ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிபெற்ற இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு உடனடியாகப் பணிநியமன ஆணை வழங்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 14, 2020

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிபெற்ற இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு உடனடியாகப் பணிநியமன ஆணை வழங்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்ற 80,000க்கும் மேற்பட்ட இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு இதுவரை எவ்வித பணிநியமன ஆணையும் வழங்காமல் தமிழக அரசு காலம் தாழ்த்தி வருவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.


தகுதித் தேர்வில் வெற்றி பெற்றும் கடந்த ஆறு ஆண்டுகளாகப் பணி ஆணை வழங்கப் பெறாததால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. ஆசிரியர் பணி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் முந்தைய பணியையும் பலர் துறந்து வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். கொரோனா நோய்த்தொற்றுப் பரவலையொட்டி போடப்பட்டுள்ள ஊரடங்கில் இவர்களது குடும்ப நிலைமை மிகவும் பாதிக்கப்பட்டு வறுமையில் உழலும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.


கடந்த ஆறு ஆண்டுகளில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பல்லாயிரம் பேர் பதவி உயர்வு மற்றும் ஓய்வு பெற்றதனால் ஏராளமான பணி வெற்றிடங்கள் உருவாகியும் தமிழக அரசு ஏன் இதுவரை அவற்றை நிரப்பாமல் வைத்துள்ளது என்ற கேள்வி எழுகிறது.


ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெறும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தேர்ச்சி சான்றிதழ் ஏழு ஆண்டுகள் மட்டுமே செல்லக்கதக்கது என்ற விதியின் காரணமாக, 2013ல் வெற்றிபெற்றவர்களின் தேர்ச்சி தகுதியானது இந்த ஆண்டோடு முற்றுபெறும் நிலையில் உள்ளது. இறுதி ஆண்டும் கொரோனா ஊரடங்கில் பணி ஆணை வழங்கப்படாமலே முடிந்துவிடுமோ என்ற கவலை ஆசிரியப் பெருமக்களை மேலும் மனஉளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது.


கல்லூரிப் பேராசிரியர்களுக்கான மத்திய-மாநில அரசுகள் நடத்தும் தகுதித் தேர்வுகளின் ( NET – SLET)தேர்ச்சி சான்றிதழானது, ஆயுட்காலம் முழுவதும் பணிநியமனம் செய்யப்படும் வரை செல்லத்தக்கதாக உள்ளது. ஆனால் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் தகுதித்தேர்வின் தேர்ச்சியானது ஏழாண்டுகள் மட்டுமே செல்லதக்கத்து என்பதும், அதிலும் கடந்த ஆறு ஆண்டுகளாக எவ்வித பணிநியமனமும் செய்யப்படவில்லை என்பது ஆசிரியப் பெருமக்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதியாகும்.


எனவே தமிழக அரசு, நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் இடமாக விளங்கும் வகுப்பறைகளை வழிநடத்த காத்திருக்கும் ஆசிரிய பெருமக்களை இனியும் துன்பத்தில் ஆழ்த்தாது இனிவரும் அனைத்து இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமனங்களில் 2013 ஆம் ஆண்டுத் தகுதித்தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரிய பெருமக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பணிநியமன ஆணையை வழங்கி நிரப்பப்படாமல் உள்ள பணி வெற்றிடங்களை உடனடியாக நிரப்ப முன்வர வேண்டும். மேலும் கல்லூரி பேராசிரியர்களுக்கான தகுதித்தேர்வில் உள்ளதுபோல் தேர்ச்சி சான்றிதழ் செல்லுபடியாகும் காலத்தை ஆயுட்காலமாக மாற்ற வேண்டும் என்றும் தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.


– சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி



81 comments:

  1. Replies
    1. எங்கள் கோரிக்கையை ஏற்று இரண்டாவது முறை அறிக்கை வெளியிட்ட அண்ணன் சீமான் அவர்களுக்கு நன்றி! நன்றி! நன்றி!


      நீங்கள் 2013 ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று இன்று வரை பணிபெறாமல் வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பவரா?

      களம் காண வாருங்கள்.

      2013 ம் ஆண்டு ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்ற நண்பர்கள் மட்டும் கீழ்கண்ட வாட்ஸ்அப் லிங்கின் மூலம் இணையவும்.

      ம.இளங்கோவன்
      மாநில ஒருங்கிணைப்பாளர்

      வடிவேல் சுந்தர்
      மாநில தலைவர்

      2013 ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம்.

      https://chat.whatsapp.com/L09JQqchg8oDYBDuUi7kv5

      Delete
    2. Ivan oru alu karuvapaya iva yaru oru ward number kuda illa ivana na nambi iniku vara oru election jaikala ivan solli nadakka pogudhu selladhu rasa vaipaya illa nee endha kalathiliyum jeika mata semman avargalay

      Delete
    3. Oru counselor kuda iva illa...

      Delete
  2. நன்றி அண்ண...நல்லது நடக்கும் 2013க்கு....யாரும் கவலை கொள்ள வேண்டாம்....வெற்றி நம் பக்கம்.....

    ReplyDelete
    Replies
    1. 13 batch ku eththa murai thaan posting podarathu luusungalaaaaa.....

      Delete
    2. 2013 க்கு மட்டுமே posting போட வாய்ப்பு இல்லை,போடும் போது எல்லா batchum mix panni ,meritwise தான் போடுவாங்க.அதனால் யாரும் கவலை பட தேவையில்லை.அப்படியில்லாம ஒரு batch mattum போட்டால் ,நூற்றுக்கணக்கான பேர் case போடுவாங்க

      Delete
  3. நன்றி சீமான் ஐயா. ஸ்டாலின் சொன்னால் இன்னும் வலுப்பெறும். அவர் சொல்லவே இல்லை.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் அவரிடம் எடுத்து கூறி அறிக்கைபெறலாமே

      Delete
  4. உங்களுக்கு தெரிந்த 2013 டெட் தேர்வர்களுக்கு இந்த LINK ஐ அனுப்பி அவர்களை இந்த குழுவில் இணைய சொல்லவும்.

    https://chat.whatsapp.com/L09JQqchg8oDYBDuUi7kv5

    மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள்
    *2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நல சங்கம்*

    ReplyDelete
    Replies
    1. ஏன் 2013 என்று தனியாக பிரித்து பார்க்கிங்க 17,19 அனைவரும் ஒன்றே....

      Delete
  5. மிக்க நன்றி அய்யா,இருண்டு கிடக்கும் எங்கள் வாழ்வில் ஒளி ஏற்றுங்கள்...கணவன் இல்லை, இரண்டு பெண் பிள்ளைகள்,

    ReplyDelete
  6. மிக்க நன்றி அய்யா,இருண்டு கிடக்கும் எங்கள் வாழ்வில் ஒளி ஏற்றுங்கள்...கணவன் இல்லை, இரண்டு பெண் பிள்ளைகள்,

    ReplyDelete
    Replies
    1. 17 la pass pannavanga kudathaan widow ah irukanga. Neenga mattum enna special ah madam..... Innum solla ponal 17 19 ku thaan 1st posting podanum

      Delete
    2. அனைவரும் நலம் பெற வேண்டும்...

      Delete
  7. 2013 Ellarukume posting poda mudiyuma 80000 vacancy iruka sari ennamo Nadakattum

    ReplyDelete
  8. வயது 43 10ஆம் வகுப்பு தேர்ச்சி 1993,12ஆம் வகுப்பு 1995, ஆசிரியர் பயிற்சி தேர்ச்சி 2006, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு மூப்பு 25 ஆண்டுகள்,தகுதி தேர்வு தேர்ச்சி 2013 தாள்1 தாள்2,வாழ்வாதாரம் படுபாதாளம்...

    ReplyDelete
  9. வயது 43 10ஆம் வகுப்பு தேர்ச்சி 1993,12ஆம் வகுப்பு 1995, ஆசிரியர் பயிற்சி தேர்ச்சி 2006, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு மூப்பு 25 ஆண்டுகள்,தகுதி தேர்வு தேர்ச்சி 2013 தாள்1 தாள்2,வாழ்வாதாரம் படுபாதாளம்...

    ReplyDelete
  10. உங்கள் நிலைதான் நானும் என்ன செய்ய எதிர் கட்சி தலைவர் ஓர் அறிக்கை விட்டால் நடக்கலாம் அவர் வாயை திரக்கவே மாட்டேன் என்று உள்ளார் இறைவா உனக்கே சமர்பனம்

    ReplyDelete
  11. Ayya seeman avarkaluku 2013 tet pass teacher sarbaka nalvalthukkal.

    ReplyDelete
    Replies
    1. Avar sonnathum ungalukku posting pottuduvangalaaaa...

      Delete
  12. really great Seeman Anna thank you

    ReplyDelete
  13. நன்றிங்க சீமான் அன்ணா

    ReplyDelete
  14. Replies
    1. 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற நண்பர்களுக்கு இந்த லிங்க் : ஒரு பார்வை

      Delete
  15. எல்லாரும் 2013,2017 பிரித்துபேசாமல் ஒற்றுமையாக செயல்படுங்கள், நானும் தான் 2013, 2017 தாள்1 தாள்2 பாஸ்

    ReplyDelete
  16. அண்ணா 2017 பாஸ் பன்னவங்க

    ReplyDelete
  17. Thank you very much for your support sir.

    ReplyDelete
  18. அண்ணன் சீமான் அவர்களுக்கு கோடான கோடி நன்றி 2013 TET தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம்

    ReplyDelete
    Replies
    1. Sangam la iruka nanum kalagam onnu arampikaren
      2017 Tet asiriyar munnetra kalagam

      Delete
    2. கோடான கோடி நன்றி யேசப்பா.... கோடான கோடி நன்றி..... ஒரு வார்டு மெம்பர் தேர்தலில் கூட வெற்றி பெற முடியாத ஒருவரின் அறிக்கை ..., 2013 tet candidates.... contact pm Modi ji....

      Delete
  19. இந்த அரசியல்வாதிகளுக்கு 2013 ல் தேர்ச்சி பெற்றவர்களை மட்டும் தான் தெரியுமா.மேலும் எம்பிளாயிமென்ட் சீனியாரிட்டி அடிப்படையில் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி நியமனம் கிடைக்க வாய் திறக்க மாட்டார்களா ?!

    ReplyDelete
  20. 2017 Tet munnetra kalagam sarpaga kandanangalai therivithu kolgiren

    ReplyDelete
  21. First 2019 fill pannunga. Nann ponnu parthirukkan kalyanam pannala?

    ReplyDelete
  22. Part time teacher posting conform panna oru vali pannuga seeman avargalay ungaluku naaga sariya irrupom...

    ReplyDelete
  23. Replies
    1. Already near 15000 posting pottathu theriyatha,ithukooda thriyatha comment podura

      Delete
  24. தே வாட்ச்சேர்த்துக்கொள்ளவும் 994388907.

    ReplyDelete
  25. 2013,2017,2019 என அனைத்திலும் தேர்ச்சி பெற்றவர்கள் தங்கள் குழந்தைகளை,தங்களுக்கு தெரிந்தவர்களின் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்து மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்வோம். கட்டாயம் நம் அனைவருக்கும் அரசு வேலை கிடைக்கும். நமக்குள் சண்டைகள் வேண்டாம்.

    ReplyDelete
    Replies
    1. 2013 ஆம் ஆண்டு தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி கிடைக்கவேண்டும் என்பதைக் கேட்டு அறிக்கை விடுவது சிறந்ததுதான். அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளது ஏற்புடையதே . ஆனால் அதற்கு நிறைய காரணங்கள் உள்ளன.அவற்றைப் பேச விரும்பவில்லை. பள்ளிகளில் ஆசிரியர் மாணவர் விகிதம் மாற்றியதால் தான் பணியிடங்கள் உபரி என்று சொல்ல முதன்மையான காரணம்.விகிதாச்சாரம் மாற்றாமல் இருந்திருந்தாலே இந்நேரம் 2013 முடிந்து 2017 தேர்ச்சி பெற்றவர்களுக்கும் பணி வாய்ப்பு கிடைத்திருக்கும். எனவே அரசியல் தலைவர்களின் அறிக்கையில் ஆசிரியர் மாணவர் விகிதம் முன்பு இருந்தது போல் மாற்றி TET தேர்ச்சி பெற்ற பின் மீண்டும் ஒரு போட்டித்தேர்வு என்பதற்கான அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்பதே சிறந்த அறிக்கையாக இருக்க முடியும் .

      Delete
    2. 13 ku eththana Time thaan posting podarathu.... Summa 13 13 nu sollikkittu....

      Delete
    3. அரசு பள்ளி நிலைமை மாற அடுத்த அரசு வர வேண்டும். 234தொகுதியிலும் admk ku apposite ah கலம் காண்போம்

      Delete
    4. அரசு பள்ளி நிலைமை மாற அடுத்த அரசு வர வேண்டும். 234தொகுதியிலும் admk ku apposite ah கலம் காண்போம்

      Delete
    5. நம்மால் முடிந்த வரை குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க முயற்சி செய்ய வேண்டும் .
      இந்த வருடம் கண்டிப்பாக அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கை அதிகமாகும் நன்றி
      http://www.youtube.com/c/MUNITNPSCTET

      Delete
  26. அ.இ .அ.திமுக தோற்கும் இது உறுதி
    இத்துடன் நாசமாக போவார்கள்

    ReplyDelete
  27. Yes very bad government.no vaccancy for last 7 years?

    ReplyDelete
    Replies
    1. Kalvi amaicharukku tet thervu endraal ennavendre theriyadhu.padithavargal vazhkai padikkadhavargal kaigalil

      Delete
  28. Padithavargalin vazhkai padikadhavargalin kaigalil

    ReplyDelete
  29. Teacherku patichu tet pass panni .kevelapatum jenmam .yaralum thirvu illam irrkkum teachers very sad.

    ReplyDelete
  30. 2013 Tet pass Tamil 99 marks .தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு முன்னுரிமை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. அப்படி எல்லாம் முன்னுரிமை வழங்க இயலாது...

      Delete
  31. டெட் கோமா நிலையில் உள்ளது

    ReplyDelete
  32. நன்றி அண்ணா... 99 2013 68.23 வய வேலை வேண்டும்..

    ReplyDelete
  33. இந்த கொசு தொல்லை தாங்க முடியவில்லை.....2013 க்கு posting தானே.... சீமான் office la appointment order இருக்கும்.... போய் வாங்கி பணியில் சேரவும்.... முட்டா பசங்க...

    ReplyDelete
  34. 2021 ONWORDS TEACHER RECRUITMENT FULL EMPLOYMENT SENIORTY BASIS CONFIRM.

    ReplyDelete
  35. CURRENT NEW TN GOVT. DMK . DMK KOLKAI MUDIVU EMPLOYMENT SENIORITY. 100% EMPLOYMENT SENIORITY ONLY. PATHIVUMOOPU THANTHAI KALINGAR KARUNANEETHI AVARGAL.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி