பள்ளிக் கல்வி - அகரம் அறக்கட்டளை வழங்கும் அகரம் விதைத் திட்டம் - தகுதியுள்ள 12ஆம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்க அனுமதி வழங்கி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 29, 2021

பள்ளிக் கல்வி - அகரம் அறக்கட்டளை வழங்கும் அகரம் விதைத் திட்டம் - தகுதியுள்ள 12ஆம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்க அனுமதி வழங்கி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!


அகரம் அறக்கட்டளை நிறுவனம் , அகரம் விதைத் திட்டம் -2021 எனும் திட்டத்தினை , இக்கல்வி ஆண்டில் ( 2020-2021 ) செயல்படுத்தும் வகையில் , அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் , பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவ / மாணவியரில் படித்து முன்னேற வேண்டும் என்ற கனவோடு இருக்கும் முதல் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் , பெற்றோரை இழந்தவர்கள் , வறுமையில் உழல்பவர்கள் , மாற்றுத் திறனாளிகள் , விளையாட்டு , கலை என கல்வி இணைச் செயல்பாடுகளில் மிகுந்த ஈடுபாட்டுடன் சிறப்பிடம் பெற்றவர்கள் , கணிதம் மற்றும் அறிவியலில் புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்த்தும் திறன் பெற்ற மாணவர்கள் என தேர்ந்தெடுத்து , அகரம் விதை திட்டத்திற்கு விண்ணப்பிக்க அறிவுறுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே , அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும் , தங்கள் மாவட்டத்திலுள்ள , அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் , பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணக்கர்கள் , மேற்படி அகரம் விதைத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க ஏதுவாக , சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறும் , பள்ளிகளில் கற்றல் / கற்பித்தல் பாதிக்காத வகையில் சார்ந்த நிறுவனத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிடுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.


Agaram Foundation Scholarship - Application Form And Instructions - Download here...


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி