பள்ளிக்கல்வி பணிகளை முடக்கிய வழக்குகளை முடிக்க உத்தரவு: 500க்கும் மேற்பட்ட வழக்குகளால் கல்வி துறை ஸ்தம்பிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 17, 2015

பள்ளிக்கல்வி பணிகளை முடக்கிய வழக்குகளை முடிக்க உத்தரவு: 500க்கும் மேற்பட்ட வழக்குகளால் கல்வி துறை ஸ்தம்பிப்பு


பள்ளி கல்வித் துறை பணிகளை முடக்கியுள்ள, 500 வழக்குகளை, ஓரிரு மாதங்களில் முடிக்க நடவடிக்கை எடுக்குமாறு, கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பள்ளி கல்வித்துறையின் கீழ், தொடக்கக் கல்வி, பள்ளி கல்வி, மெட்ரிக், மாநில சர்வ சிக் ஷ அபியான், ராஷ்டிரிய மத்யமிக் சிக் ஷ அபியான், தேர்வுத்துறை, தமிழ்நாடு பாடநூல் கழகம், பொது நூலகத்துறை, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மற்றும் மாநில ஆசிரியர் கல்வியியல் பயிற்சி நிறுவனம் உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட இயக்குனரங்கள் உள்ளன.

பணிகள் முடக்கம்:

இவற்றில், ஆசிரியர் நியமனம், ஆசிரியர் பணி மாறுதல், ஆசிரியர் தேர்வு வாரியத் தேர்வின் குளறுபடிகள், பாடநூல் கழக, 'டெண்டர்' பிரச்னைகள், தேர்வுத்துறை மறுமதிப்பீடு பிரச்னைகள், டிப்ளமோ தேர்வுப் பிரச்னை, 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வு பிரச்னைகள்என, பல வகை வழக்குகள், சென்னை உயர் நீதிமன்றம், மதுரை உயர் நீதிமன்றக் கிளை மற்றும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளால், கல்வித் துறையில் பல பணிகள் முடங்கிக் கிடக்கின்றன. பல பணி நியமனங்கள், புதிய இடங்கள் உருவாக்குதல், தேர்வு முடிவுகள் வெளியிடுதல், புத்தகங்கள் அச்சிடுதல், புதிய ஆட்களை நியமித்தல் போன்ற பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, வரும் கல்வியாண்டிலாவது வழக்குகளை விரைந்து முடிக்க, கல்வித் துறைக்கு அரசு உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

ஆலோசனை கூட்டம்:

இதுதொடர்பாக, பள்ளி கல்விச் செயலர் சபிதா தலைமையில், பள்ளி கல்வித்துறை இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் உள்ளிட்ட அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்தது.இதில் துறை வாரியாக வழக்குகள் பட்டியலிடப்பட்டன. இதில், 500க்கும் மேற்பட்ட முக்கிய வழக்குகள் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்குமாறும், இதுதொடர்பாக துறை வழக்கறிஞர்களுடன்பேசி முடிவெடுக்குமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

25 comments:

  1. ஆதி திராவிடர் தேர்வு பட்டியல் எப்போது?

    ADW LIST VITTACHA?

    ReplyDelete
  2. ஆதி திராவிடர் தேர்வு பட்டியல் எப்போது?

    ADW LIST VITTACHA?

    ReplyDelete
  3. ஆதி திராவிடர் தேர்வு பட்டியல் எப்போது?

    ADW LIST VITTACHA?

    ReplyDelete
  4. ஆதி திராவிடர் தேர்வு பட்டியல் எப்போது?

    ADW LIST VITTACHA?

    ReplyDelete
    Replies
    1. பத்தாண்டுகளுக்கு பிறகு தான் கொஞ்சம் காத்திரு

      Delete
    2. பத்தாண்டுகளுக்கு பிறகு தான் கொஞ்சம் காத்திரு

      Delete
  5. This is too late to initiate this action. Any how good steps.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  6. ஆதி திராவிடர் தேர்வு பட்டியல் எப்போது?

    ADW LIST VITTACHA?

    ReplyDelete
  7. ஆதி திராவிடர் தேர்வு பட்டியல் எப்போது?

    ADW LIST VITTACHA?

    ReplyDelete
  8. ஆதி திராவிடர் தேர்வு பட்டியல் எப்போது?

    ADW LIST VITTACHA?

    ReplyDelete
  9. hello friends,oru comment ah oru time publish panunga.

    ReplyDelete
  10. TRB Second list varuma , please tell any one

    ReplyDelete
  11. D.TEd instituions are almost closed. Well done. Soon B.Ed institutions are also to be closed because of two years of course duration. Doctor is studying for five years course and teachers are also five years. But more difficult in tet and trb and lot.

    ReplyDelete
  12. Tet 2013 supreme court valakkugal
    Sikkiram mudindhu innoru list velivara prarthippom
    SAIRAM

    ReplyDelete
  13. How to apply mutual transfer ? Whom do I want to meet CEO office

    ReplyDelete
    Replies
    1. தெறிந்தால் காெஞ்சம் சொல்லுங்க நண்பா

      Delete
    2. தெறிந்தால் காெஞ்சம் சொல்லுங்க நண்பா

      Delete
  14. முடக்கம் என்பது வழக்குகள் அல்ல, தேர்வு பட்டியலில் உள்ள குளறுபடிகளால், முறைகேடுகளால் அகவே மக்கள் நீதிமன்றத்தை நாடியிருக்கிறார்கள் நீதி கிடைக்கும் என்ற நோக்கத்தோடு, பொறுத்திருந்து பார்போம் நீதி பிழைக்குமா என்று... ?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி