களஞ்சியம் appஇல் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் விவரத்தை எவ்வாறு பதிவேற்றம் செய்வது? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 17, 2026

களஞ்சியம் appஇல் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் விவரத்தை எவ்வாறு பதிவேற்றம் செய்வது?

களஞ்சியம் appஇல் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் விவரம் புகைப்படத்துடன் update ஆகியுள்ளது...


*NHIS - Family

*member  update

*Enhancement


தற்போது களஞ்சியம் ஆப்பிள் குடும்ப உறுப்பினர்களை இணைக்கும் செயலி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது இதில் பதிவேற்றம் செய்யப்படும் உறுப்பினர்கள் மட்டுமே NHIS 2026 கார்டில் பெயர் சேர்க்கப்படும் என்பதால் அனைத்து ஆசிரியர்களும் மிக அவசரமாக தங்களது குடும்ப உறுப்பினர்களின் பெயர்களை அவர்களின் புகைப்படங்களோடு இதில் சேர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்


1. களஞ்சியம் ஆப்பை அப்டேட் செய்ய வேண்டும் 


2. பின்னர் அப்டேட் ப்ரோபைல் பட்டனை அழுத்தி உள்ளே செல்லவும் 

 

3. இதில் பேமிலி மெம்பர் டீடைல் என்பதனை அழுத்தி உள் சொல்லவும் 


4. இதில் ஏற்கனவே பதிவேற்றம் செய்யப்பட்ட குடும்ப உறுப்பினர்களின் பட்டியல் இருக்கும் அதில் புகைப்படத்தை இணைக்க வேண்டும் 


5. புகைப்படத்தை இணைக்க மேலே புகைப்படத்திற்கு அருகில் பேனா படத்தை அழுத்த வேண்டும் 


6. அதில் இரண்டு தேர்வுகள் காட்டப்படும் முதலாவது நேரடியாக புகைப்படம் எடுப்பது இரண்டாவது ஏற்கனவே எடுக்கப்பட்ட புகைப்படத்தை அப்டேட் செய்வது 


7. இதில் தங்களுக்கு தேவையானதை தேர்வு செய்து புகைப்படத்தை பெறவும் பின்னால் கீழே உள்ள அட்ஜஸ்ட்மென்ட் பயன்படுத்தி படத்தை தேவையான அளவிற்கு மாற்றி அப்டேட் செய்யவும் 


8. தாங்கள் சேர்க்க விரும்பும் குடும்ப உறுப்பினர் பட்டியலில் இல்லை என்றால் மேல் பகுதியில் add member என்ற தேர்வினை பயன்படுத்தி புதிய உறுப்பினரை சேர்க்கலாம் 


9. இதில் புகைப்படத்தை இணைக்க அதே பேனா சின்னத்தை பயன்படுத்தவும் மீதம் கேட்கப்படும் வினாக்களுக்கு சிவப்பு நிற நட்சத்திர குறியீடு உள்ள வினாக்கள் கட்டாயம் பதில் அளிக்கப்பட வேண்டும் நட்சத்திர குறியீடு இல்லாத வினாக்களுக்கு தங்களிடம் உள்ள உண்மையான தகவல்களை பதிவேற்றவும் தகவல் இல்லை என்றால் நட்சத்திர குறியீடு இல்லாத கேள்விகளை தவிர்க்கலாம் 


இது மிக மிக அவசரமாக செய்ய வேண்டிய பணி என்பதால் அனைத்து ஆசிரியர்களும் வெகு விரைவாக செய்து முடிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி