இம்மாதம் 'குரூப் 4' தேர்வு முடிவு: டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பேட்டி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 5, 2014

இம்மாதம் 'குரூப் 4' தேர்வு முடிவு: டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பேட்டி.


இம்மாதம் இறுதியில் 'குரூப் 4' தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்,'' என டி.என்.பி.எஸ்.சி., தலைவர் அ.நவநீதகிருஷ்ணன் கூறினார்.மதுரையில் பதிவுத்துறை அலுவலர் சங்க இணைய தளம் துவக்க விழா நடந்தது. இதில் கலந்து கொண்ட நவநீதகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நேர்மையாகவும், வெளிப்படையான நிர்வாகத்துடன் பணிகளை மேற்கொள்கிறது.குரூப் 4 தேர்வை 13 லட்சத்து 50 ஆயிரம் பேர் எழுதியுள்ளனர். இதன் முடிவுகளை வெளியிட மிகுந்த கவனம் செலுத்தி வருகிறோம். முதல்வர் ஜெயலலிதா அறிவித்தபடி 69 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையில் அரசுத்துறையில் வேலை வாய்ப்பு அளிக்கப்படும். குரூப் 4 தேர்வு முடிவுகள் இம்மாதம் இறுதியில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குரூப் 1 தேர்வு குறித்து விளம்பரம் வெளியிட்டோம். ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பங்களை அனுப்பியுள்ளனர். இதன்முதற்கட்ட தேர்வு ஏப்.,26ல் நடக்கும், என்றார்.

1 comment:

  1. First he said group4 results November last week or December first week,then December last week, January first,second now this month last week.then what about group3 result held August3,what about last year group2 non interview post results,who will ask?Tnpsc valga valamudan

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி