பள்ளிக் கல்வித் துறை - அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் 13.10.2026 அன்று நடைபெறுதல் - சார்ந்து.
மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அரசு செயலாளர் அவர்களின் தலைமையில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான (இடைநிலை/ தொடக்கக் கல்வி/ தனியார் பள்ளிகள்) ஆய்வுக்கூட்டம் கீழ்க்கண்டவாறு நடைபெறும் என்ற விவரம் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்/ மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
மேற்கண்ட கூட்டத்தில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்/அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் கண்காணிப்பு அலுவலர்கள் ஆகியோர் கலந்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

பள்ளிகளில் சிறப்பாக பளாளிக்கல்வித்துறை தகவல் சேகரிப்பு, ஒருங்கினைப்பு, நலத்திட்டங்கள், மற்றும் தலைமை ஆசிரியர்கள்,ஆசிரியர்களுக்கான எமிஸ்,யுடைஸ்,அலுவலகத்தில் கணிணி சார்ந்த பணி, மாணவர்கள் ஆசிரியர்களுக்கான தேர்வுக்கான நகல் எடுக்கும் பணி , மிக முக்கியமான உயர் தொழில்நுட்ப ஆய்வகத்தை உயிரோட்டமாக சிறப்பாக பராமரிக்கவும், தேவையான மென்பொருட்கள் பதிவு உட்பட பல்வேறு கல்வி சாரந்த த
ReplyDeleteபணிகளை சிறப்பாக செய்து வரும் தனியார் நிறுவனத்துடன் இனைந்த உயர் தொழில்நுட்ப ஆய்வக பயிற்றுனர்க்ள்(ஏஐ)ஒப்பந்த ஊழியர்களின் நிலையை முறையாக கல்வி உயர் அதிகாரிகள் அமைச்சர் ஐயாவிடம் எடுத்துக் கூறி 1) 9700 சம்பளம் தற்போதய விலைவாசியில் போதுமானதாக இல்லை எனவும், குறைந்தபட்சமாக மற்ற துறைகளில் உள்ளது போல இருபது ஆயிரம் வழங்கிடவும்.மே மாத ஊதியம் கிடைத்திடவும்,சரியான தேதியில் சம்பளம், காலி பணியிட நிரப்புதல்,அரசே நேரடியாக அவர்களை இனைத்து பணி பாதுகாப்பு கிடைக்க நேரடியாக ஊதியமாக வழங்கிட வேண்டும்.