பள்ளி, கல்லூரிகள் திறந்த பின் பின்பற்ற வேண்டியது என்ன..? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 2, 2020

பள்ளி, கல்லூரிகள் திறந்த பின் பின்பற்ற வேண்டியது என்ன..?




கொரோனா பிரச்னை முடிவுக்கு வந்த பின், பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்பட்டதும் பின்பற்ற வேண்டியவிதிமுறைகள் குறித்த பட்டியலை, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தயாரித்து வருகிறது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், மார்ச், 16லிருந்து, நாடு முழுதும் உள்ள பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டன. கல்லுாரிகளுக்கான மாணவர் சேர்க்கையை, ஆகஸ்டில் துவங்கலாம் என்றும், செப்டம்பரில்இருந்து வகுப்புகளை துவங்குவது குறித்து பரிசீலிக்கலாம் என்றும், பல்கலை மானியக் குழு பரிந்துரை செய்துள்ளது.

அதே நேரத்தில், பள்ளிகளில் வகுப்புகள் துவங்குவது குறித்து, இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. 'ஆன்லைன்' மூலமாக பாடங்களை நடத்தும்படி ஆலோசனை கூறப்பட்டு உள்ளது.இந்நிலையில், கொரோனா பிரச்னை முடிவுக்கு வந்த பின், பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்பட்டதும் பின்பற்ற வேண்டியவிதிமுறைகள் குறித்த பட்டியலை, மனிதவள அமைச்சகத்தின் பரிந்துரையின்படி, பள்ளி கல்வித் துறையினர், பல்கலை மானியக் குழுவினர் தயாரித்து வருகின்றனர்.

இது குறித்து, மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:

கொரோனா பாதிப்புக்குப் பின், பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்படும்போது, மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். பள்ளிகள் திறக்கப்பட்ட தும், மாணவர்கள் முக கவசம் அணிந்து வருவதுகட்டாயமாக்கப்படும். ஆய்வகங்கள், கழிப்பறை ஆகியவற்றில்சுகாதார வசதி கள் செய்யப்பட வேண்டும். வகுப்புகளிலும், பஸ்களில் வரும்போதும், சமூக விலகல் நடைமுறை பின்பற்றப்பட வேண்டும். அடிக்கடி கைகளை கழுவும்படி மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். காலை பிரார்த்தனை கூட்டம், மைதானங்களில் விளையாடுவது போன்ற நடைமுறைகளை சில மாதங்களுக்கு நிறுத்தி வைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட, பல்வேறு விதிமுறைகளுடன் கூடிய பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. விரைவில், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்.

இவ்வாறு, அந்த வட்டாரங்கள் கூறின.

4 comments:

  1. பள்ளி, கல்லூரி என்பது நமது அறிவிற்கும், கௌரவமான வேலைக்கும், எதிர்காலத்திற்கு ஒரு வழிகாட்டிதானே தவிர வாழ்க்கையல்ல. இவற்றை திறப்பதற்கு தற்போது அவசியமும் இல்லை.தேர்வுகளும், பள்ளிகள் திறப்பதும் நாம் நிர்ணயிக்க வேண்டிய ஒன்று. காலம் கடந்து விடும், பிள்ளைகள் படிப்பு கெட்டுவிடும் என்பதெல்லாம் நாம் சொல்லிக்கொள்வது. மனிதன் உயிர் வாழ்வதே போராட்டமான இந்த காலகட்டத்தில் நன்றாக யோசித்து சூழ்நிலைகளை ஆராய்ந்து முடிவெடுக்கவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம். சமூக இடைவெளி என்பதை எக்காரணம் கொண்டும் பள்ளி, கல்லூரிகளிலும், பேருந்துகளிலும் பின்பற்ற இயலாது. கொரோனா என்ற கொல்லை நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை இளைய தலைமுறையினரையும் காக்க வேண்டியது நமது கடமை.

    ReplyDelete
  2. From 6std to 9std Batch 1.From 10std to 12std Batch 2.Allot Separate days for them. EX Batch 1, can run monday, wednesday, friday. Remaing days can allot Group 2.It will help to maidence social dist.

    ReplyDelete
  3. Unknown message is sent by k. Chitrasabapathy, Pg physics, Rphss, Ilanji.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி