பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் 'டேட்டா சென்டருக்கு' மாற்றம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 5, 2014

பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் 'டேட்டா சென்டருக்கு' மாற்றம்.


புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கணக்கு நடைமுறைகள், மாநில கணக்காயரிடம்(அக்கவுண்ட் ஜெனரல்) இருந்து, 'டேட்டா சென்டருக்கு' மாற்றப்பட்டது.1.4.2003க்குப் பிறகு
தமிழக அரசு பணியில் சேர்ந்தவர்கள், புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் உள்ளனர். இந்த ஊழியர்களிடம் மாதந்தோறும் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் 10 சதவீதத் தொகைக்கு, கணக்கு எண் ஒதுக்கீடு செய்து, அதை மாநில கணக்காயரே இதுவரை பராமரித்து வந்தார்.

இந்த நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான அரசு உத்தரவில், 31.12.2013 வரை ஊழியர்களுக்கு புதிய கணக்கு எண் கேட்டு, சம்பந்தப்பட்ட துறையின் அலுலவக அதிகாரிகள், மாநில கணக்காயருக்கு தகவல் அனுப்பினர். அதன்படி கணக்கு எண் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 1.1.2014 முதல் அரசு கருவூல கணக்குத்துறை கமிஷனருக்கே அனுப்ப வேண்டும். இந்த அலுவலர்களின் கணக்குகளும் மாநில டேட்டா சென்டருக்கு மாற்றப்படும். 2013-சு 14ம் ஆண்டுக்கான பிடித்தம் செய்த தொகைக்கான 'ஸ்லிப்' டேட்டா சென்டரில் இருந்து அனுப்பப்படும்.இனி கணக்குத் தொடர்பான எந்தக் கடிதப் போக்குவரத்தும் (விடுபட்ட உறவுத்தொகை) 31.12.2013 வரை மாநில கணக்காயரிடமும், அதன்பிறகு உள்ளவை அந்தந்த துறைக்கும் அனுப்பப்படும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி