C-TET:தேர்வுக்கு ஆன்-லைனில் அனுமதிச்சீட்டு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 8, 2015

C-TET:தேர்வுக்கு ஆன்-லைனில் அனுமதிச்சீட்டு


மத்திய அரசு பள்ளிகளிலும் (சிபிஎஸ்இ பாடத்திட்டம்), யூனியன் பிரதேச நிர்வாக அதிகாரத்துக்கு உட்பட்ட பள்ளிகளிலும் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர வேண்டுமானால் சி-டெட் எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இந்த ஆண்டுக்கான சி-டெட் தகுதித்தேர்வு பிப்ரவரி 22-ம் தேதி தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோவை உட்பட நாடு முழுவதும் பல்வேறு மையங்களில் நடைபெற உள்ளது. பட்டதாரி ஆசிரியர்களுக்கு காலை 9.30 மணி முதல் மதியம் 12 வரையிலும், இடைநிலை ஆசிரியர்களுக்கு பிற்பகல் 2 மணி முதல் மாலை 4.30 மணி வரையும் தேர்வு நடக்கும்.

தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான அனுமதிச் சீட்டு இணையதளத்தில் (www.ctet.nic.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு அனுமதிச்சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அறிவித்துள்ளது.

1 comment:

  1. அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலைவணக்கம்.
    ஆதிதிராவிட கள்ளர் நல பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் நியமன வழக்கு இறுதிகட்டத்தில் உள்ளது. அரசின் அட்வகேட் ஜெனரல் 9.2.15 மற்றும் 10.2.15 ஆகிய இரு தேதிகளில் ஒன்றில் ஆஜராவதாக ஆதிகார பூர்வ மையங்களில் இருந்து நண்பர் அகிலனுக்கு தகவல் கிடைத்துள்ளது. நமது வழக்கறிஞர் மற்றும் மதுரையில் உள்ள துணை அட்வகேட் ஜெனரல் ஆகியோர் வழக்கு 9.2.15 அன்று வரும் என்றும், ஆதிதிராவிட நலத்துறையில் 10.2.15 அன்று வரும் என்றும் தகவல் அளித்துள்ளனர். அனால் இந்த இரு தேதிகளில் ஒரு தேதியில் வழக்கு விசாரணைக்கு வரும் என்றும் அதில் அட்வகேட் ஜெனரல் ஆஜாரகுவார் என்றும் வழக்கு முடிந்துவிடும் என்றும் அகிலன் தகவல் கூறியுள்ளார். மேலும் இன்று மாலைக்குள் சரியான தகவல் மற்றும் தேதியினை பெற்று பதிவிடுவதாகவும் கூறியுள்ளார். வழக்கு திங்கட்கிழமை பட்டியலில் இல்லையெனில் கவலை படவேணாம் அவசர வழக்காக வருவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. அடவகேட் ஜெனரல் ஆஜராகும் தேதி நமது வழக்கு நடைபெறும். மேற்கூறிய இரு நாட்களில் ஒன்றில் அவர் ஆஜராவது மட்டும் உறுதியான தகவல் எனவும் கூறியுள்ளனர். நல்லது நடக்கட்டும் என வேண்டுங்கள்.....மாலை தகுந்த விளக்கம் சரியான தகவலுடன் அகிலன் பதிவிடுவார்....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி