அறிவிப்பு வெளியிட்டும் அரசுப் பள்ளிகளில் இன்னும் சுத்தமான குடிநீர் இல்லை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 10, 2015

அறிவிப்பு வெளியிட்டும் அரசுப் பள்ளிகளில் இன்னும் சுத்தமான குடிநீர் இல்லை!

 அரசு அறிவித்தும், 1,001 பள்ளிகளில், மாணவர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படாததால், மாணவ, மாணவியரின் சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் 1,074 துவக்கப் பள்ளிகள், 302 நடுநிலைப் பள்ளிகள், 147 உயர்நிலைப் பள்ளிகள், 98 மேல்நிலைப் பள்ளிகள் என, மொத்தம் 1,621 பள்ளிகள் உள்ளன. அனைத்து பள்ளிகளிலும், மாணவர்களின் உடல்நலத்தை பாதுகாக்கும் வகையில், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என, இரண்டு ஆண்டுகளுக்கு முன், .தி.மு.., ஆட்சி பொறுப்பேற்றதும் உத்தரவிட்டது.
1,001 பள்ளிகளில் இல்லை
தொடர்ந்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரும், சுத்தமான, சுகாதாரமான முறையில் குடிநீர் வழங்க வேண்டும் என, அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தினார்.
ஆனால், அரசு உத்தரவிட்டும், பெரும்பாலான பள்ளிகளில் இதுவரை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படவில்லை. குறிப்பாக, தற்போது, மாவட்டத்தில், 620 பள்ளிகளில் மட்டுமே, மாணவர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது. மீதமுள்ள பள்ளிகள் சுத்தமான முறையில் குடிநீர் வழங்கவில்லை.
இதனால், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர் காலரா, டெங்கு, பன்றிக் காய்ச்சல் போன்ற தொற்று நோய்களால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், தனியார் பள்ளிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவது குறித்து, எடுக்கும் விதிமுறைகளை, அரசு பள்ளிகளில் மேற்கொள்ளாதது, மாணவ, மாணவியர்களின் பெற்றோரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஆண்டுதோறும்...
இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத தலைமை ஆசிரியர் ஒருவர் கூறுகையில், "ஆண்டுதோறும் பள்ளிக்கு வழங்கப்படும் நிதியால், அரசு பள்ளிகளின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்கு முடியாமல், நாங்கள் திணறி வருகிறோம். சில பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கழகம், கிராம கல்விக்குழு மற்றும் ஊராட்சிகளின் துணையோடு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
மாணவர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்கு, அரசு ஒவ்வொரு ஆண்டும் தனியாக நிதியுதவி வழங்கினால் மட்டுமே, பள்ளிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எங்களால் வழங்க முடியும்" என்றார்.
இதுகுறித்து, பள்ளி கல்வி துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஆண்டுதோறும் துவக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றிற்கு, தலா 10 ஆயிரம் ரூபாய் முதல், 22 ஆயிரம் ரூபாய் வரை பராமரிப்பு நிதி வழங்கி வருகிறோம். இந்த நிதி, மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மாறுபடும்.
மேலும், சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியரிடம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவது குறித்து வலியுறுத்தி வருகிறோம். விரைவில், மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு செய்து, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
மாணவர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்கு, அரசு ஒவ்வொரு ஆண்டும் தனியாக நிதியுதவி வழங்கினால் மட்டுமே, பள்ளிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எங்களால் வழங்க முடியும்.


6 comments:

  1. ஒவ்வொருவரும் ஒருவரை காரணம் காட்டி அறிவிப்பு செயல் வடிவம் பெறுவதற்க்கு ஒருவரும் முயற்சி செய்வதாகவே இல்லை. அறிவிப்பு அறிவிப்பாகவே இருக்கும். மாணவர்கள் சேர்க்கை வருடாவருடம் குறைவதற்க்கு வாய்ப்புகளே உள்ளது. இதுவே தனியார் பள்ளிகளுக்கும் அரசு பள்ளிகளுக்கும் உள்ள நிர்வாக வேறுபாடுகள்.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. டெல்லி சட்டமன்ற தேர்தல் :

      பாஜக மாபெரும் வெற்றி.

      படுதோல்வியைத் தழுவியது காங்கிரஸ்.

      காங்கிரசைக் காட்டிலும் பாஜக வுக்கு 4 இடம் கூடுதல்.

      பாஜக : 4

      காங்கிரஸ் : 0

      Delete
    2. பாஜக மாபெரும் வெற்றியா? ஆம் ஆத்மி தான் மாபெரும் வெற்றி. பாஜக: 3

      Delete
  3. ஊழல் ஊழல் எங்கும் எதிலும்

    ReplyDelete
  4. Adutha tet annoncementen pothu tet pass cantedate 70% seniority cantedate 30% its true .......

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி