பிளஸ்-2 பொருளியல் வினாத் தாள் கசிவு? சிபிஎஸ்இ மறுப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 27, 2018

பிளஸ்-2 பொருளியல் வினாத் தாள் கசிவு? சிபிஎஸ்இ மறுப்பு

மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) பிளஸ்-2 பொதுத் தேர்வில் பொருளியல் (எகனாமிக்ஸ்) வினாத்தாள் கசிந்ததாக சமூக வலைதளங்களில் திங்கள்கிழமை தகவல்கள் பரவின.
இதனால், அந்தத் தேர்வினை எழுதிய லட்சக்கணக்கான மாணவர்கள் பெரும் குழப்பத்துக்கு ஆளாகினர்.

ஆனால், வினாத்தாள் கசிந்த விவகாரத்தை திட்டவட்டமாக மறுத்துள்ள சிபிஎஸ்இ வாரியம், இதுதொடர்பாக மாணவர்கள் அச்சமடையத் தேவையில்லை என்று விளக்கமளித்துள்ளது.
கடந்த சில நாள்களுக்கு முன்பு நடைபெற்ற கணக்குப் பதிவியல் (அக்கவுண்ட்டன்சி) தேர்விலும் வினாத் தாள் கசிந்ததாகச் சர்ச்சைகள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

சிபிஎஸ்இ பனிரெண்டாம் வகுப்பு தேர்வுகள் கடந்த 5-ஆம் தேதி தொடங்கின. ஏப்ரல் 13-ஆம் தேதி வரை அத்தேர்வுகள் நடைபெறவுள்ளன. இந்நிலையில், பொருளியில் பாடத்துக்கான தேர்வு திங்கள்கிழமை (மார்ச் 26) நடைபெற்றது. ஆனால், தேர்வு தொடங்குவதற்கு முன்னரே அதற்கான வினாத்தாள் கசிந்துவிட்டதாக வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தகவல் பரவியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனால், அந்தத் தேர்வு ரத்து செய்யப்படுமா? அல்லது மறுதேர்வு நடத்தப்படுமா? என்ற குழப்பம் மாணவர்களிடையே எழுந்தது. இதுதொடர்பாக விளக்கமளித்துள்ள சிபிஎஸ்இ வாரியம், வினாத்தாள் கசிந்ததாக பரவிய தகவல் முற்றிலும் தவறானவை எனக் கூறியுள்ளது. இந்த விவகாரம் குறித்து விரிவாக ஆய்வு நடத்தப்பட்டுள்ளதாகவும், மாணவர்கள் எவரும் அச்சமடையத் தேவையில்லை எனவும் அந்த வாரியம் விளக்கமளித்துள்ளது.

3 comments:

  1. *🖥 கணினி அறிவியல் பாடம் தமிழக அரசு பள்ளிகளில் 6வது தனி பாடமாக 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை கொண்டுவருவதற்கான கணினி ஆசிரியர்களின் கோரிக்கை மனு NCERT- ஆல் ஏற்கப்பட்டதா? தெரிந்துகொள்ள!!👇*

    *📝 NCERT REPLY: Date:26/03/2018.*


    🔖 To Create Computer Science As Sixth Subject From 6 To 10th Standard TN School Curriculum: NCERT REPLY As Date on 26/03/18...

    ♨https://kaninikkalvi.blogspot.in/2018/03/6-6-10-ncert-ncert-reply-date26032018.html?m=1

    🖥kaninikkalvi.blogspot.in📚

    *🛡Share To All CS Group🤝🏻👆🏻*

    ReplyDelete
  2. 🅱💢 பள்ளிக்கல்வி - மேல்நிலைப் பள்ளிகள் - தொழிற்கல்வி ஆசிரியர்(🖥கணினி அறிவியல்)117 தற்காலிக பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டது.01/01/2018 முதல் 31/12/2018 முடிய ஒரு வருட தொடர் நீட்டிப்பு ஆணை வெளியிடப்படுகிறது📝

    117 தற்காலிக கணிணி அறிவியல் ஆசிரியர்களின் முழுவிவரங்கள் அடங்கிய பட்டியல்📝

    117 Computer Science Teachers Post  One Year(2018) Continuation Order Released 117 Teachers Complete List With Full Details) 👉 Click Here To Download(PDF)

    🛡 https://kaninikkalvi.blogspot.in/2018/03/117-01012018-31122018-117-one-year2018.html?m=1

    🅱💢1880 கணினி பயிற்றுநர் தற்காலிக பணியிடங்களுக்கு 01.01.2018 முதல் 31.12.2018 முடிய ஓராண்டிற்கு தொடர் நீட்டிப்பு ஆணை வெளியீடு 👉 Click Here To Download(PDF)

    🛡 https://kaninikkalvi.blogspot.in/2018/03/1880-01012018-31122018.html?m=1

    ⚠More Official News 📝

    🖥kaninikkalvi.blogspot.in📚

    🚀Share To All CS Teachers Groups

    ReplyDelete
  3. 🖥 கணினி அறிவியல் பாடத்திற்கு பகுதிநேர ஆசிரியர்களாக(Part Time Teachers PT) தற்போது வரை தமிழகம் முழுவதும் எத்தனை ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்? CM CELL REPLY:Date: 26/03/2018

    🖥 Number of Temporary Computer Part Time Instructors Working in Tamilnadu Govt Schools: CM CELL REPLY: 🗓Date: 26/03/2018


    📚 https://kaninikkalvi.blogspot.in/2018/03/part-time-teachers-pt-number-of_27.html?m=1

    ⚠More Official Computer Science B.Ed Related News Visit only

    🖥kaninikkalvi.blogspot.in📚

    🚀Share This All CS B.Ed Graduates

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி