அனைத்துப் பள்ளிகளிலும் இளஞ்செஞ்சிலுவை சங்கம்: பள்ளிக்கல்வி இயக்குநர் வலியுறுத்தல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 25, 2018

அனைத்துப் பள்ளிகளிலும் இளஞ்செஞ்சிலுவை சங்கம்: பள்ளிக்கல்வி இயக்குநர் வலியுறுத்தல்

தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் இளஞ்செஞ்சிலுவை சங்க (ஜேஆர்சி) அமைப்பு கட்டாயமாகச் செயல்பட வேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்குநர் ரெ.இளங்கோவன் வலியுறுத்தினார்.
தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையில் உள்ள நடுநிலை,உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் செயல்பட்டு வரும்"ஜுனியர் ரெட்கிராஸ்' அமைப்பின் கல்வி மாவட்ட அமைப்பாளர்கள், இணை அமைப்பாளர்களுக்கான மாநில மாநாடுசென்னை எழும்பூரில் உள்ள இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் தமிழ்நாடு மாநில கிளை வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் தமிழ்நாடு மாநில கிளை தலைவர் ஹரீஸ் எல்.மேத்தா தலைமை வகித்தார். மாநாட்டை பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ரெ.இளங்கோவன் தொடங்கி வைத்துப் பேசியது:- சமூகத்தைப் பாதுகாக்கவும், பிறருக்கு உதவும் நோக்கம்வேண்டும் என்ற கொள்கையோடும் செயல்பட்டு வருகிறது இளஞ்செஞ்சிலுவை சங்கம். மாணவர்களை நல்வழிபடுத்துவதில் இந்தச் சங்கத்தின் பணி அளப்பரியது. ஆசிரியர்கள் இதில் முக்கிய பொறுப்பேற்றுசெயல்பட வேண்டும். பள்ளிகளில் செயல்பட்டு வரும் ஜேஆர்சி அமைப்பு மாணவர்களுக்கு முறையாகப் பயிற்சி அளிக்க வேண்டும். அனைத்துப் பள்ளிகளிலும் இந்த அமைப்பை கட்டாயமாக ஏற்படுத்த வேண்டும். அதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கல்வி இணைச்செயல்பாடுகளில் மாணவர்களைச் சேர்ப்பதில் ஆசிரியர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

இதைத் தொடர்ந்து மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கான இயக்குநர் எஸ்.கண்ணப்பன் பேசுகையில், தமிழகத்தில் உள்ள அனைத்து மெட்ரிகுலேஷன் பள்ளிகளிலும் ஜே.ஆர்.சி. அமைப்பை தொடங்குவது குறித்து தொடர்புடைய கல்வி அதிகாரிகள் மற்றும் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்படும் என்றார்.இதில் இளஞ்செஞ்சிலுவை சங்க மாநில பொதுக்குழு உறுப்பினர் செ.நா.ஜனார்த்தனன் உள்பட 68 கல்வி மாவட்டங்களைச் சேர்ந்த அமைப்பாளர்கள், இணை அமைப்பாளர்கள் கலந்துகொண்டு பேசினர்.

2 comments:

  1. சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாற்றுத் திறனாளி பட்டதாரி ஆசிரியர்கள் தொடர்பு கொள்க தேனி குமார் 9791565928

    ReplyDelete
  2. தற்போது பணிநியமனம் செய்வதற்கு போதிய நிதி வசதி இல்லையாம்... காலதாமதம் ஏற்படும்....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி