ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: ஜி.கே.வாசன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 12, 2015

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: ஜி.கே.வாசன்

தமிழகத்தில் பணிபுரியும் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து, சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்டங்களில் ஆர்ப்பாட்டம், போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

கடந்த 1997-ஆம் ஆண்டு முதல் எஸ்.சி, எஸ்.டி. பிரிவில் 5 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களைக் கொண்டு இடைநிலை ஆசிரியர்களாகப் பணியமர்த்தப்பட்டவர்களை, பணி நாள் முதல் பட்டதாரி

ஆசிரியர்களாக பணி வழங்குதல், மத்திய, மாநில அரசு ஆசிரியர்களுக்கு சமமாக அனைத்துப் படிகளையும் அளித்தல், ஆதிதிராவிடப் பள்ளிகளில் பணிபுரியும் 12 ஆயிரம்

ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் வழங்குதல் என பல்வேறு நியாயமான கோரிக்கைகளை ஆசிரியர்கள் முன்வைக்கிறார்கள்.

இதுதொடர்பாக, அவர்கள் மேற்கொள்ள இருக்கும் ஆர்ப்பாட்டம், போராட்டம் போன்றவை தொடராமல் இருக்க, தமிழக அரசு, ஆசிரியர்களின் கோரிக்கைகளைக் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.

எனவே, ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று தனது அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி