1, 6, 9 மற்றும் பிளஸ்1 வகுப்புகளுக்கு 3டி, இணையதள லிங்க், பார்கோடுடன் 100 தலைப்பில் 1.70 கோடி புத்தகங்கள்: மே மாதம் பள்ளிகளுக்கு வழங்க முடிவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 27, 2018

1, 6, 9 மற்றும் பிளஸ்1 வகுப்புகளுக்கு 3டி, இணையதள லிங்க், பார்கோடுடன் 100 தலைப்பில் 1.70 கோடி புத்தகங்கள்: மே மாதம் பள்ளிகளுக்கு வழங்க முடிவு.

1, 6, 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு பல புதிய நவீனங்கள் அடங்கிய புதிய பாடப்புத்தகங்கள் வழங்குவதற்காக அவற்ைற அச்சிடும்  பணிகள் முடிய உள்ளன.
மே இறுதி வாரத்தில் பள்ளிகளுக்கு வழங்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் 15 ஆண்டுகளுக்கு பிறகு பாடத்திட்டம் மாற்றிஅமைக்கப்படுகிறது. வரும் கல்வி ஆண்டில் 1, 6, 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு புதிய  பாடத்திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட புத்தகங்கள் வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்து இருந்தார். பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு 100 தலைப்புகளில் 1.70 கோடி பாடநூல் அச்சிடும் பணியை தமிழ்நாடு பாடநூல் கழகம் தொடங்கியுள்ளது. பிராந்திய  மொழிகளிலும் பாடப்புத்தகம் அச்சிடப்படுகிறது. இந்த புதிய புத்தம் வழவழப்பான அட்டை, திடமான தாளில் பல நிறங்களில் படங்கள் என்று மாணவர்களை கவரும் வகையில் புத்தகம்  தயாரிக்கப்பட்டுள்ளது. முதல் பருவத்துக்கான புத்தகத்தை பொறுத்தவரையில் பாடப்புத்தகங்கள் எண்ணிக்கையில் 1 முதல் 3 வரை இருக்கும்.  

பாடப்புத்தகங்களின் உள்ளே இடம் பெறும் பாடங்களுக்கு ஏற்ற பல நிறங்களில் படங்கள் அச்சிடப்படுகிறது. அதற்கு அருகில் ‘கியூ ஆர்’ எனப்படும்  ‘கியூக் ரெஸ்பான்ஸ் கோட்’  அச்சிடப்படுகிறது. அந்த படங்கள் குறித்து கூடுதல் தகவல் வேண்டும் மாணவர்கள் அந்த கியூஆர் குறியீட்டை ஸ்கேன்  செய்து செல்போனில்பார்த்தால் அந்த படங்கள் குறித்த கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள முடியும். மேலும், முப்பரிமாணத்தில்(3டி) அந்த படத்தையும் பார்க்க முடியும்.

அதுமட்டும் இல்லாமல் சில இடங்களில் இணைய தளங்களின் லிங்க்-கும்  குறிப்பிடப்படும். அதைக் கொண்டு மாணவர்கள் அந்த இணைய தளத்துக்கு சென்று கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள முடியும். மேலும், 9, 10,  பிளஸ் 1 வகுப்பு பாடப்புத்தகங்களில், ஆங்காங்கே, மேற்படிப்பு குறித்த தகவல்களும் அச்சிட்டு வழங்கப்பட உள்ளன. இந்த பாடப்புத்தகங்கள் அச்சிடும்  பணி மே மாதம் இரண்டாவது வாரத்தில்  முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த பணி முடிந்ததும் மே இறுதி வாரத்தில் அனைத்து  பள்ளிகளுக்கும் சென்று சேரும். வழக்கம் போல பள்ளிகள் திறக்கும் நாளில் மாணவர்களுக்கு வழங்கப்படும். மற்ற வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள்  சுமார் 4.50 கோடி அச்சிடும் பணியும் நடக்கிறது.

3 comments:

  1. *🖥 கணினி அறிவியல் பாடத்திற்கு பகுதிநேர ஆசிரியர்களாக(Part Time Teachers PT) தற்போது வரை தமிழகம் முழுவதும் எத்தனை ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்? CM CELL REPLY:Date: 26/03/2018*

    *🖥 Number of Temporary Computer Part Time Instructors Working in Tamilnadu Govt Schools: CM CELL REPLY: 🗓Date: 26/03/2018*


    📚 https://kaninikkalvi.blogspot.in/2018/03/part-time-teachers-pt-number-of_27.html?m=1

    *⚠More Official Computer Science B.Ed Related News Visit only* - 🖥kaninikkalvi.blogspot.in📚

    *🚀Share This All CS B.Ed Graduates 🙏🏻*

    ReplyDelete
  2. 1) 765 கணினி பயிற்றுநர் பணியிடங்கள் TRB ANNUAL PLANNER-2018ல் இடம்பெறாததிற்கான உண்மையான காரணம்: NCERT-ன் தற்போதைய விதிகளின்படி 765 கணினி பயிற்றுநர் பணியிடங்கள் மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியர்கள் பணியிடம் என்பதால் கணினி பயிற்றுநர் பணியிடம்(முதுகலை கணினி ஆசிரியராக தரம் உயர்த்தப்பட்டு அரசாணை பெறப்பட்ட பின்னர்)TRB மூலம் நிரப்பப்படும்: CM CELL REPLY: Dt: 27/02/2018 Click Here

    https://kaninikkalvi.blogspot.in/2018/03/765-trb-pg-with-bed-765.html

    More Official News - kaninikkalvi.blogspot.in

    ReplyDelete
  3. *🖥 கணினி அறிவியல் பாடம் தமிழக அரசு பள்ளிகளில் 6வது தனி பாடமாக 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை கொண்டுவருவதற்கான கணினி ஆசிரியர்களின் கோரிக்கை மனு NCERT- ஆல் ஏற்கப்பட்டதா? தெரிந்துகொள்ள!!👇*

    *📝 NCERT REPLY: Date:26/03/2018.*


    🔖 To Create Computer Science As Sixth Subject From 6 To 10th Standard TN School Curriculum: NCERT REPLY As Date on 26/03/18...

    ♨https://kaninikkalvi.blogspot.in/2018/03/6-6-10-ncert-ncert-reply-date26032018.html?m=1

    🖥kaninikkalvi.blogspot.in📚

    *🛡Share To All CS Group🤝🏻👆🏻*

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி