மனித வாழ்க்கையில் இன்றைக்கு முக்கியமானதொரு இடத்தை பிடித்து இருப்பது செல்போன்கள். ஆனால் செல்போனை பயன்படுத்துவதால் பாதிப்புகள் ஏற்படுவதாக பரவலான கருத்துக்கள் இருந்து வந்தன.செல்போன் பேசும் போதும் செல்போன் கோபுரங்களில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சுகளால் மனித சமுதாயத்துக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
ஆனால் செல்போன் உபயோகிப்பதால் உடல் நலத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விளக்கம் அளித்துள்ளது.செல்போன் மற்றும் செல்போன் கோபுரங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து சுகாதாரஅமைச்சகத்தின் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணைந்து இதுகுறித்து ஆராய்ச்சி நடத்தியது. இந்த ஆராய்ச்சி முடிவில் செல்போன் பேசுவதாலும், செல்போன் கோபுரங்களாலும் மனிதர்களுக்கு நோய் பற்றி மருத்துவரீதியாக எந்த ஆதாரங்களும் இல்லை என்று மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் உறுதி செய்துள்ளது.இதுபற்றி மத்திய அரசுக்கு இந்த அமைப்புகள் அறிக்கை அளித்து உள்ளது.
உலக சுகாதாரஅமைப்பு இதுதொடர்பாக கடந்த 2000 முதல் 2011 மே 31-ந் தேதி வரை நடத்திய ஆய்வு அறிக்கையில் இந்த தகவலை உறுதி செய்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி