ஏழாவது ஊதிய குழு ஆணையம்: 23.55 சத உயர்வு வழங்க ஒப்புதல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 20, 2015

ஏழாவது ஊதிய குழு ஆணையம்: 23.55 சத உயர்வு வழங்க ஒப்புதல்

மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதியத்தை திருத்தி அமைப்பதற்காக உருவாக்கப்பட்ட ஏழாவது ஊதியக் குழு, 23.55 சதம் உயர்வு வழங்குவதற்கான பரிந்துரைகளை இன்று மத்திய அரசிடம் அளித்தது.நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வதியர்களின் ஓய்வூதியத்தை மாற்றியமைக்க, நீதிபதி ஏ.கே.மாத்தூர் தலைமையிலான 7-வது ஊதிய பரிந்துரைக் குழுவை, முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நியமித்தது.


இந்தக் குழு, தனது பரிந்துரைகளை இன்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லியிடம் சமர்பித்தது.

பரிந்துரைகள் விவரம

்*.அரசு ஊழியர்களுக்கான ஊதியம் மற்றும் படிகள் 23.55 சதமாக உயர்த்தப்படும்
*.இந்த ஊதிய உயர்வுகள் ஜனவரி 2016 முதல் அமல்படுத்தப்படும
்*.குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ. 18,000 ஆக இருக்கும், அதிகபட்ச ஊதியமாக ரூ. 2.25 லட்சமாக இருக்கும்
*.ஆண்டுதோறும் 3 சத ஊதிய உயர்வு வழங்கப்படும்
*.ஓய்வூதியர்களுக்கு 24 சத உயர்வு வழங்கப்படும
்*.பாதுகாப்புத் துறையை தொடர்ந்து அனைத்து மத்திய அரசு பணியாளர்களுக்கும் ஒரே பதவி ஒரே ஓய்வூதிய முறை அமல்படுத்தப்படும்.
*.பணிக்கொடைக்கான உச்சவரம்பு ரூ. 10 லட்சத்திலிருந்து ரூ. 20 லட்சமாக உயர்த்தப்படும். மேலும், பஞ்சபடி 50 சதத்துக்கும் அதிகமாக உயர்த்தப்படும்போது, இந்த உச்சவரம்பு மேலும், 25 சதம் உயர்த்தப்படும்.
*.தற்போது மாதத்திற்கு ரூ. 90 ஆயிரம் ஊதியம் பெறும் அமைச்சரவை செயலர் இனி ரூ. 2.25 லட்சம் பெறுவார்.
*.இந்த பரிந்துரைகளால் மத்திய அரசுக்கு ரூ. 73,650 கோடியும், ரயில்வேக்கு ரூ. 28,450 கோடியும் கூடுதல் செலவாகும்.
*.நடப்பில் உள்ள 52 படிகள் வழங்கும் முறை 36 ஆக குறைக்கப்படும்
*.இந்த பரிந்துரை மூலம் 47 லட்சம் ஊழியர்களும், 52 லட்சம் ஓய்வூதியர்களும் பயன்பெறுவர்.

2 comments:

  1. அன்பு நண்பர்களே , தவறாமல் இப்போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள் . கண்டிப்பாக வெற்றி பெரும் நிலையில் உள்ளது . அணைத்து நண்பர்களும் கல்வி சம்பந்த பட்ட இனைய தளங்களை பார்ப்பது இல்லை . எனவே நண்பர்களுக்கு குறுந்தகவல் மற்றும் வாட்ஸ் அப்ப் முலம் தெரிய படுத்துங்கள் . அதிக அளவு நண்பர்கள் கலந்து கொள்வதில் தான் நம் வெற்றி உள்ளது. இருக்கும் 6000 பேரில் ஒவ்வொருவரும் , நம்மை தவிர மற்ற 5999 பேர் கலந்து கொள்வார்கள் என்ற எண்ணத்தில் இருந்து விடதீர்கள். என்றென்றும் அன்புடன் . தகடூர் தனபால்.

    ReplyDelete
    Replies
    1. Nanga vellore la irunthu 7 friends varom....

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி