முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு: வயது நிர்ணய தகுதியை நீக்கி புதிய அறிவிப்பு வெளியிட வழக்கு: டிஆர்பி தலைவர் பதிலளிக்க உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 9, 2021

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு: வயது நிர்ணய தகுதியை நீக்கி புதிய அறிவிப்பு வெளியிட வழக்கு: டிஆர்பி தலைவர் பதிலளிக்க உத்தரவு

 தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த கிருஷ்ணகுமாரி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல வழக்கு: கடந்த பிப். 11ம் தேதி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிடங்களை நிரப்புவது தொடர்பான  அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதற்கான தகுதிகளில் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. 2011 முதல் தொடர்ந்து 5 முறை தேர்வெழுதிய நிலையில், கடந்த முறை சான்றிதழ் சரிபார்ப்பு  வரை சென்று, பணி அனுபவ மதிப்பெண்கள் இல்லாததால் பணி வாய்ப்பினை இழந்தேன். இதுவரை முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு வயது வரம்பு இல்லாத நிலையில், தற்போது புதிதாக வரம்பு உருவாக்கப்பட்டுள்ளது.


இது இயற்கை விதிகளுக்கு எதிரானது. இதன் காரணமாக முறையாக பயிற்சி பெறாத ஆசிரியர்கள் பணியமர்த்தப்படும் வாய்ப்பு உள்ளதால் மாணவர் சமுதாயமும் பாதிக்கப்படும் நிலை உருவாகும். எனவே, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு  தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் தரப்பில் பிப்ரவரி 11ல் வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்து, புதிதாக அறிவிப்பு வெளியிட உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி  அமர்வு, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் பதிலளிக்க உத்தரவிட்டனர்.

20 comments:

  1. வெற்றி நிச்சயம் கிடைக்கும் வரை தேர்வு நடத்த கூடாது

    ReplyDelete
  2. சிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் வழியில் உள்ளவர்களையும் பணி நியமனம் செய்யுங்கள் trb

    ReplyDelete
  3. Any PG Economics want mutual transfer to nagercoil contact 9952739404

    ReplyDelete
  4. 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் மீண்டும் TRB தேர்வை எழுத வாய்ப்பு வழங்கலாம் ...ஏனெனில் அவர்கள் தனியார் பள்ளிகளிளோ அல்லது தனியார் நிறுவனங்களிலோ பணிபுரிந்து ,,,,ஏறக்குறைய தங்களது நினைவுத்திறனில் சரிபாதியை இழந்திருப்பர் ....மேலும் தற்போது போட்டியில உள்ள இளம் ஆசிரியர்களிடம் போட்டி போடுவதென்பது மிகவும் சிரமமான காரியம் ......
    ஆகவே அரசு 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் மீண்டும் TRB தேர்வை எழுத வாய்ப்பு வழங்கினால் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் அவர்களாகவே TRB தேர்வில் தோல்வி அடைவார் ....

    ReplyDelete
  5. 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் மீண்டும் TRB தேர்வை எழுத வாய்ப்பு வழங்கலாம் ...ஏனெனில் அவர்கள் தனியார் பள்ளிகளிளோ அல்லது தனியார் நிறுவனங்களிலோ பணிபுரிந்து ,,,,ஏறக்குறைய தங்களது நினைவுத்திறனில் சரிபாதியை இழந்திருப்பர் ....மேலும் தற்போது போட்டியில உள்ள இளம் ஆசிரியர்களிடம் போட்டி போடுவதென்பது மிகவும் சிரமமான காரியம் ......
    ஆகவே அரசு 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் மீண்டும் TRB தேர்வை எழுத வாய்ப்பு வழங்கினால் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் அவர்களாகவே TRB தேர்வில் தோல்வி அடைவார் ....

    ReplyDelete
    Replies
    1. Sir they ask their rights neenga yaru karuthu solla ungala kettangala avoid this type of commands

      Delete
    2. Trb la pass pannavanga 50% ,,,,,,above 45 than,,,,நீங்கள் trb web site la selection list parunga

      Delete
    3. You first learn to type without spelling mistake.
      Blame or Flame?

      Delete
  6. மேற்கூறிய கந்தசாமி அவர்களும் எதிர்காலத்தில் 40 வயதை கடந்தும் வேலை கிடைக்கவில்லை எனில் அதன் வலி தெரியும்.

    ReplyDelete
  7. Naa oru part time teacher age 41 govt job la tha irruka ...engalukum idhu poruthuma

    ReplyDelete
  8. Above 45 age members kandipa exam pass panvanga. Enkuda padichavar age 47 avar economics la 31st rank eadhuthar. Yarayum kurachu madipidadinga bro. Avangalum jobku varanum

    ReplyDelete
  9. 2015 pg trbla avar pass pannar. Nan age 34 than ana 2017 trbla than pass panen commercela

    ReplyDelete
  10. @கந்தசாமிக்கு ஒரு ஆலோசனை, பத்து வயதிற்கு உட்பட்டவர்களை மட்டும் தேர்வு எழுத அனுமதித்தால், அவர்களின் நினைவுத்திறன் தங்களை விடச் சிறப்பாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. அது சாதா கந்த சாமி இல்ல... கருத்து கந்த சாமி...

      Delete
  11. Kandasamy unakku 45 years mudintha piragu intha karutha silly

    ReplyDelete
  12. Admk achi vandha orutharukum teacher job illai avoid admk avoid senkotian

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி