கல்வி உரிமை சட்டத்தை பின்பற்றாத 92% பள்ளிகள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 28, 2018

கல்வி உரிமை சட்டத்தை பின்பற்றாத 92% பள்ளிகள்

கல்வி கற்கும் உரிமை சட்டத்தை, நாட்டில், 8 சதவீத பள்ளிகள் மட்டுமேபின்பற்றும் தகவல் வெளியாகியுள்ளது.சமூக நல அமைப்புகளின் கூட்டமைப்பு, கல்வி கற்கும் உரிமைசட்டம்குறித்த மாநாட்டை, டில்லியில் நேற்று நடத்தியது.
இதில், 20மாநிலங்களில்இருந்து, அரசு சாரா அமைப்புகளை சேர்ந்த, 10ஆயிரம் பேர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் வெளியிடப்பட்டஆய்வு முடிவு விபரம்:நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 3 சதவீதம் மட்டுமே,கல்விக்காக செலவிடப்படுகிறது. ஆனால், 6 சதவீதம் செலவிடப்படவேண்டும் என, உலக நாடுகள் கூறுகின்றன. உலகின் நடுத்தரவருவாய் உள்ள நாடுகளில், செலவிடப்படுவதை விட, நான்குமடங்கு குறைவாக, கல்விக்கான தனி நபர் செலவினம், இந்தியாவில்உள்ளது.

பள்ளி ஆசிரியர்களில், 20 சதவீதம் பேர், முறையான பயிற்சிபெறாதோர். கல்வி மையங்களில், வளர்ச்சிக்கான கல்வியின்தேவை உள்ளது. இதற்காக, பல்வேறு சீர்திருத்த சட்டங்கள்இயற்றப்பட்டபோதும், அவற்றை அமல்படுத்துவதில், அரசுகள்அலட்சியமாக உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மாநாட்டில் பேசிய, உச்ச நீதிமன்ற நீதிபதி, மதன் பி.லோகுர்கூறியதாவது:

இந்தியாவில் உள்ள பள்ளிகளில், 8 சதவீதம் மட்டுமே,கல்வி உரிமை சட்டத்தை பின்பற்றுகின்றன. இந்த சட்டம், மிகுந்தஆலோசனைகளுக்கு பின் இயற்றப்பட்டது. ஆனால், இதைசெயல்படுத்துவதில் மந்த போக்கு காணப்படுவதால், ஒருதலைமுறை குழந்தைகள், அடிப்படை கல்வி அறிவு பெற முடியாமல்போகிறது. இந்தியாவில் கல்வியின் தரம், மிக மோசமான நிலையில்உள்ளது. காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாமல்,கல்வியின் தரத்தை உயர்த்த முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி