மின் கட்டணம் செலுத்த ஒரு மாதம் அவகாசம்? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 17, 2015

மின் கட்டணம் செலுத்த ஒரு மாதம் அவகாசம்?

'தொடர் மழையால், பொதுமக்கள் கடும் பாதிப்பு அடைந்துள்ளதால், மின் கட்டணம் செலுத்த, ஒரு மாதம் அவகாசம் வழங்க வேண்டும்' என, தமிழ்நாடு மின் வாரியத்திற்கு, நுகர்வோர் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு மின் வாரியத்திற்கு, 1.80 கோடி வீட்டு மின் நுகர்வோர் உள்ளனர்.


மின் பயன்பாடு கணக்கு எடுக்கப்பட்டதில் இருந்து, 20 தினங்களுக்குள், மின் கட்டணம் செலுத்த வேண்டும்.சிக்கல்:இரண்டு வாரங்களாக, சென்னை உட்பட, பல மாவட்டங்களில், கன மழை பெய்துவருகிறது. சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளதால், மின் கட்டண மையங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், 'சர்வர்' பழுது காரணமாக, மின் கட்டண மையங்களில் உள்ள கம்ப்யூட்டர், இணைய சேவை பாதிக்கப்பட்டு உள்ளது; இதனால், மின் கட்டணம் செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


மழை நீடிக்கும்:


இதுகுறித்து மின் நுகர்வோர் சிலர் கூறியதாவது:நவ., 7 முதல், மழை பெய்து வருவதால், வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாமல், தினக்கூலி மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மின் கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி தேதி, கடந்த வாரத்துடன் முடிவடைந்து விட்டது. 'மழை நீடிக்கும்' என, வானிலை மையம் தெரிவித்துள்ளது.இதனால், கடைசி தேதி முடிந்தவர்கள் அபராதம் இன்றி இந்த மாதம் இறுதி வரை, மின் கட்டணம் செலுத்த அனுமதிக்க வேண்டும். எனவே, கால அவகாசம் அளிப்பது குறித்த அறிவிப்பை, மின் வாரியம் உடனே வெளியிட வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி