மேல்நிலை பொதுத்தேர்வுகளுக்கு - பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு பணிக்கு நியமனம் செய்வதை கைவிட கோரிக்கை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 28, 2025

மேல்நிலை பொதுத்தேர்வுகளுக்கு - பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு பணிக்கு நியமனம் செய்வதை கைவிட கோரிக்கை!

 

மேல்நிலை பொதுத்தேர்வுகளுக்கு - பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு பணிக்கு நியமனம் செய்வதை கைவிட ஆசிரியர் கூட்டணி கோரிக்கை

1. நடைபெற உள்ள மேல்நிலைத் தேர்வுகளுக்கு ( 11 மற்றும் 12 ஆம் வகுப்புகள் ) பட்டதாரி ஆசிரியர்களை அறை கண்காணிப்பாளர்களாக நியமனம் செய்யப்படுகின்றனர் . இதனால் சுமார் 1 மாத காலத்திற்கு பட்டதாரி ஆசிரியர்களால் 10 - ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முறையாக தேர்வுக்கான பயிற்சி கொடுக்க முடிவதில்லை . இதனால் 10 - ஆம் வகுப்பு மாணவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு , பொதுத் தேர்வில் தேர்ச்சி விழுக்காடு குறைய காரணமாக அமைகிறது . ஆகவே மேல்நிலைத் தேர்வுகளுக்கு பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு பணிக்கு நியமனம் செய்வதை கைவிட வேண்டுகிறோம் . 

2. நாமக்கல் மாவட்டத்தில் 50 % தனியார் பள்ளிகள் இருக்கின்றன . எனவே தனியார் பள்ளி ஆசிரியர்களையும் தேர்வு பணிக்கு நியமிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமாறு கனிவுடன் கேட்டுக்கொள்கிறோம் .

2 comments:

  1. பட்டதாரி ஆசிரியர்கள் யாரும் நியமிக்க படவில்லை ,வீரனான பொய் செய்தி

    ReplyDelete
  2. Private school la LKG to 5 std edukura staffs ellam hall superviser duty potu irukanga. How they run school

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி