ஆன்லைன் சேர்க்கையைத் துவக்கிய சென்னை சி.பி.எஸ்.இ. பள்ளிகள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 10, 2015

ஆன்லைன் சேர்க்கையைத் துவக்கிய சென்னை சி.பி.எஸ்.இ. பள்ளிகள்

சென்னை நகரிலுள்ள சி.பி.எஸ்.. பள்ளிகள், ஆன்லைன் முறையிலான மாணவர் சேர்க்கையைத் துவங்கியுள்ளன.
சென்னை நகரிலுள்ள எஸ்.பி.. பள்ளி மற்றும் ஜுனியர் காலேஜ், பவன்ஸ் ராஜாஜி வித்யாஸ்ரம், அண்ணாநகர், கீழ்ப்பாக்கம் மற்றும் விருகம்பாக்கம் ஆகிய பகுதிகளிலுள்ள சின்மயா வித்யாலயா பள்ளிகள் மற்றும் மகரிஷி வித்யா மந்திர் பள்ளி போன்ற பள்ளிகள் அவற்றுள் முக்கியமானவை.
இப்பள்ளிகளில் கவுன்டர்கள் திறக்கப்பட்டுள்ளன மற்றும் அவை இரண்டு நாட்களுக்கு திறந்திருக்கும்.
இதன்மூலம், பெற்றோர்கள், தங்களின் பிள்ளைகளுக்கான விண்ணப்பங்களை வாங்கி, ஆன்லைனில் பூர்த்திசெய்ய முடியும். மேலும், சில பள்ளிகளில், கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் 25% ஒதுக்கீட்டு சேர்க்கை விண்ணப்பங்களுக்காக, கவுன்டர்கள், 2 நாட்களுக்கும் மேலாக திறந்திருக்கும்.
இந்த புதிய நடைமுறையின் மூலமாக, பெற்றோர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அவர்கள் தரப்பில் கூறுப்படுவதாவது: புதிய ஆன்லைன் முறையால், விண்ணப்ப நடைமுறைகளுக்காக, பள்ளியில் வந்து மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.
மேலும், இந்த புதிய நடைமுறை, பழைய முறையைவிட வெளிப்படையாக இருக்கிறது மற்றும் முதலில் வருவோருக்கு முன்னுரிமை போன்ற குறைபாடுகள் இதன்மூலம் களையப்பட முடியும். அதுமட்டுமின்றி, வெளியூர்களில், வெளிமாநிலங்களில் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும்கூட, அட்மிஷனில் பங்கேற்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக பள்ளிகள் தரப்பில் கூறப்படுவதாவது: விண்ணப்ப நடைமுறைகள், ஆன்லைன் முறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதால், பணிகள் எளிதாகியுள்ளன. இதன்மூலம், தரவுகளை(data) எளிதாக டவுன்லோடு செய்து, அவற்றை சரிபார்க்க முடியும்.
ஒரு குழந்தை சேர்க்கை பெற்றவுடன், அக்குழந்தையினுடைய அனைத்து விபரங்களையும், ஒரே கிளிக் செய்வதன் மூலமாக, பள்ளி registry -ல் பதிவேற்றம் செய்து வைத்துக்கொள்ள முடியும். இதுதவிர, 25% இடஒதுக்கீட்டு சேர்க்கையையும் சரியான முறையில் நடைமுறைப்படுத்த இந்த புதிய ஆன்லைன் முறை உதவிகரமாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


3 comments:

  1. Hãy đến với chúng tôi, chúng tôi sẽ cung cấp cho bạn Dịch vụ vận chuyển hàng thái lantốt nhất. Dịch vụ vận chuyển hàng thái lan về Việt Nam của giaonhan247 đảm bảo chuyển hàng nhanh chóng, an toàn với chi phí dịch vụ thấp nhất. Khách hàng có thể hoàn toàn yên tâm và tin tưởng khi vận chuyển hàng từ Thái Lan về Việt Nam qua giaonhan247.

    chuyển hàng từ anh về việt nam liên tục theo dõi lộ trình hàng hóa mà Quý khách gửi để kịp thời xử lý, khắc phục mọi tình huống có thể xảy ra trong quá trình Chuyển hàng từ Anh về Việt Nam.

    Chuyển hàng từ Anh về Việt Nam sẽ thông báo kết quả từng lần vận chuyển (gồm lịch trình vận chuyển, ngày giờ hàng đến, tên người ký nhận) cho Quý khách qua điện thoại hoặc email. công ty chuyên cung cấp dịch vụ ship hàng từ Nhật về Việt Nam hay bất cứ tỉnh nào cũng nhanh chóng gửi đến bạn. Với dịch vụ vận chuyển từ Nhật về Việt Nam chất lượng và uy tín, Giaonhan247.com là địa chỉ lý tưởng để bạn muốn gửi hàng từ Nhật về Việt Nam an toàn tại tphcm. ship hàng từ úc về việt nam Hiện nay nhu cầu tìm công ty thiết kế nội thất tphcm đang phát triển rất mạnh. Vậy bạn có đang theo kịp xu thế nội thất hiện nay? Bạn có muốn một căn nhà với nội thất theo phong cách hiện đại? Để có được không gian nội thất đẹp mắt và sang trọng, đảm bảo chất lượng thì bạn phải tìm được cho mình công ty thiết kế nội thất uy tín. Qua bài viết chúng tôi sẽ giới thiệu cho bạn công ty thi công và thiết kế nội thất ở TPHCM uy tín và chuyên nghiệp nhất.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி