ஆசிரியர் அல்லாத பணியிடங்களை மாணவர்கள் எண்ணிக்கை அடிப்படையில் நிர்ணயம் செய்ய கல்வித்துறை உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 4, 2021

ஆசிரியர் அல்லாத பணியிடங்களை மாணவர்கள் எண்ணிக்கை அடிப்படையில் நிர்ணயம் செய்ய கல்வித்துறை உத்தரவு.

 

அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுக்கு உதவியாளர் / இளநிலை உதவியாளர் / பதிவறை எழுத்தர் பணியிடங்கள் மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் செய்து  அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

 அரசாணையின்படி 2019-2020ஆம் ஆண்டில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்கள் ( உதவியாளர் ! இளநிலை உதவியாளர் / பதிவறை எழுத்தர் ) அனுமதிக்கப்பட்ட ( sanctioned post ) பணியிடங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் உத்தேசமாக நிர்ணயம் செய்யப்பட்டது. தற்போது 2021-2022ஆம் கல்வியாண்டில் அரசாணையில் தெரிவித்துள்ளவாறு அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணியாளர் நிர்ணயம் செய்வது குறித்தான பணிகள் EMIS இணையதள வாயிலாக மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதால் , கீழ்க்குறிப்பிட்டுள்ள விவரங்களைப் பள்ளிவாரியாக EMIS ல் உடனடியாக பதிவேற்றம் செய்திட அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


1. தற்போது பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களின் எண்ணிக்கை 


2. அனுமதிக்கப்பட்ட உதவியாளர் / இளநிலை உதவியாளர் / பதிவறை எழுத்தர் பணியிடங்கள் ( sanctioned posts ) 


3. பணிபுரியும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் விவரங்கள் ( Non - Teahcing Staff Profile ) 

2 comments:

  1. இதைத்தான் ஒவ்வொருவரிடமும் கேட்டுக்கொண்டே இருப்பார்கள் போல

    ReplyDelete
  2. பொது கலந்தாய்வு வைக்க படவில்லை என்றால்.உள்ளாட்சி தேர்தலில் DMK 👎👎👎👎👎 ரொம்ப கஷ்டம்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி