Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

புதிய பாடத்திட்டத்தில் பணி வாய்ப்பு - 40000 கம்ப்யூட்டர் ஆசிரிய பட்டதாரிகள் எதிர்பார்ப்பு

விரைவில் அமலாகும் புதிய பாடத்திட்டத்தில், பி.எட்., படித்து காத்திருக்கும்,39 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, கணினி ஆசிரியர்களுக்கு, வேலை வாய்ப்புகிடைக்கும்என்ற, எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.
தமிழகத்தில், சமச்சீர் கல்வித்திட்டம்அமல்படுத்திய போது, அரசுப்பள்ளிகளில் பத்தாம் வகுப்பு வரை, கணினி அறிவியல்பாடத்திட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால், ஆசிரியர்கள் யாரும் பணிக்குஅமர்த்தவில்லை. அடுத்த ஆண்டே, கணினி கல்வி பாடத்திட்டம், எவ்விதமுன்னறிவிப்பும் இன்றி முடக்கப்பட்டது.

கணினி கல்வி முடித்த பட்டதாரிகள்பலகட்டமாக, போராட்டம் நடத்தியும், அரசு கண்டுக் கொள்ளவில்லை.மேலும்,1999ல்,மேல்நிலை வகுப்புகளில், முக்கிய பாடப்பிரிவுகளில், கணினி அறிவியல் பாடம்இணைக்கப்பட்டது. இப்பாடத்தை கையாள கணினி சார் சான்றிதழ் படிப்பு முடித்த,1,800 ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர். இதை எதிர்த்து, பி.எட்., முடித்தகணினி பட்டதாரிகள் போராடியதால், பணியில் அமர்த்திய கணினி ஆசிரியர்களுக்கு,போட்டித்தேர்வுகள் நடத்தப்பட்டன. இதில், 1,200 ஆசிரியர்கள் தேர்ச்சியடைந்து,பணி நியமனம் செய்யப்பட்டனர். இதற்கு பின், கணினி ஆசிரியர் பணியிடம் நிரப்ப,எவ்வித அறிவிப்பும் இல்லை.கடந்த 2006க்கு பின், ஆயிரத்துக்கும் மேற்பட்ட, தரம்உயர்த்தப்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளிகளில், கணினி அறிவியல் பாடத்திட்டம் இல்லை.கணினி அறிவியல் பாடத்தை, கல்லுாரிகளில் முக்கிய பாடப்பிரிவாக தேர்வு செய்துபடித்து, பி.எட் முடித்து, வேலையில்லாமல், 39 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்காத்திருக்கின்றனர். இவர்களுக்கு பணி வாய்ப்பு அளிக்க, அரசு எவ்விதமுயற்சியும் மேற்கொள்ளவில்லை.

 மத்திய அரசு கொண்டுவந்த, புதிய பாடத்திட்டம்அமலானால், படித்து வேலையில்லாமல் காத்திருக்கும், கணினி பட்டதாரிகளுக்கு, பணிவாய்ப்பு கிடைக்கும் என, கணினி ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.தமிழ்நாடுபி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்க மாநில செயலாளர் குமரேசன்கூறுகையில், ''பள்ளிகளில் அலுவலகம் சார் பணிகளுக்கு கூட, பி.எட்., முடித்தகணினி அறிவியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு அளிக்கவில்லை.தற்போது பொறியியல்மாணவர்களும், பி.எட்., படிக்கலாம் என்ற அறிவிப்பு வெளியிட்டிருப்பதுஅதிர்ச்சியளிக்கிறது. புதிய பாடத்திட்டம் அமலானால், கூடுமானவரை கணினிஆசிரியர்கள் பணியிடம் உருவாக்கப்படும். பள்ளிகளில் 3ம் வகுப்பிலிருந்து கணினிகல்விக்கு முக்கியத்துவம் தருவதை வரவேற்கிறோம்,'' என்றார்.

16 comments

 1. Replies
  1. 2013 TET தேர்ச்சி பெற்ற நண்பர்களே!
   நடைமுறையில் உள்ள வெயிட்டேஜ் முறை மாற்றி அமைத்தால் பாதிக்கபடுபவரா நீங்கள் ,.,
   உடனே அழையுங்கள்
   Cell No : 8012776142
   9500959482
   99426 61187
   90472 94417

   Delete
 2. It is a great news for the B.ed graduates in compsci like me.The govt should consider these graduates atleast now.

  ReplyDelete
 3. When comp science subject comes for lower grade classes, they use science teachers to handle cs subject...no possibilities for cs graduates to handle it.they only appoint very few teachers to handle +1 and +2 in future.

  ReplyDelete
 4. Winners pg trb coaching centre.computerscience,class starts:1.10.17.sunday time:9.30a.m place:C.S.I.boys hr.sec.school.p.s.park.erode.cell:8072087722

  ReplyDelete
 5. Winners pg trb coaching centre.computerscience,class starts:1.10.17.sunday time:9.30a.m place:C.S.I.boys hr.sec.school.p.s.park.erode.cell:8072087722

  ReplyDelete
 6. ஒன்னு eligible குறைந்தவர்களை (B.Ed முடிக்காமல்,PGDCA (or) Diplamo படித்தவர்கள் )
  நியமிப்பது
  அல்லது
  தகுதியிருந்தும், குறைந்த சம்பளத்தில் பகுதி நேரம் எனக்கூறி அலைக்கழித்து விடுவது.
  இப்படியே கடந்த 1999லிருந்து 2017 வரை "இதுஅரசின்கொள்கை முடிவு " என்றபதிலை திரும்ப திரும்ப கூறிக் கொண்டிருக்கும்,
  அரசாங்கத்திடம்
  எங்கள்
  வேலைலையில்லா கணினிபட்டதாரிகளின்
  சார்பில்
  ஒரே ஒரு
  கேள்வி
  மகா பிரபு (அரசே) ,
  "உங்கள் கொள்கை முடிவு "
  தான் என்ன?,?
  என்ன?????? என்ன???? என்ன???? என்ன????😑😓

  ReplyDelete
 7. This news gives inspiration for c.s teachers. So keep on publishing, then only our govt wil consider

  ReplyDelete
 8. Gud mor, Sists,Ano,Sushi,Revathi,உங்கள் அனைவருக்கும் என் பணிவான வேண்டுகோள்,சமூக வலையதளத்தில் தேவையற்ற சொந்த விவகாரங்களை பேசுவதை நிறுத்திக் கொள்ளலாமே.

  ReplyDelete
 9. message whatsapp group.7598140960 only Trb polytechnic English candidates.here u discuss about ur scores

  ReplyDelete
 10. Please tell me best coaching centre in Chennai or kanchipuram

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives