டி.என்.பி.எஸ்.சி-யின் தேர்வுகளில் தமிழ்ப் பாடத்திற்கான மதிப்பெண்கள் குறைக்கப்பட்டதிற்கு எதிர்ப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 27, 2013

டி.என்.பி.எஸ்.சி-யின் தேர்வுகளில் தமிழ்ப் பாடத்திற்கான மதிப்பெண்கள் குறைக்கப்பட்டதிற்கு எதிர்ப்பு.

டி.என்.பி.எஸ்.சி-யின் தேர்வுகளில் தமிழ்ப் பாடத்திற்கான மதிப்பெண்கள் குறைக்கப்பட்டதை எதிர்த்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தேர்வர்கள் டி.என்.பி.எஸ்.சி அலுவலகத்தில் குவிந்தனர்.டி.என்.பி.எஸ்.சி-யின் பாடத் திட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்ட அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. கிராம நிர்வாக அலுவலர் தேர்வில் பொதுத் தமிழ் பாடம் நீக்கம், குரூப் 4 தேர்வில் தமிழுக்கான மதிப்பெண்கள் குறைப்பு போன்ற மாற்றங்கள்அதில் செய்யப்பட்டு இருந்தன.இதனால் கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர் என தேர்வர்கள் கருதுகின்றனர். நீக்கப்பட்ட பொதுத்தமிழ் பகுதி, தமிழ் இலக்கியம் தெரிந்தவர்கள் மட்டுமே பதிலளிக்கக் கூடிய வகையில் இருந்ததாகவும், அதனை நீக்கியதால் சாதாரண தேர்வர்களுக்கு கடினமாக இருக்காது எனவும் டி.என்.பி.எஸ்.சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி