரித்துவருகின்றனர். மாணவன் வீட்டில் இருந்த ரொக்கப்பணம், நகைகளுடன் தலைமறைவாகியிருக்கலாம் என தெரிகிறது. ஒரே நேரத்தில் ஆசிரியையும், மாணவனும் கிளம்பி சென்றதால் இருவருக்கும் காதல் எனவும் ஒருவரை மற்றவர் கடத்திச்சென்றுவிட்டதாக பரபரப்புஎழுந்துள்ளது. ஆனால் இருவரும் சேர்ந்து சென்றதை யாரும் பார்த்ததாக தகவல் இல்லை.
வாட்ஸ்அப் படங்கள்: காணாமல் போன ஆசிரியை , மாணவன் ஆகியோரது படங்கள் போலீசாரிடம் உள்ளது. ஆனால் சமூகவலைத்தளங்களில் வெளியாகிய ஒரு படத்தில், ஒரு மாணவன், ஒரு ஆசிரியை வகுப்பறையிலேயே தூக்கிவைத்திருப்பது போன்ற காட்சி உள்ளது. அந்த ஆசிரியையின் படங்களும் வெளியாகின. இந்த பரபரப்பு முடிவதற்குள், இன்று காலையில் இதே ஆசிரியை, மாணவன் குறித்து புதிய அதிர்ச்சியூட்டும் படங்கள் வெளியாகியுள்ளன.
திருநெல்வேலி : நெல்லையில் ஒரு பள்ளியில் பயின்ற மாணவனும், ஆசிரியையும் ஒரே நேரத்தில் காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, அவர்களை குறித்து தவறான படங்களும், கேலி பேச்சுக்களும் பேஸ்புக், வாட்ஸ் அப்களில் உலா வந்து அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. நெட் நண்பர்கள் பலரும் இந்த சம்பவத்தையே பேசி வருகின்றனர். ' இது செம்மரக்கடத்தல் ' என்பது அதில் ஒரு கமென்ட்.
திருநெல்வேலி, செங்கோட்டை, காலங்கரை பகுதியை சேர்ந்த இளம் ஆசிரியை ( வயது 24 ) . எம்.எஸ்.சி.,பட்டதாரி. செங்கோட்டையை அடுத்துள்ள, இலத்தூரில் தனியார் மெட்ரிக் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். பத்தாம் வகுப்பு தேர்வுகள் முடிந்த நாளில் பள்ளிக்கு சென்ற ஆசிரியை காணவில்லை என அவரது தந்தை , செங்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதே பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவன் ( வயது 16 ) , கடையநல்லூர், கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர். இந்த மாணவனையும் பத்தாம் வகுப்பு தேர்வு முடிந்த தினத்தில் காணவில்லை என அவரது தாயார் கடையநல்லூர் போலீசில் புகார் செய்துள்ளார். இருவரும் காணாமல் போனது குறித்து செங்கோட்டை, கடையநல்லூர் போலீசார் விசாரித்துவருகின்றனர். மாணவன் வீட்டில் இருந்த ரொக்கப்பணம், நகைகளுடன் தலைமறைவாகியிருக்கலாம் என தெரிகிறது. ஒரே நேரத்தில் ஆசிரியையும், மாணவனும் கிளம்பி சென்றதால் இருவருக்கும் காதல் எனவும் ஒருவரை மற்றவர் கடத்திச்சென்றுவிட்டதாக பரபரப்புஎழுந்துள்ளது. ஆனால் இருவரும் சேர்ந்து சென்றதை யாரும் பார்த்ததாக தகவல் இல்லை.