EL சரண்டர் தெளிவுரை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 4, 2021

EL சரண்டர் தெளிவுரை

கடந்த ஆண்டு போடப்பட்ட அரசாணை GO (ms) No:48  நாள்: 27.4. 2020 ல்  கோவிட் -19 பெருந்தொற்று காரணமாக 27.4.2020 முதல் 26.4 2021 வரை ஓராண்டு காலம் தடைசெய்யப்பட்ட காலமாக (Suspended for a period of one year from this 27.4.2020) என குறிப்பிடப்பட்டு இருப்பதால் அந்த காலத்திற்கு சரண்டர் வழங்க இயலாது எனவும் ....


1.5 .2021 க்கு பிறகு சரண்டர் செய்யும் ஆசிரியர் அரசு ஊழியர்கள் அந்த ஓராண்டை கணக்கில் சேர்க்காமல் விட்டு விட்டு வழக்கம்போல் 15 (அ) 30 நாட்களுக்கு அவரவர் ஒப்படைப்பு மாதத்தில்  சரண் செய்து அதற்குரிய பணப்பலனை பெற்றுக் கொள்ளலாம் என்றும்...


 தற்போது வெளியிடப்பட்டுள்ள அரசாணை: 12  நாள்:08.02.2021அன்று போடப்பட்டுள்ள அரசாணையின்படி (They shall be cancelled and earned leave re - credited to the leave account of the Govt.Servant. ) செயல்பட வேண்டும் என்றும் தெளிவுபடுத்தப் பட்டுள்ளது.


 கடந்த ஆண்டு *2020 ஏப்ரல் மாதத்தில் சரண் விடுப்பு செய்து பணப்பலன் பெற முடியாத ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் இவ்வாண்டு 28.04.2021 க்கு பிறகு கடந்த ஏப்ரல் மாதத்திற்கான  சரண்டரை ஒப்படைப்பு  செய்து பணப்பலன் பெற முடியுமா? என்று கேட்டதற்கு*.... 


இது குறித்து தெளிவுரை  கேட்டு மாநில கணக்காயர் அலுவலகத்திற்கு தபால் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதற்கான தெளிவுரை வந்த பின்பு தான் அது குறித்து முடிவு செய்ய முடியும் எனவும் பதில் அளிக்கப்பட்டுள்ளது.


எனவே மே மாதம் முதல் அவரவர் EL சரண்டர் செய்யும் மாதத்தில் கொரோனா கால நிறுத்திவைப்பு ஓராண்டை (27.4.20 - 26.4.21) எந்தக் கணக்கீட்டிலும் சேர்க்காமல் அதற்கு முந்தைய கணக்கின் படி ஒப்படைப்பு செய்யலாம் என TNPTF  மாநில அமைப்பு தெளிவுரை வழங்கி உள்ளது. அனைவரும் மே மாதத்தில் சரண்டர் கோர முடியாது. 


ஆசிரியர்கள்  இதனடிப்படையில் தங்கள் EL சரண்டர் ஒப்படைப்பு விண்ணப்பத்தினை சார்ந்த மாதத்தில் அளித்து பணபலனாக பெற்றுக் கொள்ளலாம்.



மே மாதம் முதல்  EL சரண்டர் விண்ணப்பம் அலுவலகத்தில் அளிக்கலாம். (27.4.20 - 26.4.21) ஓராண்டை கணக்கில் சேர்க்காமல் கடைசியாக நீங்கள் ஒப்படைப்பு செய்ததை வைத்து நாட்கள் இறுதி செய்யவும். 


எ.கா 


ஏப்ரல் 2020க்கு பிறகு 15 நாள் ஒப்படைப்பு செய்திருக்க  வேண்டியவர்கள் (அதாவது 2019ஏப்ரல் முதல் 2020 ஏப்ரல் வரை EL ஒப்படைப்பு செய்யாதவர்கள்) தற்போது 15 நாட்களே ஒப்படைக்க முடியும். 


ஏப்ரல் 2020க்கு பிறகு 30 நாள் சரண்டர் செய்திருக்க  வேண்டியவர்கள் (அதாவது 2018 ஏப்ரல் முதல் 2020 ஏப்ரல் வரை EL ஒப்படைப்பு செய்யாதவர்கள்)  தற்போது 30 நாட்கள்  சரண்டர் செய்யலாம்.

9 comments:

  1. கல்வி செய்தியை நம்புகிறோம் எனவே யூகம் WhatsApp செய்திகளை பகிரும் முன் உண்மையை உறுதிப்படுத்தவும்..

    யூகங்களை வெளியிடுவதை தவிர்க்கவும்....

    ReplyDelete
    Replies
    1. அரசு தரப்பில் எந்த தகவலும் இல்லாத போது TNPTF மாநில அமைப்பு சொல்கிறது என்று யூகித்து இப்படி வெளியிடுவது ஏற்புடையதல்ல.இப்படி பட்ட post கலை பதிவிடாமல் இருப்பது நல்லது

      Delete
  2. Go 12 நாள்08-02-2021ன் பொருள் என்ன?

    ReplyDelete
  3. Go 12 ன் பொருள் என்ன?

    ReplyDelete
  4. ஏப்ரல் 2020 ல் சரண்செய்ய கழிக்கப்பட்ட நாட்களை credit செய்ய தான் go no 12ல் சொல்லப்பட்டுள்ளது. புதிதாக சரண் செய்ய clarification பெறப்பட வேண்டும்.

    ReplyDelete
  5. Teacher's anybody please answer department Exam December 2020 results vanthuducha

    ReplyDelete
    Replies
    1. Apadina epadi next exam announce pannitangala boss. Yerkanave eluthina papers ok va nu epadi theriyum

      Delete
    2. இதுவரை result வெளியிடப்படவில்லை .முடிவு தெரியாமல் ஏற்கனவே எழுதியோர் எப்படி apply பண்ண முடியும்.govt முடிந்தாலும் குழப்பம் நீடிக்கிறது

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி