ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்தால்தான் பதவி உயர்வு என்ற உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு
மூத்த ஆசிரியர்கள் தங்களுக்கு சாதகமாக அரசும் ஆசிரியர் சங்க அமைப்புகளும் மேல் முறையீட்டு வழக்கில் பதவி உயர்வுக்கு தகுதி தேர்வு தேவையில்லை என்று வாதிட்டுள்ளன
ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்து ஆசிரியராக பணி நியமனம் பெற்றுள்ள ஆசிரியர்கள் சார்பாக வாதிடப்பட்டது பதவி உயர்வுக்கும் தகுதி தேர்வு தேவை என்று
இந்தப் பிரச்சினையால் கடந்த 2020 முதல் பதவி உயர்வு அளிக்கப்படாமல் தமிழகத்தில் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்கள் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் என அனைத்து பணியிடங்களும் பதவி உயர்வு மூலம் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன
இவை சுமார் 5000 ஆகும்
இன்றைய தீர்ப்பின் மூலம் இந்த ஐந்தாயிரம் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட வாய்ப்புள்ளது
இன்று வழங்கப்படும் தீர்ப்பானது தமிழகம் மட்டுமல்லாமல் இந்திய துணை கண்டத்திற்கு பதவி உயர்வுக்கு தகுதி தேர்வு தேவையா இல்லையா என்று பொருந்தும் அளவிற்கு விவாதம் நடைபெற்றுள்ளது
தரப்படும் தீர்ப்பே இந்தியாவிற்கே பொருந்தும்
தீர்ப்பு சுமார் 200 பக்கங்களைக் கொண்டதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது
இன்றைய தீர்ப்பு ஆசிரியர் நியமனம் மற்றும் பதவி உயர்வில் வழங்கப்படும் ஒரு மைல் கல் தீர்ப்பு என வரலாற்று தீர்ப்பு என எடுத்துக் கொள்ளலாம்
காரணம் வழக்கு தொடுக்கப்பட்டது என்னவோ தமிழகத்தைச் சார்ந்து தான்
ஆனால் பல மாநிலங்கள் இந்த வழக்கில் தன்னை இணைத்துக் கொண்டு
சில மாநிலங்கள் தகுதித் தேர்வு தேவை என்றும்
சில மாநிலங்கள் தகுதி தேர்வு பதவி உயர்வுக்கு தேவை இல்லை என்றும் வாதிட்டுள்ளன
மத்திய கல்வி வாரியமும் நியமனத்திற்கு தான் தகுதி தேர்வு
பதவி உயர்வுக்கு என்று அறிவிக்கப்படவில்லை என்று வாதம் வைத்ததுடன்
2011 க்கு பிறகு பதவி உயர்வுக்கும் நேரடி நியமனத்திற்கும் தகுதி தேர்வு தேவை என்று பொருள் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளனர்
தற்பொழுது அண்மையில் திருத்தப்பட்ட விதிகளின்படி முதுகலை ஆசிரியர்கள் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியருக்கும் பதவி உயர்வுக்கு தகுதி தேர்வு தேவை அதாவது பணி நியமனத்திற்கு தேவை என்ற அடிப்படையில் திருத்தங்களை மேற்கொள்ள உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
எனினும் அடிப்படை விதிகளின்படி ஒருவர் தேர்வாகும் பொழுது எந்த விதிமுறைகளின் படி அவர் நியமனம் பெற்றாரோ அதற்கு பின்பர் அவருக்கு உண்டான பதவி உயர்வுக்கு
அதற்கு பின்னர் வரும் சட்டங்கள் பொருந்தாது என்ற விதிகளின்படி வாதங்கள் வைக்கப்பட்டுள்ளன
அதன் அடிப்படையில் தகுதி தேர்வு பதவி உயர்வுக்கு தேவையில்லை என்று பல மாநில அரசுகளும் குறிப்பாக தமிழ்நாடு அரசும் மூத்த ஆசிரியர் சங்கங்களும் தங்கள் சார்பாக வாதிட்டு உள்ளன
எல்லாவற்றிற்கும் இன்று முடிவு தெரிந்துவிடும் இன்னும் ஒரு சில மணிநேரங்களில்
பொறுத்தது பொருத்தோம் இன்னும் சில மணி நேரங்கள்
விடையை நோக்கிக் காத்திருப்போம்
எல்லாம் நன்மைக்கே
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி