Twitter - ட்விட்டரில் கருத்து பதிவு எழுத்துக்களின் எண்ணிக்கை 140-லிருந்து 280-ஆக அதிகரிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 27, 2017

Twitter - ட்விட்டரில் கருத்து பதிவு எழுத்துக்களின் எண்ணிக்கை 140-லிருந்து 280-ஆக அதிகரிப்பு.

 ட்விட்டர் சமூக வலைபக்கத்தில் உறுப்பினர்கள் பதிவிடும் எழுத்துக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. உலகம் முழுவதும் புகழ்பெற்று விளங்கும் ட்விட்டர் வலைதளத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பல புதிய திட்டத்திற்கான ஆய்வுகள் சமீபத்தில்மேற்கொள்ளப்பட்டது. அதில் தற்போதைய கருத்து பதிவிடும் எழுத்துக்களின் எண்ணிக்கை உறுப்பினர்கள் பலருக்கு அதிருப்தி அளித்துள்ளது தெரிய வந்திருப்பதாக அந்நிறுவனம் தகவல் வெளியிட்டது.

நினைத்த கருத்துக்களை முழுமையாக பதிவிட முடியவில்லை என பலர் கருத்து தெரிவித்திருந்தனர். இதனையடுத்து ட்விட்டரில் பதிவிடும் கருத்துகளின் எழுத்துக்களின் எண்ணிக்கையை 280 ஆக உயர்த்த திட்டமிடப்பட்டிருக்கிறது. தற்போது ட்விட்டரில் 140 எழுத்துக்களை மட்டுமே பதிவிட முடியும். டைப் செய்து செய்தி அனுப்பும் வசதி  சோதனை அடிப்படையில்  செயல்படுத்தப்பட்டுள்ளது. பயன்பாட்டாளர்களின் வசதிக்காக பதிவிடும் எழுத்துக்களின் எண்ணிக்கை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டிவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. கட்டுப்பாட்டை தளர்த்தி சோதனை அடிப்படையில் 280 எழுத்துக்கள் வரை பதிவிடும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது ட்விட்டரின் தலைமை நிர்வாகி ஜாக் டோர்சி தனது ட்விட்டரில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.  இது சிறிய அளவிலான மாற்றமாக இருந்தாலும் பலரிடமும் வரவேற்பை பெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். இருப்பினும் ஜப்பான், சீனா, கொரிய மொழி எழுத்து வடிவத்திற்கு பழைய வரம்பே நீடிக்கும் என கூறப்பட்டு்ளது. 140 எழுத்துக்களில் அதிகமாக கருத்தை பதிவு செய்யும் வகையில், அவற்றின் வடிவங்கள் இருப்பதாக ட்விட்டர் விளக்கமளித்துள்ளது.  

1 comment:

  1. Winners pg trb coaching centre.computerscience,class starts:1.10.17.sunday time:9.30a.m place:C.S.I.boys hr.sec.school.p.s.park.erode.cell:8072087722

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி