அறிவியல் உண்மை : வயதானால் காது கேட்கும் சக்தியை இழக்கிறதே எதனால்? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 28, 2020

அறிவியல் உண்மை : வயதானால் காது கேட்கும் சக்தியை இழக்கிறதே எதனால்?


நம் உடலில் உள்ள செல்கள் பழுதடையும்போது அவற்றுக்குப் பதிலாக புதிய செல்கள் வளர்சிதை மாற்றத்தின்மூலம் புதுப்பிக்கப்படுகின்றன. குறிப்பாக மூளையில் உள்ள நரம்பு செல்கள் பழுதடைந்தாலும் , சிதைவுற்றாலும் , புதிய செல்கள் மூளையில் உருவாக வாய்ப்பில்லை. மூளை உறுப்பின் தனிப்பண்பே இதுதான். மூளையின் எந்தப் பகுதிச் செல்கள் பழுதடைகின்றதோ , சிதைவடைகின்றதோ அல்லது முதுமையால் செயல்திறன் குன்றி செயல் இழக்கிறதோ , அந்த ( மூளைப் ) பகுதி , எந்த உடல் உறுப்பை கட்டுப்படுத்துகிறதோ அந்த கட்டுப்பாட்டுச் செயல் பாதிப்பு அடையும்.

முதுமையால் மூளையின் எடையும் குறையும். மூளையின் இரத்த ஓட்டமும் 30 விழுக்காடு குறைந்துவிடும் , செல்களில் அதிக கழிவுப் பொருள்கள் தேங்கிவிடுவதால் செல்கள் விரைவில் செயல்திறனை இழந்து விடுகின்றன. மேலும் , வயதாகும்போது தலைமுடி நரைத்தல் , வழுக்கைவிழுதல் , பார்வை , குறைதல் , மறதி அதிகமாதல் , உடல் மெலிதல் , தோல் சுருங்குதல் போல காதின் உள்ளமைப்புகளும் வலுவிழப்பதால் வயதானால் காது கேட்கும் திறனை ( Adult deaf ) இழக்கிறது.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி