ஏழை மாணவர்களுக்கான 25% இடஒதுக்கீட்டை நிரப்ப மெட்ரிக் பள்ளிகளுக்கு தமிழக அரசு ஆணை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 29, 2018

ஏழை மாணவர்களுக்கான 25% இடஒதுக்கீட்டை நிரப்ப மெட்ரிக் பள்ளிகளுக்கு தமிழக அரசு ஆணை

ஏழை மாணவர்களுக்கான 25% இடஒதுக்கீட்டை நிரப்ப மெட்ரிக் பள்ளிகளுக்கு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. எல்.கே.ஜி., முதலாம் வகுப்புகளில் 1.40 லட்சம் இடங்களை இடஒதுக்கீடுப்படி நிரப்ப வேண்டும்.
ஏப்ரல் 20 முதல் மே 18 வரை www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ், பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான வேலைகளில் தமிழக அரசு ஈடுப்பட்டது.

மத்திய அரசு கொண்டு வந்த கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009-ன்படி, பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு சுயநிதி பள்ளிகளில் 25 சதவீத இடம் ஒதுக்கப்பட வேண்டும். இதனால் தனியார் பள்ளிகளுக்கு ஏற்படும் இழப்பை, மாநில அரசே ஏற்றுக் கொண்டது. ஆனால், தமிழக பள்ளிக் கல்வித்துறையில் இந்தச் சட்டம் பெயரளவுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத இடஒதுக்கீட்டை நிரப்ப மெட்ரிக் பள்ளிகளுக்கு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் ஏறத்தாழ 9 ஆயிரம் தனியார் சுயநிதி பள்ளிகள் உள்ளன. இதில் சிறுபான்மையினர் சுயநிதி பள்ளிகளும் அடங்கும். ஏப்ரல் 20 முதல் மே 18 வரை www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். 25 சதவீத இடஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடமிருந்து தனியார் பள்ளிகள் எந்தவிதமான கல்விக் கட்டணமும் வசூலிக்கக் கூடாது. இதற்கான கல்விக்கட்டணத்தை அரசு வழங்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி