சிவகங்கையில் முன்தேர்வு முறைக்கு பட்டதாரி ஆசிரியர் கழகம்எதிர்ப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 16, 2015

சிவகங்கையில் முன்தேர்வு முறைக்கு பட்டதாரி ஆசிரியர் கழகம்எதிர்ப்பு

சிவகங்கை மாவட்டத்தில் காலாண்டு,அரையாண்டு, தேர்வுக்கு முன்பு "முன் தேர்வு' என்ற பெயரில் நடத்தப்படும் தேர்வுகளால் தேர்வுக்குரிய பாடங்களை நடத்த முடியாமல் ஆசிரியர்கள் தவிப்பிற்குள்ளாகின்றனர்.இந்த திட்டத்தை கைவிட வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.


தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் பத்தாம், பிளஸ் 2 மாணவர்களுக்கு மாதத்தேர்வு, பருவத்தேர்வு, காலாண்டு, அரையாண்டு, பொதுத்தேர்வு நடத்தப்படுகின்றன. இதில் காலாண்டு தேர்விற்கு முன்பு பாடத்திட்டத்தில் பாதிப்பகுதி நடத்தப்பட்டிருக்க வேண்டும்.அரையாண்டு தேர்விற்குள் பாடப்புத்தகத்தில் உள்ள அனைத்து பாடங்களையும் நிறைவு செய்திருக்க வேண்டும் என்று கல்வித்துறை வரையறைஅடிப்படையில் ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர். ஆனால் சிவகங்கை மாவட்டத்தில் பத்தாம், பிளஸ்2 வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கனவே நடத்தப்படும் தேர்வுகளோடு மேலும் கூடுதலாக தேர்வு நடத்தப்படுகிறது.காலாண்டு தேர்விற்கு முன்பு "முன் காலாண்டு தேர்வு' என்ற பெயரில் தேர்வு நடத்தப்பட்டது.


தேர்வு நடத்த ஒரு வாரம், விடைத்தாள் திருத்துவதற்கு சில நாட்கள் என ஆசிரியர்கள் சில நாட்கள் பாடங்களை நடத்த முடியாத நிலை ஏற்படுகிறது. இவ்வாறு இருக்க தற்போது டிசம்பரில் அரையாண்டு தேர்வு நடக்க உள்ளது. இதற்கு முன்னர் "முன் அரையாண்டு தேர்வு' அறிவிக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பிற்கும், பிளஸ் 2 விற்கும் நவம்பர் 19 முதல் டிசம்பர் 1 வரை இத்தேர்வு நடக்கிறது. இது போக இடை நிலைக்கல்வி திட்டத்தில் ஆசிரியர்களுக்கு 10 நாள் பயிற்சி என்ற அடிப்படையில் 4 பாடத்திற்கு 40 நாட்கள்பயிற்சியளிக்கப்படுகிறது.இந்த காலங்களில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடம் நடத்த முடியாத நிலை ஏற்படுகிறது. அண்மையில் பள்ளி கல்வித்துறை வினாத்தாள் மாற்றம்என்ற அடிப்படையில் மாணவர்களுக்கு பாடப்புத்தகத்தில் உள்ளிருந்து வினாக்கள் கேட்கப்படும் என அறிவித்துள்ளது.


தற்போது தேர்வு நாட்கள் அதிகமாகவும், கற்பித்தல் நாட்கள் குறைவாகவும் இருப்பதால் மாணவர்களுக்கு பாடப்புத்தகத்தில் உள்ளதை முழுமையாக விளக்க முடியாத நிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே முன் தேர்வு முறை என்ற திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டுமென தமிழ்நாடு பட்டதாரி, மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி