Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

புதிய பாடத்திட்டம்: ஆசிரியர்களுக்கு ஜூனில்பயிற்சி

தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய பாடத் திட்டம் குறித்து பள்ளி ஆசிரியர்களுக்கு ஜூன் மாதம் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
தமிழகத்தில் வரும் கல்வியாண்டு முதல் 1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் வகுப்புகள் நடைபெறவுள்ளன.

இதற்காக தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் நிறுவனம் சார்பில் புத்தகங்கள் அச்சடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் பணி முடிவடைந்ததும் தொடர்புடைய பள்ளிகளுக்கு புத்தகங்கள் நேரடியாக அனுப்பி வைக்கப்படும். இந்த நிலையில் 1, 6, 9 மற்றும் 11 -ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கு புதிய பாடத்திட்டம் தொடர்பாக பத்து நாள்கள் வரை பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறும்போது , 'புதிய பாடத் திட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதற்கேற்ப மாணவர்களுக்கு கற்பித்தல் முறையில் சிறந்த மாற்றங்களையும் ஏற்படுத்தியுள்ளோம்.

இதைத் தொடர்ந்து தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு கற்பித்தல் முறைகள் குறித்து வரும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் பயிற்சி அளிக்கத் திட்டமிட்டுள்ளோம். அப்போது முப்பரிமாண படங்கள், செல்லிடப்பேசியில் ஸ்கேன் செய்து கூடுதல் தகவல்களைப் பெறும் 'க்யு.ஆர்.' குறியீட்டு முறை போன்ற அம்சங்கள் குறித்து மாணவர்களுக்கு தெரியப்படுத்துவது எனப் பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கவுள்ளோம். இந்தப் பயிற்சி முகாம் 10 நாள்கள் நடைபெறும். பயிற்சியைப் பெறவுள்ள ஆசிரியர்கள் குறித்த விவரங்கள் மாவட்டக் கல்வி அலுவலகங்கள் மூலமாக சேகரிக்கப்பட்டு வருகின்றன. இதைத்தொடர்ந்து தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு அந்தந்த மாவட்டங்களிலேயே பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர் அவர்கள்.

13 comments

 1. உரிமையை மீட்பாம் (2013TET)

  2013 ஆம் ஆண்டு ஆசிரியர்தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்றோர்கள் கவனத்திற்கு!

  இருட்டடிப்பு செய்யபட்ட 2013 என்ற வார்த்தையை மீட்டெடுத்தது எம் கூட்டமைப்பு என்பதை அனைவரும் அறிவீர்கள்.. எங்களது கூட்டமைப்பு தொடர்ந்து பல வீண் விமர்சனங்களை கடந்து, பல தடை கற்களை தகர்த்தெரிந்து வெற்றி பயணங்களை மேற்கொண்டும் வருகிறோம். அனைத்து கட்சிகளும் எங்கள் கோரிக்கைகளை ஏற்று அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
  ஆனால் தற்போது எங்களது முயற்சிகள் வலுவிழந்து வருகின்றன.

  இதுவரை களம் காணாதவர்கள் உடனடியாக இணைவீர்...
  நீங்கள் தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் .
  நமக்கான சவக்குழி ஆழமாக தோண்டபடும் மறவாதீர்...

  2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சிபெற்றோர் கூட்டமைப்பு

  தொடர்புக்கு:
  திருமதி சண்முகபிரியா மாநில செயலாளர்

  திரு. வடிவேல் சுந்தர்
  மாநில தலைவர்
  8012776142

  திரு.இளங்கோவன்
  மாநில ஒருங்கிணைப்பாளர்
  8778229465

  திரு நாகூர் மீரா
  வடமாவட்ட ஒருங்கிணைப்பாளர்
  9791232259
  திரு.ஏகாம்பரம் மாநில பொறுப்பாளர்
  9025342468
  திரு. கார்த்திகேயன். மாநில பொருளாளர்
  8870452224
  திரு. பரமேஸ்வரன் மாநில அமைப்பாளர்
  7358841778
  திருமதி. சுகுணாதேவி கொங்குமண்டல ஒருங்கிணைப்பாளர்
  9578750010
  செல்வி.பிரவீனா
  மாநில மகளிர் து. பொறுப்பாளர்
  9500757520
  திரு. தென்னரசு மா.து.அமைப்பாளர் 9751102497
  திரு.தேவராஜன்9025840825
  திரு.குமரவேல்9843373788
  திரு. தியாகராஜன்9865885988
  திரு.ஸ்டீபன் ஆ.ராஜ் 9943200550
  திருமதி .மாலா 8489223636

  2013 ஆசிரியர்தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்றோர் கூட்டமைப்பு


  https://chat.whatsapp.com/9WhEpwXqtoPF1KHywUBdhv

  ReplyDelete
 2. Dei vadivelu sundar prapakar ilangovan meera ungga 4 perthikum intha jenmathula velai kidaikathu.velai kidaikama nadu roadla pichai tha atupa.selfishgala

  ReplyDelete
  Replies
  1. ஜீஓ 71படி இதுவரை நடந்த தேர்வின் தரவரிசைப்படி பணிநியமணம் செய்திட 2017 தேர்வர்களே ஓரணியில் திரள்வீர்...

   முத்தான மூன்று கோரிக்கை..

   நடத்திடு நடத்திடு
   தாள்1 சான்றிதழ் சரிபார்ப்பு நடத்திடு...

   வழங்கிடு வழங்கிடு
   தேர்ச்சி சான்றிதழ் வழங்கிடு...

   வெளியிடு வெளியிடு
   தரவரிசைப் பட்டியல் வெளியிடு...

   TNTET WINNER - 2017 - 2

   பணிநியமனம் நமது உரிமை...

   முதல் குழுவில் உள்ள நண்பர்கள் இரண்டாவது குழுவில் இணைய வேண்டாம்...   https://chat.whatsapp.com/2A7w7gmmoME62JGnspKuoG

   Delete
 3. 2017 porada varutha therinchu chennaila avanga poratatha ketuka ninaikurye vekama ila.thuu ithu enada polabu.2013 vadivelu sundar groupla irukura evankum job kidaikave koodathu kaduvule

  ReplyDelete
 4. Super brother no chance what great Opportunities On 2013 govt given appointment to more than 10 thousand 2013 passed candidates athula miss pannitu epo ayyo ammana yar enna seiyamudium new posting for all not only 2013 chance mudincha neengale meendum meendum chance keta chance first time kekura engaluku epodi irukkum

  ReplyDelete
 5. நான் 2013 க்காவவும் போராடிவிட்டேன் 2017 க்காவும் 26ம் தேதி போராடிவிட்டேன் எனக்கு தெரிந்ந உண்மை 2013 மற்றும் 2017 ல் சமூகஅறிவியல் பாடத்தில் மட்டும் வெயிட்டேஜ் 53க்கு குறைவாக உள்ளது மற்ற பாடங்களில் 69 க்கு மேல் வெயடே்டேஜ் இருந்தால் மட்டுமே பணி கிடைக்கும் எனக்கு வெயிட்டேஜ் குறைவுதான் நான் இரண்டு குழுக்குமே சொல்கிறேன் போய் அடுத்த தகுதித்தேர்வுக்கு படிங்க இல்லையினா போய் போராடி சமுகஅறிவில் மற்றும் வெயிட்டேஜ் அதிகம் உள்ளவர்களுக்காக போய் போராடுங்கள் ஆனால் 70 க்கு மேல் வெயிட்டேஜ் இருந்தால் கண்டிப்பாக போங்க 75% பணி கிடைக்கும் என்ற நம்பிக்கை ஆனால் வெயிட்டேஜ் குறைவானவர்கள் போய் போராட்டம் பன்னி ஜெயிலுக்கு போரது உங்களுக்கு நாளை வேலை வாய்ப்பில் பின்னடைவை ஏற்படுத்தும் நீங்கள் அடுத்த தேர்வுக்கு படிப்பதே சிறந்தது.

  ReplyDelete
  Replies
  1. 100% real news ....summa canvass pandravangala nambi yeamarutha virtual pooi padingappa

   Delete
 6. Paper 1 kku w ge evvalavu irrunthal kitakikum?

  ReplyDelete
 7. Paper 1 kku w ge evvalavu irrunthal kitakikum?

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives