ஆசிரியர் தகுதித்தேர்வு: சான்றிதழ் காலத்தை ஆயுட்கால சான்றிதழாக நீட்டித்துப் பணி நியமனம் வழங்குக; சரத்குமார் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 9, 2020

ஆசிரியர் தகுதித்தேர்வு: சான்றிதழ் காலத்தை ஆயுட்கால சான்றிதழாக நீட்டித்துப் பணி நியமனம் வழங்குக; சரத்குமார்

இதுதொடர்பாக, சரத்குமார் இன்று (ஆக.9) வெளியிட்ட அறிக்கை:


"2013-ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள்  தற்போது வரை பணி நியமனம்  பெறாமல் அவர்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் சூழல் மிகுந்த வேதனை அளிக்கிறது.

ஆறரை ஆண்டுகளுக்கு முன்பாக சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தும் பணியினை வழங்காமல் இருப்பதும், ஏழு ஆண்டுகளுக்கு மட்டுமே சான்றிதழ் செல்லுபடியாகும் என்ற நிலையில், ஏற்கெனவே ஆறு ஆண்டுகள் கடந்துவிட்டதால், சான்றிதழ் காலாவதியாவது மட்டுமின்றி ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் என்ற ஐயத்தாலும், மத்திய மற்றும் மாநில பேராசிரியர்களுக்கான தகுதித் தேர்வுக்கு வழங்கப்படக்கூடிய ஆயுட்கால சான்றிதழ் போன்று இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித் தேர்வு காலத்தை ஆயுட்கால சான்றிதழாக நீட்டித்து அவர்களுக்கு உதவ முன்வர வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்.

அரசின் நிதி நிலைமை கருதி, தொகுப்பூதியத்தின் அடிப்படையில் பணியில் ஈடுபட தயாராக உள்ள ஆசிரியர்களை பயன்படுத்தி படிப்படியாக அவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கிடவும், ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் செல்லுபடியாகும் காலத்தை ஆயுட்கால சான்றிதழாக நீட்டித்தும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் நீண்ட கால காத்திருப்புக்குப் பலனை அளிக்கும் வகையில் அவர்கள் எதிர்கால வாழ்க்கை நலன் சார்ந்த முடிவினை தமிழக முதல்வர் உயரதிகாரிகளுடன் கலந்தாலோசித்து விரைவில் அறிவிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்"

இவ்வாறு சரத்குமார் தெரிவித்துள்ளார்.

75 comments:

  1. நன்றி சரத் குமார் ஐயா.ஸ்டாலின் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லையே.

    ReplyDelete
  2. அனைவரையும் முதலில் பகுதி நேரமாக பணியமர்த்தி பின்பு நிரந்தரம் செய்யலாம்.

    ReplyDelete
    Replies
    1. ஆமா ias அதிகாரி ஆணை போட்டு விட்டாரு

      Delete
    2. சொல்லிட்டாரு முதலமைச்சர்

      Delete
    3. I hope that 2013 TET passed candidates will definitely get a positive reply from the government. There are many problems in giving posting to others bypassing the 2013 TET passed candidates.

      Delete
    4. ஆம் முதலி‌ல் வேலை என்ற ஒன்று கினடகட்டும்

      Delete
  3. 2013 குழு தீவிர வேலை பார்க்குறாங்க???2014 எவ்வளவு போராட்டம் 82 ஆக குறைக்க கூடாது என்று...மறக்க முடியும???😭😭😭😭😭😭

    ReplyDelete
    Replies
    1. மீண்டும் பழைய நினைவுகள்😲😲😲😲😲😲😲😲😲😲

      Delete
  4. ராஜலிங்கம்,வடிவேல்,செல்லதுரை,புனிதா Tamil எல்லாம் என்ன ஆனார்களோ

    ReplyDelete
    Replies
    1. மிகவும் வேதனையான தருணங்கள் கண் முன் வந்து செல்கிறது...

      Delete
  5. இந்த தேர்வை அளவீடாக(parameter) கொள்வதால் ஆசிரியர் தேர்வு வாரியம் பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு நடத்திய தேர்வுகளில் எந்த தேர்வாக (including UG TRB BEFORE 2011 ) எந்த வருடமாக இருந்தாலும் அவர்கள் 82 மதிப்பெண் பெற்றிருந்தால் அவர்களை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தகுதி உடையவர்களா அறிவிக்க வேண்டும். ஏனெனில் இந்த அரசு மட்டும் தான் இந்த முறையை கொள்கை முடிவாக எடுத்து செயல் படுத்துகிறது.

    ReplyDelete
  6. நன்றிங்க சார்

    ReplyDelete
  7. No posting 2013 court case irukkutu

    ReplyDelete
    Replies
    1. That case is against those who didn't pass in the TET so there is no any hinder for the 2013 TET passed candidates.

      Delete
  8. நன்றி சார்

    ReplyDelete
  9. Nanri sarathkumar sir . stalin avarkalum solla vandum

    ReplyDelete
  10. Allready c m tell about to all 2013 cantidats

    ReplyDelete
  11. அடுத்தகட்ட பணிகள் தொடரும்

    ReplyDelete
  12. கணவன் இல்லை,இரண்டு பெண்பிள்ளைகள், 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி,வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறோம்

    ReplyDelete
  13. கணவன் இல்லை,இரண்டாவது பெண் பிள்ளை லூக்கோமியா இரத்த புற்றுநோயால் 2013 டிசம்பரில் மரணம்,இரண்டு பெண் பிள்ளைகள்,2013ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தாள்1,தாள்2 தேர்ச்சி வாழ்வாதாரம்???????.......

    ReplyDelete
  14. கணவன் இல்லை,இரண்டாவது பெண் பிள்ளை லூக்கோமியா இரத்த புற்றுநோயால் 2013 டிசம்பரில் மரணம்,இரண்டு பெண் பிள்ளைகள்,2013ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தாள்1,தாள்2 தேர்ச்சி வாழ்வாதாரம்???????.......

    ReplyDelete
  15. கணவன் இல்லை,2013 இல் இரண்டாவது பெண் பிள்ளை லூக்கோமியா இரத்த புற்றுநோயால் இறந்தார், இரண்டு பெண் பிள்ளைகள்,2013ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தாள்1,2 தேர்ச்சி, வாழ்வாதாரம்???...

    ReplyDelete
  16. lot of thank you sir i will salute

    ReplyDelete
  17. Thank you for your support sir.

    ReplyDelete
  18. Part time teacher pathi yarumay kanduka matringa TET ku munnadi nanga kasta padurdhu yaarukku theriyamatudhu...rendu peathuku job kidacha ok...tet oru eligible test avalvu tha but PTT appudi illa.( Own comment)

    ReplyDelete
  19. Thank you sarathkumar sir... Already niraya problems face pannitom sir... Positive result vandha nallarukum

    ReplyDelete
  20. Sollitaaryaa prime minister.....2013 ku all posting filled by the government.....aiyooo aiyooo.....

    ReplyDelete
  21. Appo 17 19 ku yaaar posting poduvanga.... 13 la 15000 posting potte celect aaga mudiyala ungalala.... Ipa epadi ungalukku job tharuvathu....

    ReplyDelete
    Replies
    1. Avaru solrathu unmaithaaneee nanba....

      Delete
    2. Aglo posting potte select aaga thuppu illa 13 batch ku

      Delete
  22. 2013 or 17 ஏதோ ஒன்னு போஸ்டிங் போடுங்க ரெண்டிலும் பாஸ் பண்ணிட்டு வெயிட் பண்றோம்

    ReplyDelete
  23. வயது 43(1977),10ஆம்வகுப்பு1993,12ஆம் வகுப்பு 95,ஆசிரியர் பயிற்சி 2006, வேலைவாய்ப்பு அலுவலக பணி பதிவு 25 ஆண்டுகள்,2013ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வு தாள்1, தாள்2 தேர்ச்சி,கணவனால் கைவிடப்பட்டவள்(17ஆண்டுகள்) இரண்டாவது பெண் பிள்ளை லுக்கோமியா இரத்த புற்று நோயால் டிசம்பரில் இழந்தேன், இரண்டு பெண் பிள்ளைகள்,வாழ்வாதாரம்???...

    ReplyDelete
  24. Tet pass pls appointed the teacher candidates.
    Pray for God

    ReplyDelete
    Replies
    1. கடவுளுக்கு எதற்கு Pray செய்யனும்😁😁😁😁😁😁😁😁😁

      எழுத்தாணி Keyboad பயன்படுத்து நண்பா!!!!!!

      Delete
  25. PTT ku conform pannuga..TET only eligible mattum tha but PTT appudi illa

    ReplyDelete
  26. Thank you very much tamilan sir

    ReplyDelete
  27. சரத்குமார் சார் இந்த செய்தி முதல் வர்.அவர்களுக்கு கடிதம் மூலம் தெரிய படுத்தலாம்.நீங்கள் பல்லாண்டுகாலம்வாழ வாழ்த்துகிறோம்.....

    ReplyDelete
  28. 2013 கூட்டமைப்பு எப்படியாவது உதவி செய்யுங்க.

    ReplyDelete
    Replies
    1. நல்லது நடக்கும்

      Delete
  29. 2013 கூட்டமைப்பு எப்படியாவது உதவி செய்யுங்க.

    ReplyDelete
  30. எங்களுகாக பேசியமைக்கு மிகவும் நன்றி திரு.சரத்குமார் மற்றும் GK வாசன் அவர்களே...

    ReplyDelete
  31. நண்பர்களை ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் நானும் ஒரு காலத்தில் (2012to2013 வரை) TETல் 105 mark எடுத்து தேர்ச்சி பெற்று பணிநியமனம் பற்றி தகவல் இக்குழுவில் இப்போ வருமா அப்போ வருமா.. அதை பற்றி எவரேனும் பேசி மனதுக்குள் ஆறுதல் தருவாங்களானு அடிக்கடி விவாதித்து வந்தவன் நான்.. 2013 வருடம் சென்னையில் வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற உண்ணாவிரததத்திலும் கலந்து கொண்டவன்.. பிறகு நம் முயற்சிகள் அனைத்தும் விழலுக்கு இறைத்த நீர் போல வீணாகி விட்டதே என நொந்து போய்
    சென்னை முருகன் இட்லி கடையில் சர்வராக வேலைசெய்தவன்.. அங்கு ஏற்ப்பட்ட அவமானம், என் தன்மானம், சுயமரியாதையை சீண்டி பார்த்தது, இது வேலைக்காகாது என நினைத்து, கடுமையாக 5 மாதம் படித்து விடாமுயற்சியால் 2015Group 4 தேர்வில் வெற்றி பெற்று தற்போது இளநிலை உதவியாளராக பணியில் உள்ளேன்.. எனது அடுத்த இலக்கு group 2.. எனவே நீங்களும் உங்கள் மற்ற வேலையில் கவனம் செலுத்துங்க.. என்னை பொறுத்தவர 2013,2017,2019 னு யாருக்கும் ஆசிரியர் பணிநியமனமே இல்லை.. ஆனால் pg trb க்கு வாய்ப்பு உள்ளது.. எனவே வேலை இப்ப போடு வாங்க அப்போ போடுவாங்கனு உங்க வீண் என்னங்களை விட்டுட்டு மற்ற வேலைவாய்ப்பு துறைகளில் கவனம் செலுத்துங்க...
    இந்த கல்வி செய்தி குழுவின் நோக்கம் கல்வி சார்ந்த செய்திகளை வெளியிடுவது மட்டுமே.. நீங்கள் எதிர்பார்ப்பது போல இக்குழுவில் விவாதித்தால் அரசின் கவனத்துக்கு சென்று நமக்கு வேலை கொடுத்துடுவாங்க என எண்ண வேண்டாம்.. இக்குழுவின் சில உறுப்பினர்களும், உங்கள் மனசு ஆறுதலுக்காக அவவ்வ்போது சில ஆறுதல் வார்த்தைகளை சொல்வதும், அதை பரிதவிப்போடு நீங்கள் படித்து மீள் கேள்விகள் கேட்பதும் எனக்கு சற்று வருத்தமாக உள்ளது.. ஆனால் இந்த ஆட்சி இருக்கும் வரைஅது எதுவும் நடக்கப்போவதில்லை.. நான் சொல்வதெல்லாம் ஒன்று தான் 2013,2017,19க்கே வேலை போடும் போது போடட்டும் நமக்கானது நம்மகிட்ட வந்தே தீரும். அதுக்காக அதையே நினைத்துக் கொண்டு உங்கள் காலத்தை வீணாக்காமல் அடுத்த அரசு துறை வேலைவாய்ப்பை கவனத்தில் எடுத்து படியுங்கள் வெற்றி பெறுங்கள். இங்கு உங்களின் புலம்பல் அனைத்தும் வீண்.. காலம் பொன் போன்றது அன்பர்களே. ஆண்டுக்கு ஆண்டுpg trbபணியிடம் நிறைய உள்ளது.. கவனியுங்கள் நன்றி💐💐🙏🏻🙏🏻👍🏻👍🏻

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி