சிதம்பரம், புவனகிரி பகுதியில் ஊதியம் வழங்கப்படவில்லை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அவதி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 12, 2015

சிதம்பரம், புவனகிரி பகுதியில் ஊதியம் வழங்கப்படவில்லை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அவதி

சிதம்பரம், புவனகிரி, சேத்தியாத்தோப்பு பகுதிகளில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மார்ச் மாத ஊதியம் சனிக்கிழமை வரை வழங்கப்படவில்லை. இதனால் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கடும் அவதியுற்றுள்ளனர்.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஊதியப்பட்டியலை அலுவலக தலைமை அதிகாரி ஒவ்வொரு மாதமும் கடைசி வாரத்தில் சம்பந்தப்பட்ட அரசு கருவூலத்தில் சமர்பிப்பார். கருவூல அதிகாரியின் ஒப்புதல் பெற்றவுடன் மாத இறுதிநாளன்று ஊழியர்களின் வங்கி கணக்கில் மாத ஊதியம் வரவு வைக்கப்பட்டும். அரசு உதவிபெறும் பள்ளிகளை பொறுத்தவரை பள்ளிச் செயலர் மூலம் மாவட்ட கல்வி அலுவலரின் ஒப்புதலைப் பெற்ற பிறகே சம்பந்தப்பட்ட கருவூல அதிகாரி முன்பு ஊதியப்பட்டியல் சமர்பிக்கப்படும். சென்ற மாதம் உரிய வருமானவரி செலுத்திய பிறகும் அரசு உதவி பெறும் ஆசிரியர்கலுல்லு மாரச் 15-ம் தேதிக்கு பிறகுதான் ஊதியம் வழங்கப்பட்டது. கருவூல பணியாளர்கள் அயன் பணியில் சென்றுவிட்டதால் தாமதம் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இம்மாதம் சிதம்பரம் கருவூலத்தில் கணினி சர்வர் இயங்கவில்லை. இணையதள இணைப்பு துண்டிக்கப்பட்டதால் சிதம்பரம் துணைக்கருவூலம் மூலம் ஊதியம் பெறும் சிதம்பரம், புவனகிரி, சேத்தியாத்தோப்பு பகுதியில் உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் காவல்துறையினருக்கு சனிக்கிழமை வரை மார்ச் மாதம் ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால் மாத ஊதியத்தை வைத்து குடும்பம் நடத்தும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஊதியமின்றி கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

தமிழகம் முழுவதும் ஆன்லைன் மூலம் மாதந்திர ஊதியப்பட்டியல் அனுப்பும் நடைமுறை பெரும்பாலான அரசு அலுவலகங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இம்மாதம் தொடர் விடுமுறையினால் அரசு ஊழியர்கள் 7-ம் தேதிக்கு பிறகே ஊதியம் பெற்றனர். அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கென ஆன்லைனின் ஊதியப் பட்டியலை அனுப்ப உரிய ரகசியக்குறியீடு (Password) வழங்கப்படவில்லை. அரசு உதவிபெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் இதற்கென விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து கடந்த புதன்கிழமை மாவட்ட கல்வி அலுவலகத்தில் கொடுத்துள்ளனர். ஆனால் கடலூர் மாவட்ட கருவூலத்திலிருந்து ரகசியக்குறியீடு வழங்கப்படவில்லை. எனவே வருகிற திங்கள்கிழமை அன்று ஊதியம் வழங்கப்படாவிடில் கருவூலம் முன்பு ஆசிரியர்கள், அலுவலர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி