ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கோட்டையை நோக்கி பேரணி: போலீசார் குண்டுகட்டாக கைது செய்ததால் பரபரப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 24, 2018

ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கோட்டையை நோக்கி பேரணி: போலீசார் குண்டுகட்டாக கைது செய்ததால் பரபரப்பு


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கோட்டையை நோக்கி பேரணியில் ஈடுபட்டபோது அவர்களை தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர்.
ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் இன்றைக்கு 4வது நாளாக சாலை மறியல் போராட்டம் நடைபெற்று வந்தது. நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 3000க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர் போராட்டம் நடைபெறும் நிலையிலும் நிறைவேற்றப்படாததால் பிரதமர் வரும் சாலையில் மறியல் செய்வோம் என்று ஜாக்டோ-ஜியோ  அமைப்பினர் நேற்று நடைபெற்ற போராட்டத்தின்போது அறிவித்திருந்தனர். இதனையடுத்து இன்றைய போராட்டம், பிரதமர் அவர்கள் விழாவில் கலந்துகொள்ளவுள்ள கலைவாணர் அரங்கம் அருகிலேயே நடைபெற்று வந்தது.

இந்த போராட்டம் போலீசாருக்கு பெரும் சிக்கலாக மாறியது. காலையில் இருந்தே பாதுகாப்பு காரணங்களுக்காக இப்பகுதிகளில் ஆட்கள் யாரும் நடமாட முடியாத அளவுக்கு போலீசார் கட்டுப்பாடுகளை விதித்திருந்தனர். ஆனாலும் அனுமதியில்லாமல் காலை 10.30 மணியில் இருந்து ஜாக்டோ ஜியோ அமைப்பினர் சாலை மறியல் போராட்டம் நடத்தி வந்தனர். இவர்களிடம் பல கட்டமாக காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியபோதும் எவ்வித பலனும் இல்லை. பிரதமர் வரும் வரையில் இந்த போராட்டம் தொடரும் என்று அவர்கள் தெரிவித்திருந்தனர். பெண்கள் அதிகளவில் இருந்ததால் காவல்துறையினர் என்ன செய்வதென்று அறியாது திகைத்தக்கொண்டிருந்தனர். இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் பேரணியாக கோட்டையை நோக்கி பேரணி செல்ல முற்பட்டனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் அனைவரையும் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். 

5 comments:

  1. வேலை இல்லாம இலட்ச கணக்கல இருக்காணுக இவன்களுக்கு ஊதிய உயர்வு , பேசாம போயி ராஜிணமா பண்ணுங்க எங்களுக்குவாது வேலை கிடைக்கும்

    ReplyDelete
  2. Thappa ninykka vendam poi tet ezuthi vanka

    ReplyDelete
  3. அடேய் கலக்கல் பாய் அறிவே கிடையாதாபா அவங்க போராடி தியாகம் காரண மாத்தான் ஊதியக் குழு மற்றும் இதர படிகள் அதனால தான் நீ இந்த வேலைக்கு வர ஆசை படுகிறாய். போய் வீட்ல பெரியவங்க கிட்ட கேட்டு பார் ஜாக் டோ ஜியோ னா என்வென்று என் கன்று ஃ
    இது சமூக நீதி போராட்டம் , டெட் வேண்டாம் என்பதும் முன்னுரிமை பட்டியல் படி பணி நியமனம் வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை களில் ஒன்று . இது போல் இருக்குமானால் ஊழல் நடந்திருகுமா முட்டாள் . பிறந்த உடனே மாப்பிள்ளை ஆகப் பார்க்காதே .....

    ReplyDelete
    Replies
    1. போட்டி தேர்வின்(தகுதி தேர்வின்) மூலம் நியமனம் செய்யும் முறையை ஏன் ஜாக்டோ ஜியோ எதிர்க்கிறது. போட்டி தேர்வு யாருடைய வாய்ப்பையும் தடுக்கவில்லையே.வெய்டேஜ் முறைதான் பழைய கல்வி திட்டத்தில் பயின்றவர்களுக்கு பாதிப்பு .பிறகு ஏன் ஜாக்டோ ஜீயோ போட்டி தேர்வை எதிர்கிறது

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி