ஆசிரியர் பயிற்சி சான்றிதழ் பெற்றவர்களுக்கு சான்றிதழை ஆயுள் காலமாக நீட்டிக்க வேண்டும் - திருநாவுக்கரசர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 20, 2020

ஆசிரியர் பயிற்சி சான்றிதழ் பெற்றவர்களுக்கு சான்றிதழை ஆயுள் காலமாக நீட்டிக்க வேண்டும் - திருநாவுக்கரசர்

ஆசிரியர் பயிற்சி சான்றிதழ் பெற்றவர்களுக்கு சான்றிதழின் காலத்தை நீட்டித்துத் தர வேண்டும் என, மக்களவை காங்கிரஸ் உறுப்பினர் திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, திருநாவுக்கரசர் இன்று (ஆக.20) வெளியிட்ட அறிக்கை:

"2013-ம் ஆண்டு ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு நடத்தப்பட்டு தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. சுமார் 80 ஆயிரம் பேர் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியருக்கான தேர்வில் வெற்றி பெற்றனர். ஆனால், இவர்களுக்கு பணி நியமனம் வழங்கப்படவில்லை. இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் 7 ஆண்டு காலம் மட்டும் என கூறப்பட்டுள்ளது. எனவே இதுவரை வேலை கிடைக்காத 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் சான்றிதழ்கள் காலாவதியாகிவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

பேராசிரியர்களுக்கான மத்திய - மாநில தகுதித் தேர்வுகள் மூலம் வழங்கப்படும் சான்றிதழ்கள் ஆயுள் கால சான்றிதழ்களாக வழங்கப்படுகின்றது. பீகார். ஹரியானா போன்ற மாநில அரசுகள் ஆசிரியர்கள் தகுதித் தேர்வு சான்றிதழ்களின் காலத்தை ஏற்கெனவே நீட்டித்துள்ளன. அதுபோல் தமிழக அரசும் ஆயுள் கால சான்றிதழ்களாக தகுதி பெற்றவர்களின்சான்றிதழ் காலத்தை நீட்டித்துத் தர வேண்டும்.

சுமார் ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக பணி கிடைக்காமல் அவதியுறும் ஆசிரியர் பயிற்சி சான்றிதழ் பெற்றவர்களுக்கு சான்றிதழின் காலத்தை நீட்டித்துத் தந்தால் தான் வருங்காலத்திலாவது அவர்கள் ஆசிரியர் பணிக்கு செல்ல முடியும். இல்லையெனில் அவர்களது வாழ்க்கை கேள்விக்குறியாக அமையும்.

நீண்டகாலமாக பணி நியமனம் கிடைக்காமல் உள்ள பயிற்சி பெற்றவர்களின் அவலம் நீங்கவும், ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரத்தை முறைப்படுத்தி சரி செய்யவும், 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச் சங்கத்தின் சார்பில் தமிழக அரசுக்கு விடப்பட்டுள்ள மேற்கண்ட வேண்டுகோளை ஏற்று செயல்படுத்த தமிழக கல்வி அமைச்சரும், தமிழக முதல்வரும் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்"

இவ்வாறு திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

Source : www.hindutamil.in

31 comments:

  1. This year many student join govt schools. so 2013,2017 and 2019 all of them get job.

    ReplyDelete
  2. This year many student join govt schools. so 2013,2017 and 2019 all of them get job.

    ReplyDelete
  3. This year many student join govt schools. so 2013,2017 and 2019 all of them get job.

    ReplyDelete
  4. Sir,2012,2013 patch already posting potachu.2017&2019 no posting?

    ReplyDelete
    Replies
    1. In 2013 only 1200 posting than pottanga for paper 1. So avangaluku pottu than they consider 2017..

      Delete
  5. உடற்கல்வி ஆசிரியர் பணி நியமனம் செய்யுங்கள்

    ReplyDelete
  6. Ivalo naal enga poniga sir ipadhan engaloda kastam theriyudha

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் போய் உங்க கஷ்டத்தை சொன்னீங்களா......

      Delete
  7. Govt school open lkg ukg nep 2020 so paper 1 canditate plz to try govt job .....other state teacher provide govt school push the goverment ...

    ReplyDelete
  8. Y tube sonnanga oru chanbal la paper 1 2021 sep month paper 2 nov 2021

    ReplyDelete
  9. நல்லா நீட்டுனாங்க

    ReplyDelete
  10. இவர் ஒருவர் மட்டும்தான் சாத்தியமான கோரிக்கையை வைத்துள்ளார். ஆனால் என்ன செய்ய மத்திய அரசு தகுதித் தேர்விற்கான கால அளவாக ஏழாண்டுகள் மட்டுமே என்று நிர்ணயம் செய்துள்ளது. எனவே மத்திய அரசிடம்தான் இக்கோரிக்கையை திருநாவுக்கரசர் வைக்க வேண்டுமே தவிர தமிழக அரசிடம் இல்லை.

    ReplyDelete
  11. With in a year all are get teacher.

    ReplyDelete
  12. When the implement of tet exam g.o passed due to validity of candidature is 7 years.Many of the future competitors is waiting for exam notification consider the two statement Tet passed candidates wait for job.But Future competitors wait for exam.

    ReplyDelete
  13. Corono issue may be not written exam so seniority + tet mark so considered get govt job

    ReplyDelete
  14. 2013 already give life time valitidy

    ReplyDelete
    Replies
    1. பாக்கத்தான போற....

      Delete
  15. Thank you sir,certificate life validity na than all TET eligible candidate kum benefits.yearly once TET exam vaikalam

    ReplyDelete
  16. Thank you sir,certificate life validity na than all TET eligible candidate kum benefits.yearly once TET exam vaikalam

    ReplyDelete
  17. Thank you sir certificate life time validity na than all Tet eligible candidate kum useful.New competitors kum yearly once exam vaikalam

    ReplyDelete
  18. Please Entha politicianum ithai pathi pesa arugathai attarvargal kan ketta piragu suriya namaskaram pola ullathu ungal Kelvi. Neengal Ellam 2013 il enga iruntheerkal. Nanbargale ivanga solvathai nambi meendum kanavu kanatheerkal Namaku vaippu kuraivu so Pls Vera velaiyai thedungal

    ReplyDelete
  19. I am Tet passed cantidate. Weightage mark is 73.47. (paper-1).2013 la paper 1 ku-1200 posting than pottanga.next weightage la posting ponnavanga mark patha(75.10)varai than poeirukkanga.first weightage mark-81.20.intha mark eduthathu 2 naber.so paper 1ku posting podunga

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி