தொடக்கப்பள்ளி ஆசிரியர்களைப் பதறவைத்த தமிழக அரசின் சுற்றறிக்கை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 13, 2018

தொடக்கப்பள்ளி ஆசிரியர்களைப் பதறவைத்த தமிழக அரசின் சுற்றறிக்கை!

தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு, தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வரும்போது, சொந்தக் காரணங்களுக்காக 3 ஆண்டுகளுக்கு அந்தப் பதவி உயர்வை தற்காலிகமாக நிறுத்தக் கோரலாம் என்ற சலுகை இருக்கிறது. அந்த 3 ஆண்டுகள் கழித்து பதவி உயர்வு தராமல், 4-ம் ஆண்டில் பதவி உயர்வு தரும் நிலை தற்போது உள்ளது என்று பதவி உயர்வுக்காகத் தகுதி பெற்ற ஆசிரியர்கள் புலம்புகிறார்கள்.


இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநிலத் துணைச் செயலாளர் நா.சண்முகநாதன், "தமிழகத்தில் தொடக்கப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாகப் பணிபுரிவோருக்கு, அந்தந்த ஒன்றியத்தில் உள்ள காலி பணியிடங்களின் அடிப்படையில் முன்னுரிமை கொடுத்து தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கப்படும். இது வழக்கமாக நடந்துவரும் நடைமுறை. பொதுவாக, ஒவ்வொரு ஒன்றியத்திலும் ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பணியிடம் வரும். சில ஆண்டுகள் வராது. இதற்காக இடைநிலை ஆசிரியர்கள் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்க வேண்டும். பதவி உயர்வுக்கான அறிவிப்புகள் வரும்போது, தங்களது உடல்நிலை, குடும்ப சூழ்நிலை காரணமாகச் சம்பந்தப்பட்ட, தகுதியுள்ள ஆசிரியர்கள், தங்களுக்கான பதவி உயர்வை தற்காலிகமாக வேண்டாம் என்று கூறலாம். இதனால் மூன்று ஆண்டுகளுக்கு அவர்களுக்கு பதவி உயர்வு நிறுத்தி வைக்கப்படும். அதேசமயம், ஒவ்வோர் ஆண்டு தயாரிக்கப்படும் முன்னுரிமைப் பட்டியலில் இவர்கள் பெயர் முதலாவதாக இருக்கும். அவர்களது பெயருக்கு அருகிலேயே மூன்று ஆண்டுகள் பதவி உயர்வு துறப்பு என எழுதி வைத்திருப்பார்கள். பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தும்போது, பதவி உயர்வு வேண்டாம் என்பவர்கள். கலந்தாய்வு நடைபெறும் இடத்திற்குச் சென்று 3 ஆண்டுகள் பதவி உயர்வு துறப்பு செய்வதாக எழுதித் தர வேண்டும்.
2015-16 ம் கல்வியாண்டுக்கான தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு கடந்த 2015 மே மாதம் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், மாநிலம் முழுவதும் காலதாமதமாக 17.8.2015-ம் தேதி நடைபெற்றது. அப்போது சிலர் தங்களது சூழ்நிலை காரணமாகப் பதவி உயர்வை வழக்கத்தின்படி தற்காலிகமாக 3 ஆண்டுகளுக்கு வேண்டாம் என எழுதிக் கொடுத்துள்ளார்கள். எழுதிக் கொடுத்த 2015-16, 2016-17, 2017-18 ஆகிய மூன்று கல்வியாண்டு இந்த ஏப்ரல் மாதத்துடன் முடிவடைகிறது. இந்நிலையில், 17.8.2015 தேதியன்று 3 ஆண்டுகளுக்கு பதவி உயர்வு துறப்பு செய்தவர்களுக்கு வரும் மே மாதம் நடைபெறும் 2018-19 கல்வியாண்டுக்கான கலந்தாய்வில் பதவி உயர்வு தர வேண்டும். ஆனால், இவர்கள் 2019-20-ம் கல்வியாண்டு பதவி உயர்வுக்குதான் அழைக்கப்படுவார்கள் என்று சுற்றறிக்கை தற்போது வந்துள்ளது. அரசாங்கத்தின் உத்தரவு 3 ஆண்டுகள் பதவி உயர்வு துறப்பு என்று இருந்தாலும், 4 கல்வியாண்டுகள் கழித்தே பதவி உயர்வு வழங்கப்படுவது ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் பதவி உயர்வு பட்டியல் ஜனவரி 1-ம் தேதி தயாரிக்கப்படும். எனவேதான் ஆசிரியர்கள் 3 ஆண்டு பதவி உயர்வு துறப்பு என்று எழுதிக் கொடுத்தாலும் 4 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியுள்ளது. 17.8.15 அன்று நடைபெற்ற கலந்தாய்வில் 3 ஆண்டுகள் பதவி உயர்வு வேண்டாம் என்று எழுதிக் கொடுத்தவர்கள் 17.8.2018-க்குப் பின் வரும் தலைமை ஆசிரியர் பணியிடத்தில் நியமிக்க தொடக்கக் கல்வி இயக்குநர் நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும் மே மாதம் நடைபெறும் கலந்தாய்விலிருந்து இதை நடைமுறைப்படுத்தி மாநிலம் முழுவதும் உள்ள தொடக்கப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கையைத் தொடக்கக் கல்வி இயக்குநர் நிறைவேற்ற வேண்டும் என்று ஆசிரியர்கள் எதிர்பார்க்கிறார்கள்" என்றார்.

6 comments:

  1. 2017 ஆசிரியர் தகுதித் தேர்வர்கள் கவனத்திற்கு...

    தாள் -2 பட்டதாரி ஆசிரியர்களுக்கு தேர்ச்சி சான்றிதழ், நோட்டிபிகேசன், பணிநியமனம் நடைபொறாததை..

    தாள் 1க்கு சான்றிதழ் சரிபார்ப்பு தேர்ச்சி சான்றிதழ், நோட்டிபிகேசன், பணிநியமனம் நடைபொறாததை உடனடியாக வெளியிட வலியுறுத்தி வரும் ஏப்ரல் 23ம் தேதி திங்கள்கிழமை சென்னை டிஆர்பி - பள்ளிக்கல்வி அலுவலகம் செல்ல இருக்கிறோம்..

    உங்களுடைய வருகையை உறுதிபடுத்துங்கள்.

    புருசோத்தமன் விழுப்புரம் - 9976251870

    சக்திவேல்நாமக்கல் - 98427 60167

    ராஜலிங்கம் புளியங்குடி - 86789 13626..

    ReplyDelete
  2. போர்வை,,,, தலையணை,,, பாய் அனைத்தும் எடுத்து வர வேண்டும் என்று டக்லஸ் ராஜலிங்கம் குரூபில் சொல்லியிருக்கிறார்..... ஏன்டா அற மெண்டல்...... trb க்கு எதுக்குடா இதெல்லாம்...... போய் நிர்வாண போராட்டம் பண்றயாமே...... பண்ணு டக்லஸ்..... நேரடி ஒளிபரப்பு பண்ணவும

    ReplyDelete
    Replies
    1. 2017 தேர்வர்களின் போராட்டங்களை கொச்சை படுத்தி பேசும் நீர் ஆசிரியர் தானா

      Delete
  3. போராட்டம் பண்ணினாள் தானே.... காமெடி பண்ணும் போது ரசிக்க தான் செய்ய வேண்டும்.... டேய் கூஜா.... உன் போராட்டத்தை பற்றி அனைவருக்குமே தெரியும்....

    ReplyDelete
  4. முதலில் ஆசிரியர் தேர்வில் தொடர்புடைய நபர்களை அழைத்து போராட்டம் செய்யுங்கள்.... கல்லூரி மாணவர்களை அழைத்து கொண்டு போய் பில்டப் குடுக்கும் நீங்களெல்லாம் போராட்டம் பற்றி பேச தகுதியில்லாத ஆட்கள்......

    ReplyDelete
  5. தொடக்கப்பள்ளி ஆசிரியர்களைப் பதறவைத்த தமிழக அரசின் சுற்றறிக்கை!

    அரசாங்கத்தின் உத்தரவு 3 ஆண்டுகள் பதவி உயர்வு துறப்பு என்று இருந்தாலும், 4 கல்வியாண்டுகள் கழித்து 5 ஆம் ஆண்டில்தான் பதவி உயர்வு வழங்கப்படுவது ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
    வரும் மே மாதம் நடைபெறும் கலந்தாய்விலிருந்து 3 கல்வியாண்டுகள் கழித்து 4 ஆம் ஆண்டில் பதவி உயர்வு வழங்கவும், இதை நடைமுறைப்படுத்தி மாநிலம் முழுவதும் உள்ள தொடக்கப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கையைத் தொடக்கக் கல்வி இயக்குநர் நிறைவேற்ற வேண்டும் என்றும் ஆசிரியர்கள் எதிர்பார்க்கிறார்கள்".

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி