Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

பத்தாம் வகுப்பு ஆங்கிலம் முதல்தாள் தரும் அதிர்ச்சிகளும் செய்திகளும்

தமிழ் முதல்தாள் தந்த அதிர்ச்சிகள் "தம்பிகளா இனி சிந்தித்து விடையளிக்கும் விதமாகத்தான் வினாத்தாள் இருக்கும், தயாரா இருந்துக்கங்கப்பா என்று சொல்ல வைத்தது"எதிர்பார்த்தது போலவே வினாத்தாள் வந்திருக்கிறது.

 கடந்த அரைமணிநேரமாக ஒவ்வொரு மாவட்டமாக, ஒவ்வொரு பள்ளியாக கேட்டாகிவிட்டது. எல்லோரும் சொல்லும் ஒரே பதில் "இந்த பாடத்திட்டம் வந்ததில் இருந்து கேட்கப்பட்ட மிக மோசமான வினாத்தாள் இதுதான்" என்னுடைய தோழர் ஒருவர் பெஸ்ட் கொஸ்டின் பேப்பர் என்று சொல்கிறாரே என்றேன்.

ஒருவிசயத்தை புரிஞ்சுக்கங்க ஒருவருடம் படித்த பாடத்தில் இருந்து பதிலளிக்க இயலாத புள்ளியை நோக்கி துரத்தும் வினாத்தாள் பெஸ்ட் அல்ல வொர்ஸ்ட் என்றார் நான் மதிக்கும் கல்வியாளர் ஒருவர்.

ஆம், வினாத்தாள் அமைப்பதில் வித்தை காட்டும் நம்மவர்கள் விடையளிக்கும் தகுதியும் திறனையும் வளர்த்திருக்கிறோமா ? கடைக்கோடி கிராமத்தில் மின் வசதிகூட இல்லாத குழந்தைகள் புரிந்து பதிலளிப்பார்களா என்று உணர்ந்து பார்த்து வினாத்தாள் அமைக்க வேண்டும்.

பல கேள்விகளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பதில்கள் தர முடியும். ஆனால் மிகச்சரியானது என்று பார்த்தால் ஒன்றுதான் தேறும்
act +
ion
ive
என்ற இரண்டு வாய்ப்புகளில் இரண்டை சேர்த்தாலும் முழுமையான வார்த்தை ஒன்று கிடைக்கும் என்றாலும் புரிதலோடு எழுதினால் ஆக்டிவ்தான் பதில். இப்படி சுழற்றி அடிக்கும் வினாக்கள் முதல் தலைமுறை கற்போரை என்ன செய்யும் என்கிற கேள்விக்கு பதில் இல்லை.

புரிந்துகொண்டால் அது குரூரமானது. உங்களுக்கெல்லாம் எதுக்குடா படிப்பு, போங்கடா போய் உங்க அப்பன் ஆத்தா வேலையை பாருங்கடா என்பதுதான் இந்த வினாத்தாள் நமக்கு சொல்லும் செய்தி.

உங்கள் புரிதலுக்காக ... ஒரு தனியார் பள்ளியில் ஆங்கில வழியில் பயிலும் மாணவர்கள் எல்லா பாடத்தையும் ஆங்கிலத்தில் பயில்வதால் அவர்களின் ஆங்கில மொழி நுகர்வு அதிகம். அவர்கள் பல ஸ்ட்ரக்சர்களை தனிச்சயாக அறிமுகம் செய்துகொள்வார்கள்.

அவர்களுக்கு இந்த கேள்வி எளிதாக இருக்கும், (அங்கும் போன் செய்திருக்கிறேன் இன்னும் தகவல் வரவில்லை) ஆனால் அரசுப்பள்ளியில் கொத்தனார், சித்தாள், விவசாயி, போன்ற எளிய மக்களின் குழந்தைகள் பயிலும் சூழலில் தமிழ் நுகர்வே குறைவு, இதில் ஆங்கில நுகர்வை எப்படி கூட்டுவது?

தமிழ் நூற்களை கொடுத்து படிக்கச் சொன்னாலே போயா யோவ் என்கிற மாணவர்களிடம் ஆங்கில செய்தித்தாட்களை எப்படி அறிமுகம் செய்வது?

இப்படி ஆங்கிலத்தை புழக்கத்தில் கொண்டுவந்ததற்கு பின்னரே சிந்தனை திறனை வளர்க்கும் கேள்விகளை கேட்பது சாத்தியம். அதைவிடுத்து நீட்டுக்கு தயார் செய்கிறேன், மாணவர் சிந்தனைத்திறனை தூண்டும் வினாத்தாட்களை வடிமைக்கிறேன் என்று கிளம்புவது சமூக நீதிக்கு எதிரானது.

ஒரு பெரும் திரள் மாணவர்களை இருட்டுக்குள் தள்ளிவிட்டு, ஒரு நூற்றாண்டுக்கு பின்னர் அவர்களை அனுப்பிவிட்டு லாடு வீட்டு கோலா புட்டுக்களுக்கு மட்டும் கல்வி என்பது சமூகத் துரோகம். இது ஆசிரியப் பேரினம் விழித்துக்கொள்ளவேண்டிய தருணம்.

மாட்டு வண்டியில் ராக்கெட் எஞ்சின்களை பொருத்துவது கேலிக்கூத்து. முதலில் எங்களுக்கு ராக்கெட் கொடுங்கள் அப்புறம் நாங்கள் செலுத்திக்கொள்கிறோம்.இந்த வினாத்தாளை எதிர்கொள்ள என்ன என்ன பணிகளை செய்ய வேண்டும்.

1. எல்லா பள்ளிகளும் ஸ்மார்ட் போர்ட் கொண்ட பள்ளிகளாக மாற வேண்டும்.

2. பாடத்தின் ஒவ்வொரு சின்ன தலைப்பிலும் மாநிலம் தழுவிய விவாதத்தை நடத்தவேண்டும். ஸ்மார்ட் போர்ட் வாயிலாக இணையத்தின் வழியே

3. மாணவர்களே சிந்தனைத்திறனை தூண்டக்கூடிய கேள்விகளை வடிமைக்க பயிற்சியளிக்க வேண்டும்.

4. ஒரே பாடத்தை ஒவ்வொரு ஆசிரியரும், ஒவ்வொரு கோணத்தில் இருந்து அணுகுவார்கள். இப்படிப்பட்ட காணொளிகளை தொகுத்து யூ டியூபில் பகிர்ந்து, அவற்றை மாணவர்கள் வகுப்பறையில் பார்க்கும் வசதியைத் தர வேண்டும்.

5. மாணவர்கள் மத்தியில்  வினாத்தாள் ஐம்பது இரண்டு கேள்விகளும் விரிவான விவாத்திற்கு உட்படுத்தப்பட்டு ஆழமான புரிதலை மாணவர்கள் அடைய வழி வகை செய்ய வேண்டும்.

6. நூலக வாசிப்பு, ஆங்கில செய்தித்தாள் வாசிப்பு, ஆங்கில நாடக அரங்கேற்றம் போன்றவை கட்டாயமாக்கப் படவேண்டும்.

7. பேச்சுத்திறனுக்கு அக மதிப்பீட்டு முறை வேண்டும். இப்படி எந்த ஆக்கபூர்வமான அடிப்படை மாற்றங்களையும் செய்யாமல் வினாத்தாள் அமைப்பை மாற்றி நீட்டுக்கு தகுதிபடுத்துகிறேன் என்பது சமூக அநீதி.

எல்லா பயலுமா நீட் எழுதப் போறான் ? புரிகிற மாதிரி சொல்ல வேண்டும் என்றால் நெல் விளைந்த வயலில் கோதுமையை அறுவடை செய்ய விரும்புகிறது இந்த வினாத்தாள் ... வர்ணம் பரவுகிறது ...

21 comments

 1. Indha article eluthuna andha vaathi mutta punnagaikku ennoda kandanangala pathivu seiyyuren,

  Enda neenga olunga class edukka vakku illana pasanga poor family nu peela vidringala, matriculation la mattum evanda velai pakkuran, convent la padichavana.?? Ellame unnaya mathiri govt school padichu 7000, 8000 nu unna vida romba kammiya ( unna means govt school la rural pasangaluku class edukura alu) vangitu avlo velai senju pass panna vaikiran, endha matriculation la smart board propera use pandranganu sollu, nan vandhu nandukuttu savuren, 90% private schools ict use pannhrathe ila, only chalk and talk. Ict use panna nerama ila, 7 periods class vechu kolluranunga, nenga vangura kasukku kooda elai pasangalukku olunga padam nadathama question kashtam ana poor family pasanga fail aiduvanganu sollui emathi velai seiyama op adikalanu pakuringa. Thu

  ReplyDelete
  Replies
  1. https://youtu.be/TJnIhs01rGo
   2013 tntetwa poratam
   26:03:2018

   Delete
  2. Dai nee than vanthu class edu da

   Delete
  3. I like ur comment but we need to respect every individual

   Delete
 2. மின்சாரம் இல்லாத கிராமம் இன்னும் தமிழகத்தில் இருக்கிறதா?

  கிராமப் புற மாணவர்கள் ஒன்றும் சலைத்தவர்கள் அல்ல...

  நன்கு புரிந்து படிக்கும் திறன் அதிகம் எங்களுக்குத் தான். ..

  ReplyDelete
 3. எது எப்படி இருந்தாலும், first midterm test il இருந்து இதை போன்ற கேள்விகளைக் கொடுத்து பயிற்சி செய்தால் மாணவர்களுக்கு எளிதாக இருக்கும். Qly, Hly, Revision தேர்வுகளில் சாதாரணமாக கேள்வி அமைத்துக் கொடுத்துவிட்டு, public தேர்வினில் இது போன்று சிந்தித்து விடை எழுதும்படி கேள்வி அமைப்பது சரி அல்ல. இனி வரும் பாடத் தேர்வுகளில் இது போன்ற கேள்வி தாள்களை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.

  ReplyDelete
 4. Smart class காலத்தின் கட்டாயம் ..
  ஆனால் சிறந்ததன்று..
  மனதில் நிற்காது..
  ஆனால் அது முதலில் பிடிக்கும்..
  அது ஒரு மாயை தான் பின் விளங்கும். .
  கரும்பலகை தான் சிறப்பு..

  ReplyDelete
 5. Questions kk teachers olunga sollikudukkanum

  ReplyDelete
 6. Question matun tough set pannuna students yoda tharam uyarathu. Teaching method change pannanum. Pothiy a paierchi irunthaal mattumay itthagaiya question nai eathir kollamudiyum. Ippadiyae ponaal village student s 12 kuda pass pannamudiyathh

  ReplyDelete
  Replies
  1. If scoring pass mark is made really easy, methodology is not going to improve.

   Delete
 7. This comment has been removed by the author.

  ReplyDelete
 8. Teaching methodology and valuation methodology also should be changed like 1970-1990's.....

  ReplyDelete
 9. Namma kastapattu enthamathiri questions ku answer pannuna than future competitive examku nalla erukkum so next year la erunthu future ninachi teach pannuga all teachers

  ReplyDelete
 10. Mr. Ubuntu can you prove with evidence , that the teachers are not teaching well. If you have any evidence publish the comment like this.

  ReplyDelete
  Replies
  1. evidence ah????

   govt school strength than evidence. poi nalla parunga, pasanga nalla kootam kootama vandhu seruranga, kooli velai pathalum makkal private schoola sekka arambichutanga, ithuku mela vera ena venum, summa privatla computer iruku, buliding irukunu sollathinga, anga irukura vathiyaruga kooda govt schoola padichavanga than,

   Delete
  2. OK sir u thought well than why students feels very tough about that question paper I think you want to say something like operation success but patient death I think so OK 😎

   Delete
 11. If a student said about question paper tough OK that's may be acceptable but if a subject teacher said about question paper setting he totally unfit to teach that subject it is a duty of teacher prepare the students for any type of the question from the text book

  ReplyDelete
 12. எல்லா வலியும் களத்தில் இருக்கிற ஆங்கில ஆசிரியருக்கு தான் தெரியும் .. .ஏழை எளிய மாணவர்கள் கிராம புர மாணவர்கள் கருத்தில் கொண்டு வினாக்கள் இருக்க வேண்டும் என தெரியவில்லையே...என்பது தான் எளிதாக
  எனது வருத்தம்...

  ReplyDelete
  Replies
  1. We are discussing something about a English question paper but most of the comments from Tamil only it's also one of the evidence where we are what we will going to do for this society

   Delete
 13. We should not blam 10 teacher only because they only teacher for 10 std of that students but from 1st std onwards that student may not well equipped by others so that in the particular class they try to prepare the students to get through this English exam if that's methodology or pattern changed students feels guilty really only one class teacher never change the English reading writing understanding conversation of the students from 1std at least from 6th std both parents and student than society also need to take care of students studies means there is a chance of improvement apart from that if we always blaming the teacher society for the poor performance of the students really most of the teachers put their efforts for the students welfare but most of the students not ready to utilize it by using Un wanted rules like teachers never punish the students if we give full freedom to teachers they definitely will do all if not we should not solve like this question paper issues

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives