சேலம்: சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், ஏப்ரல், கல்வியாண்டுக்கான பாட வகுப்பு இம்மாதம் முழுவதும் பெயரளவில் வகுப்பு நடத்தப்பட உள்ளது. மீண்டும், இதே பாடத்தை, ஜூன் மாதத்தில் நடத்த வேண்டியுள்ளதால், வேலைநாட்களை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
சமச்சீர் கல்வி:
தமிழகத்தில் இருந்து வந்த, ஸ்டேட் போர்டு, மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் உள்ளிட்ட பலவித கல்வி முறைகளை ஒருங்கிணைத்து, சமச்சீர் கல்வி முறை அமல்படுத்தப்பட்டது. அரசு பள்ளிகளில் ஸ்டேட் போர்டு முறையும், தனியார் பள்ளிகளில் மெட்ரிக் உள்ளிட்ட கல்வி முறையும் பின்பற்றப்பட்டு வந்தது. சமச்சீர் கல்வி முறை அமல்படுத்தப் பட்ட பின், அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளிலும், ஒரே பாடத்திட்டத்தை நடத்தும் நிலைமை உருவானது. அரசு பள்ளிகளில் இருந்து வேறுபடுத்தி காட்ட வேண்டிய நிர்பந்தத்தில் இருந்ததால், தனியார் நிர்வாகம், சி.பி.எஸ்.இ., பள்ளிகளை துவக்கியது. தமிழகத்தில் மிகக்குறைந்த அளவே இருந்து வந்த, சி.பி.எஸ்.இ., பள்ளிகளின் எண்ணிக்கை, அதன் பின் மளமளவென அதிகரித்தது. இன்றைய சூழலில், 580க்கும் மேற்பட்ட சி.பி.எஸ்.இ., பள்ளிகள், அங்கீகாரம் பெற்று செயல்பட்டு வருகிறது. மேலும் வரும் கல்வியாண்டில், 80க்கும் மேற்பட்ட பள்ளிகள் துவக்கப்படும் நிலையும் உள்ளது.
வித்தியாசம்:
சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம், மத்திய அரசு அமைப்பு என்பதால், அதன் வேலைநாட்களுக்கும், தமிழகத்தில் உள்ள பள்ளி வேலைநாட்களுக்கும் வித்தியாசம் காணப்படுகிறது. உதாரணமாக, தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள், மார்ச் மாத இறுதிக்குள் தேர்வை முடித்துக்கொண்டு, ஏப்ரல், மே என, இரு மாதம் வரை, விடுமுறை அளிக்கின்றன. கோடை வெயில் கொடுமையில் இருந்தும், குழந்தைகள் தப்பிக்க, இந்த விடுமுறை உதவுகிறது. ஆனால், சென்ட்ரல் போர்டு வேலைநாட்கள், டில்லி உள்ளிட்ட வட பருவகால சூழலை பொறுத்து, விடுமுறை நாள் அறிவிக்கப்படுகிறது. உதாரணமாக, 2014 - 15ம் ஆண்டுக்கான தேர்வு முடிவடைந்து, 20 நாள் வரை விடுமுறை விடப்பட்டு, 2015 - 16 கல்வியாண்டுக்கான வகுப்பு துவங்கிவிட்டது. மீண்டும் மே, மாதத்தில் விடுமுறை வழங்கப்பட்டு, ஜூன் மாதத்தில் வகுப்பு துவங்குகிறது. இதனால், ஏப்ரல் மாதத்தில் வகுப்பு, பெயரளவில் மட்டுமே நடத்தப்படுகிறது. பெரும்பாலான பள்ளிகளில், பாதிக்கும் குறைவான மாணவர்களே இவ்வகுப்புகளில் பங்கேற்கின்றனர். இதனால், பாட வேலைநாட்களை, தமிழக சூழலுக்கேற்ப, மாற்றியமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து சி.பி.எஸ்.இ., பள்ளி நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
பள்ளிக்கு அனுப்புவதில்லை:
மாநில வெயிலின் கொடுமை அதிக அளவில், இருப்பதால், பெரும்பாலான பெற்றோர் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில்லை. மேலும் புதிய மாணவர்கள் சேரும் போது, அவர்களும் ஜூன் மாதத்திலிருந்தே பள்ளிக்கு வரும் சூழல் உள்ளது. இதனால், மீண்டும் பாடங்களை முதலில் இருந்தே, ஜூன் மாதத்தில் நடத்த வேண்டியுள்ளது. எனவே ஏப்ரல் மாதத்தில் குழந்தைகள் பள்ளிக்கு வருவதை, நாங்களும் கட்டாயப்படுத்துவதில்லை. நம் சூழலுக்கு ஏற்ற வகையில், கோடை விடுமுறைகளையும், பள்ளி வேலைநாட்களையும் மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
'ராகிங்'கை தடுக்க எச்சரிக்கை:
சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் புதிய கல்வியாண்டு வகுப்புகள் துவங்கியுள்ளன. பள்ளி களில், மொபைல்போன் வாட்ஸ்அப், இ - மெயில் வழியே,'ராகிங்' நடவடிக்கைகளை தடுக்க, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், ' ராகிங்' செய்யாமல் இருக்க நடவடிக்கை எடுக்குமாறு, பள்ளிகளுக்கு சுற்றிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது: பள்ளிகளில்,'ராகிங்' மற்றும் புதிய மாணவர்களை மிரட்டும் சம்பவங்கள் கடந்த காலங்களில் நடந்துள்ளன. இதுகுறித்து ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்படி, மாணவ, மாணவியரின்,'ராகிங்' நடவடிக்கைகளைத் தடுக்க, பள்ளி யின் முதல்வர், ஆசிரியர்கள் ஆசிரியைகள், மாணவ பிரதிநிதிகள், பெற்றோர், ஆசிரியர் கழக பிரதிநிதிகள் கொண்ட குழு அமைக்க வேண்டும். புகார் பெட்டிகள் வைக்க வேண்டும். பள்ளி வளாகங்களில் கேமராக்கள் பொருத்தி, கண்காணிக்க வேண்டும். மாணவ, மாணவியர் ஜூனியர்கள் குறித்து நேரிலோ, 'சைபர்' தொழில்நுட்பத்தில், மொபைல்போன் வாட்ஸ் அப், மெசேஜ், சமூக வலைதளம் மற்றும் இ - மெயில் போன்றவை மூலம் அவதூறு பரப்புவதையும் தடுக்க வேண்டும். 'ராகிங்'கால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாணவ, மாணவியரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி