M.Phil படிப்பு நிறுத்தம்; உயர்கல்விக்கு இடையே விடுப்பு: புதிய கல்விக் கொள்கை குறித்து அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 29, 2020

M.Phil படிப்பு நிறுத்தம்; உயர்கல்விக்கு இடையே விடுப்பு: புதிய கல்விக் கொள்கை குறித்து அறிவிப்பு.


நாட்டில் இனி எம்.ஃபில்., படிப்பு நிறுத்தப்படுவதாகவும், உயர்கல்விக்கு இடையே ஒரு சில ஆண்டுகள் விடுப்பு எடுத்துக் கொண்டு மீண்டும் கல்வியைத் தொடர வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்ததை அடுத்து, மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜாவடேகர், ரமேஷ் பொக்ரியால் உள்ளிட்டோர் இன்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது, உயர்கல்வியில் முக்கிய சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அறிவித்திருக்கும் மத்திய உயர்கல்வித் துறை செயலர் அமித் கரே, அதன் விவரங்களை செய்தியாளர்களிடம் அறிவித்தார்.

2030-ஆம்  ஆண்டுக்குள் அனைவருக்கும் கல்வி என்பதை உறுதிப்படுத்த புதிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதனை செயல்படுத்தும் வகையில் உயர்கல்வியில் முக்கிய சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

நாட்டில் எம்.ஃபில்., (M.Phil.,) படிப்புகள் நிறுத்தப்படுவதாக புதிய கல்விக் கொள்கையில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த 15 ஆண்டுகளில் இணைப்புக் கல்லூரி முறை நிறுத்தப்படும். உயர்கல்வி படிப்புகளில் விடுப்பு எடுத்து மீண்டும் படிக்கலாம். அதாவது பொறியியல் போன்ற உயர்கல்விப் படிப்புகளில் சேரும் மாணவ, மாணவிகள் ஒரு சில ஆண்டுகள் விடுப்பு எடுத்துவிட்டு மீண்டும் தொடர அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், புதிய கல்விக் கொள்கை குறைத்து மாநிலங்களிடமும், பொதுமக்களிடமும் கருத்துகள் கேட்கப்பட்டன.  புதிய கல்விக் கொள்கையின் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இரண்டாம் ஆண்டில் புதிய கல்விக் கொள்கை முழுமையாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

8 comments:

  1. Mphil படிப்பை 2000 ஆண்டே நிருதியிருக்க வேண்டும் இது கால தாமதம்

    ReplyDelete
    Replies
    1. Incentive tharalana yarum padika matanga...
      Yena ariva valarka yarum padikkala.... Only for incentive..

      Delete
  2. மாணவர்கள் பள்ளியில் இருந்தால்தான் ஆசிரியர்களுக்கும் வேலை. இங்கு அவர்களை பழித்துக்கொண்டு அவர்களைக் கண்டு வயிறு எரியும் சிலருக்கும் வேலை. இந்த அரசு பணியிடங்களைக் குறைத்துக் கொண்டு தனியார்மயம் என்று சென்றுகொண்டிருக்கிறது. ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், கல்லூரிகளை தனியார் நடத்தினால் சிறப்பாக இருக்கும் என்று வீதிக்கு ஒரு பி.எட் கல்லூரி என்று திறக்கப்பட்டு எப்படி தரமாக நடந்து எவ்வளவு பேரை சொத்துக்களை விற்று பி.எட் படிக்கச்செய்து, பிறகு தகுதித் தேர்வு என்று ஒன்றைக் கொண்டுவந்து அதற்கும் பயிற்சி நிறுவனங்கள் புற்றீசல் போல் உருவாகியுள்ள நிலையில் பணம் செலுத்தி படித்து தேர்ச்சி பெற்று தற்போது அந்த சான்றிதழும் காலாவதியாகும் நிலையில் நாம் உள்ளோம். இப்படி எத்தனையோ வகையில் லட்சக்கணக்கான நாம் வேலை வாய்ப்பு பறிபோகியுள்ள நிலையில் அரசுப் பள்ளிகளை நம்பியுள்ள நாம் அதனை கொச்சைப் படுத்தாமல் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும். ஆட்சியாளர்கள் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி வேலைவாய்ப்பை குறைக்கும் அரசாணை சென்ற ஆண்டில் உருவாக்கப்பட்டு அதனை செயல்படுத்தி பணியிடங்கள் குறைத்துள்ளார்கள். அதனை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு எதிராக குரல் கொடுக்கவேண்டும். இந்தக் குமுறல் யாரிடமும் இங்கு வெளிப்பட்டதில்லை. மாறாக ஆசிரியர்கள் வெட்டியாக சம்பளம் வாங்குகிறார்கள் என்றுமட்டும் பொங்குகிறார்கள். தகுதித்தேர்வு என்றவுடன் நீ 2013, 2017 என்று சண்டை போடுகிறார்கள். வேறுவழியின்றி அரசின் தவறான தேர்வுமுறையால் வாரத்தில் 3 அரைநாட்கள் என்று வேலை கொடுக்கப்பட்டு மற்ற நாட்களில் என்ன செய்வது என்று தெரியாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ள பகுதி நேர ஆசிரியர்கள் மீதும் சண்டை போடுகிறார்கள். முதலில் நமக்கான வழியை அடைத்துக் கொண்டிருக்கிற அரசை நோக்கி நமது வாழ்வாதாரத்திற்கு என்ன வழி என்று கேட்க வேண்டும் என்பதை தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள்.

    ReplyDelete
  3. Mphil incentive ipa kidaikkuma?!

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி