CBSE அறிவிப்பு :10ம் வகுப்பு கணிதம், 12ம் வகுப்பு பொருளாதார பாடத்துக்கு மறுதேர்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 28, 2018

CBSE அறிவிப்பு :10ம் வகுப்பு கணிதம், 12ம் வகுப்பு பொருளாதார பாடத்துக்கு மறுதேர்வு

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொருளாதார பாடத்திற்கான தேர்வு மீண்டும் நடத்தப்படும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. இதேபோல் சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு கணித தேர்வும் மீண்டும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு வினாத்தாள் வெளியானதாக வந்த புகாரையடுத்து சிபிஎஸ்இ இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. மறுதேர்வு நடத்தப்படும் தேதி ஒருவாரத்திற்குள் அறிவிக்கப்படும் என சிபிஎஸ்இ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிபிஎஸ்சி பொதுத்தேர்வுகள் நாடு முழுவதும் மார்ச் 5-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஒருசில பாடங்களுக்கான வினாத்தாள்கள் இணையதளங்களில் வெளியானதாக குற்றச்சாட்டு எழும்பியது. தலைநகர் டெல்லியில் வாட்ஸ்அப் மூலம் கேள்வித்தாள் பரவியதாகவும் கூறப்பட்டது. இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல 10ம் வகுப்பு கணித பாட வினாத்தாளும் வட மாநிலங்களில்  வெளியானதாக கூறப்பட்டது. 

இது தொடர்பாக புகார் வந்துள்ளதாகவும், விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கூறியிருந்தார். ஆனால், சிபிஎஸ்இ கல்வி வாரியம் அதை மறுத்து வந்தது. தேர்வினை சீர்குலைக்க சில சமூக விரோதிகள் முயற்சி செய்கின்றனர், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தது. இந்நிலையில்,  12ம் வகுப்பு பொருளாதார தேர்வு மற்றும் 10ம் வகுப்பு கணித தேர்வு மீண்டும் நடைபெறும் என்று சிபிஎஸ்இ கல்வி வாரியம் அறிவித்துள்ளது. தேர்வு நடைபெறும் நாள் ஒருவாரத்திற்குள் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது. 

1 comment:

  1. question out pannavangala vittuttu ipdi stnts kashta paduthurathu entha vithathla sari

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி