Plus Two Public Exam 2020 - Retotal And Xerox Copy - TN Exam Board Dir Proceedings. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 23, 2020

Plus Two Public Exam 2020 - Retotal And Xerox Copy - TN Exam Board Dir Proceedings.



மார்ச் 2020 , மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வெழுதிய தேர்வர்களின் தேர்வு முடிவுகள் மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு தேர்வில் தேர்ச்சி பெறாத பாடங்களை ( +1 arrear subjects ) மார்ச் 2020 பருவத்தில் எழுதிய தேர்வர்களின் தேர்வு முடிவுகள் ஆகியவை 16.07.2020 அன்று வெளியிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து , தங்கள் பள்ளி மாணவர்கள் ( மற்றும் ) தங்கள் தேர்வு மையத்தில் தனித்தேர்வர்களாகத் தேர்வெழுதியோர் விடைத்தாள் நகல் கோரியோ அல்லது மதிப்பெண் மறுகூட்டல் கோரியோ விண்ணப்பிக்க விரும்பினால் , 24.07.2020 ( வெள்ளிக் கிழமை ) முதல் 30.07.2020 ( வியாழக் கிழமை ) வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்களைப் பதிவு செய்ய விரும்பும் பள்ளி மாணாக்கர் , தாங்கள் பயின்ற பள்ளி வழியாகவும் , தனித்தேர்வர்கள் , அவர்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் வாயிலாகவும் ஆன் - லைனில் தங்கள் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். எனவே , பள்ளி மாணவர்கள் தனித்தேர்வர்கள் விண்ணப்பங்களைப் பதிவு செய்யத் தங்களது பள்ளிக்கு வரும்பொழுது , தாங்கள் அதற்கேற்ப தகுந்த ஏற்பாடுகளைத் தயாராக செய்து வைத்திருத்தல் வேண்டும்.

ஒவ்வொரு பள்ளிக்கும் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள User ID , Password- ஐ பயன்படுத்தியும். கீழ்க்குறிப்பிட்டுள்ள அறிவுரைகளைப் பின்பற்றியும் மேற்குறிப்பிட்டுள்ள நாட்களில் விண்ணப்பங்களை ஆன் - லைனில் பதிவேற்றம் செய்திட அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்களும் உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும்.

Retotal And Xerox Copy - TN Exam Boards Proceedings - Full Details - Download here...

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி