சமச்சீர் கல்வி பாடத்திட்டம் தரம் குறைந்ததா? யார் சொன்னது? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 27, 2017

சமச்சீர் கல்வி பாடத்திட்டம் தரம் குறைந்ததா? யார் சொன்னது?

நீட் தேர்வும் அதைத் தொடர்ந்து அரியலூர் மாணவி அனிதாவின் மரணமும் தமிழக அரசின் சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தைப் பற்றிய விவாதங்களை கிளப்பியுள்ளன.
பெரும்பாலோனோர் சமச்சீர் கல்வி பாடத்திட்டம் தரம் குறைந்தது போலவும், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் தரம் மிகவும் உயர்வானது போலவும் கருத்தை திணித்து வருகிறார்கள்.
கணிதம், அறிவியல், புவியியல் பாடத்திட்டங்கள் அனைத்து கல்வி முறையிலும் ஒன்றுதான், சமூக அறிவியல், வரலாறு மற்றும் மொழிப் பாடங்கள்தான் வேறுபடுகின்றன. சமச்சீர் கல்வி பாடத்திட்டம் தரம் குறைந்தது என்று சொல்பவர்கள், முதலில் அது எப்படி வடிவமைக்கப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

மத்திய மாநில அரசுகளில் கல்விப் பாடத்திட்டங்களை வடிவமைப்பதற்கு உறுதுணையாகவும் தக்க ஆலோசனை வழங்கவும் மத்திய அரசால் 1961ம் ஆண்டு NCERT (The National Council of Educational Research and Training) என்ற தன்னாட்சி அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பின் வழிகாட்டுதல்களின் படி ஒவ்வொரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை National Curriculum Framework (NCM) வெளியிடப்படும். அதாவது தேசிய பாடத்திட்ட வரைமுறை என்று சொல்லலாம்.

இதன் அடிப்படையில் ஒவ்வொரு மாநில மத்திய அரசின் பாடத்திட்டங்களும் ஆய்வு செய்யப்பட்டு, அனுமதி பெற்ற பிறகே அமலுக்கு வரும். கடைசியாக 2005ம் ஆண்டு தேசிய பாடத்திட்ட வரைமுறை (NCM) வெளியானது. அதன் அடிப்படையில் தான் தமிழக அரசின் சமச்சீர் கல்வி பாடத்திட்டமும் ஆய்வு செய்யப்பட்டு , NCERT ஒப்புதலுடனே அமல் செய்யப்பட்டுள்ளது.
சமச்சீர் கல்வி 11வது 12வது வகுப்புக்கான அனைத்து பாடத்திட்டங்களையும் NCERT க்கு தமிழக அரசு அனுப்பியது. ஒவ்வொரு பாடத்திற்கும் உரிய துறை சார்ந்த வல்லுனர்களால் ஆய்வு செய்யப்பட்டு, NCERT ன் ஆய்வறிக்கை தமிழக அரசுக்கு அனுப்பட்டது. NCERT ன் இந்த ஆய்வறிக்கை, தமிழக அரசின் சமச்சீர் கல்வி பாடத்திட்டங்கள் NCM 2005 வரையறைக்கு உட்பட்டதாக இருக்கிறது என்று கூறியுள்ளது.

அதன் பிறகே தமிழக அரசு நான்கு பாடத்திட்டத்திற்கும் பொதுவான சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தை அமல்படுத்தியது. மத்திய அரசின் தன்னாட்சி அமைப்பான NCERT ன், தற்போது நடைமுறையில் இருக்கும் 2005ம் ஆண்டு வரையறைக்கு உட்பட்டு, NCERT ஒப்புதல் அளித்துள்ள பாடத்திட்டத்தை, தரம் குறைந்தது என்று எப்படி கூறலாம். மாநில அரசு தன்னிச்சையாக முடிவு செய்யவில்லையே. ஒருவேளை தரம் குறைவு என்றால் அது மத்திய அரசின் NCERT தரத்தைத் தானே குறிப்பிடும்.
முத்துக்குமரன் குழு, தமிழ் நாடு பாடத்திட்டம், மெட்ரிகுலேஷன் பாடத்திட்டத்தை விட சிறந்தது என்று சான்று அளித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. எந்த ஒரு பாடத்திட்டமும் மாற்றத்திற்குரியதே. ஆகையால் ஒவ்வொரு ஐந்தாண்டுக்கு ஒரு முறை பாடத்திட்டத்தை மாற்றுவதற்கு தமிழக அரசு குழுக்களை நியமித்துள்ளது. ஒவ்வொரு மாற்றமும் NCERT ஒப்புதலுக்குப் பிறகே அமலுக்கு வருகிறது. கடைசியாக தமிழக அரசின் பாடத்திட்டம் 2010ம் ஆண்டு மாற்றம் செய்யப்பட்டது. அடுத்த பாடத்திட்ட மாற்றம், பாடத்திட்டக் குழுவின் பரிசீலனையில் இருக்கிறது.

ஆக, தமிழக அரசு NCERT தேசிய ஆணையத்தின் வரையறைக்கு உட்பட்டும், குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை உரிய மாற்றங்களும் செய்து கொண்டு தான் வருகிறது. தமிழக அரசின் பாடத்திட்ட தரம் சரியில்லை என்பவர்கள் முதலில் மத்திய அரசின் NCERT யிடம் தான் முறையிட வேண்டும்.
- கவிதா பாண்டியன்

5 comments:

  1. Winners pg trb coaching centre.computerscience,class starts:1.10.17.sunday time:9.30a.m place:C.S.I.boys hr.sec.school.p.s.park.erode.cell:8072087722

    ReplyDelete
  2. தமிழக அரசின் பாடத்திட்டமான சமச்சீரை தரம் குறைந்தது என்று விமர்சிக்கும் நபர்கள் மீது ஏன் தமிழக அரசு மானநஷ்ட ஈடு வழக்கு போடக்கூடாது.?.?????.

    ReplyDelete
  3. மற்றொன்று
    மாநில அரசின் பாடத் திட்டமான சமச்சீர் மற்றும் தனியார் பள்ளியில் மெட்ரிக் கிலும் படிக்க வைக்கப்பட்ட தமிழக மாணவர்களுக்கு ,CBSC யின் பாடத்திட்டத்தில் கேள்வி கேட்டது யாருடைய பிழை
    மத்திய / மாநில அரசின் பிழையா???? அல்லது
    மாணவர்களின் பிழையா?,,,,????

    மேலும்

    நீட்டிலிருந்து தமிழகத்திற்கு எப்படியாவது விலக்கு பெற்றுத் தந்துவிடுவோம் என்ற நம்பிக்கையை ஒவ்வொரு செய்தியாளர்களின் பேட்டியின் போது,
    கல்வி அமைச்சரிலிருந்து முதலமைச்சவர் வரை நம்பிக்கை வார்த்தைக் கொடுத்தது போதாது என்று
    மத்திய அமைச்சரே தனது செய்தியர்களின் சந்திப்பில் நம்பிக்கை வார்த்தைகளைத் தெரிவித்து
    வந்ததின் அடிப்படையிலும்,
    " தமிழக மாணவர்களுக்கு நம்பிக்கை துரோகம் இழைக்கப்பட்டுள்ளது"
    என்றுகருதி ,
    நீதிமன்றமே முன்வந்து ஏன்
    பொது நல வழக்காக பதிந்து கேள்வி கேட்கக் கூடாது?,,,,????
    தமிழக மாணவர்களுக்காக........

    ReplyDelete
  4. Apo tharama irukuna en neet jee pass panna mudiyama mukkurom, summa sappa kattu kattama syllabus revise panna sollunga

    ReplyDelete

  5. நீட் ஒன்னும் புளிதத் தேர்வு கிடையாது.

    முதல்ல ஒன்ன புரிந்து கொள்ளுங்கள்.

    கேள்வி கேட்டும் முறையில்
    தான்
    CBSC, சமச்சீரிலிருந்து வேறு படுகிறது.

    But

    leveal of StandardS are equal both CBSC & சமச்சீர் .

    உங்களுக்கு சந்தேகங்கள் இருந்தால் இரண்டு புத்தகங்களையும் வாங்கி சோதித்து பார்க்கவும்.

    திரும்ப, திரும்ப ஒரு விசயத்தை சொன்னால் அது உண்மை போலத் தோனும்.

    அதுபோலத்தான்

    CBSC சமச்சீரை விட தரமானது என்பதும்.

    முயற்சியும், பயிற்சியும் இருந்தால்
    ,CBSC & மெட்ரிக் கில் படித்த
    எம் மாணவர்கள்
    கண்டிப்பாக
    இவர்களை விட
    சாதித்துக் காட்டுவார்கள்.

    இதே பிரித்தாலும் சூழ்ச்சிதான் ஆங்கிலேயர்கள் காலத்தில் நம்மில் திணிக்கப்பட்டது.

    நம் சொந்த நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களான துணிமணியிலிருந்து, உற்பத்தி பொருட்கள் வரை
    அனைத்தும்
    அன்னிய பொருட்களிலிருந்து தரம்
    தாழ்ந்துள்ளது என்ற
    மாய தோற்றத்தை
    நம் மனதில் விதைத்து,
    அவர்களுடைய உற்பத்தி பொருட்களை விற்கும் சந்தையாக இந்தியாவை இன்றளவும் பயன்படுத்தி வருகிறது.

    தரம் என்பது யார் தீர்மானிக்கின்றார்கள் என்பது முக்கியம்.

    இங்கு எம் மாநில மாணவர்களின் தரத்தை எம்மாநில அரசே சோதித்துக் கொள்ளட்டும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி