கட்டாய கல்வி உரிமை சட்டம் குறித்து, பெற்றோரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அரசுப் பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாட, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.நடப்பு கல்வியாண்டில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில், அரசு பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாட கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.உத்தரவில் கூறியிருப்பதாவது:
நடுநிலைப் பள்ளிகளுக்கு 2,250 ரூபாய், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு 2,450 ரூபாய், அனைவருக்கும்கல்வி இயக்கத்தின் மூலம், பள்ளி தலைமையாசிரியர்களுக்கு வழங்கப்படுகிறது.இத்தொகையைக் கொண்டு, ஆண்டு விழா நடத்த வேண்டும். விழாவில், கட்டாயக்கல்வி திட்டம் என்ற கருத்தை வெளிப்படுத்தும் வகையிலான கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும்.
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், ஆண்டு விழா குறித்து பெற்றோரிடையே கருத்து கேட்டு, அதன் விபரம், விழா புகைப்படம், உள்ளிட்டவை, மாவட்ட கல்வித்துறையில் ஒப்படைக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி