அனைத்து வகைப் பள்ளிகளிலும் சுதந்திர தினத்தன்று தேசிய கொடியினை ஏற்றி விழாவினை எளிமையாக கொண்டாடுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் பள்ளிக்கல்வித்துறை வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 1, 2020

அனைத்து வகைப் பள்ளிகளிலும் சுதந்திர தினத்தன்று தேசிய கொடியினை ஏற்றி விழாவினை எளிமையாக கொண்டாடுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் பள்ளிக்கல்வித்துறை வெளியீடு.


பள்ளிக் கல்வி - 74வது சுதந்திர தின விழா கொண்டாடுவது சார்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.

வழிகாட்டு நெறிமுறைகள் :

1. அனைத்து முதன்மை கல்வி அலுவலர் அலுவலகங்கள் / மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்கள் அனைத்து கல்வி அலுவலகங்களிலும் சுதந்திர தின விழாவினை , சமூக இடைவெளியியைப் பின்பற்றி எளிமையான முறையில் கொண்டாடுதல் வேண்டும்.

 2. அனைத்து வகைப் பள்ளிகளிலும் தேசிய கொடியினை ஏற்றி விழாவினை எளிமையாக கொண்டாடுதல் வேண்டும்.

3. கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையின் முன் களப் பணியாளர்களாக செயல்படும் மருத்துவர்கள் , சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களின் சேவையினைப் பாராட்டும் பொருட்டு அவர்களை மேற்படி விழாவிற்கு அழைத்து சிறப்பிக்க வேண்டும்.

4. கொரோனா தொற்று ஏற்பட்டு தற்போது பூரண குணமடைந்த நபர்களையும் மேற்படி விழாவிற்கு அழைக்கலாம்.

குறிப்பு :

* சுதந்திர தின விழாவின் போது , கொரோனா தொற்று பாதுகாப்பு / தடுப்பு நடவடிக்கைகளான சமூக இடைவெளியை பின்பற்றுதல் , முகக்கவசம் அணிதல் மற்றும் கூட்டங்களைத் தவிர்த்தல் வேண்டும்.

* கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினி வசதி ஏற்படுத்துதல் மற்றும் கோவிட் -19 சார்பான சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் வழிகாட்டு நெறிமுறைகளைப் கண்டிப்பாக பின்பற்றுதல் வேன்டும்.

மேற்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி சுதந்திர தின விழாவினை எளிமையாக கொண்டாடி அதன் விவரத்தினை இவ்வியக்ககத்திற்கு அனுப்பி வைக்கும் படி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

3 comments:

  1. அரசாணை எண் :37 , நாள்: 10.03.2020 அன்று தமிழக அரசால் வெளியிடப்பட்ட (ADVANCE INCREMENT) ஆணையின் படி ஆசிரியர்களின் உயர்க்கல்விக்கான ஊக்க ஊதியம் இரத்தா?

    * ஆசிரியர்களுக்கு இந்த அரசாணை பொருந்துமா?

    * சார்நிலைக் கருவூலத்தில் வாய்மொழியாகக் கேட்ட பொழுது " உயர்கல்விக்கான ஊக்க ஊதியப் பட்டியலைப் பெறுவதில்லை" என பதலளித்தனர்.

    * அரசின் வழிகாட்டுதல் ஏதும் இருப்பின் தெரிவிக்க வேண்டுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. எல்லோருக்கும் ரத்து என்று ஆணை உள்ள போது, ஆசிரியர்களுக்கு மட்டும் ஏன் பொருத்தாது ....அரசு ஆணையில் தெளிவாக இல்லை என்று.... இதற்கு எதற்கு தனி வழி காட்டல்

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி